மாதம்பட்டி ரங்கராஜனுக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி... சந்தோஷத்தில் ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பதிவு
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜன் தனக்கு எதிராக ஜாய் கிரிஸில்டா அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருக்கிறது. இந்த உத்தரவு வந்ததும் ஜாய் கிரிஸில்டா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியாக போஸ்ட் போட்டு இருக்கிறார்.
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த புகார் பெரிய அளவில் பேசப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அவர் மீது புகார் கொடுத்து இருந்தார். அதை தொடர்ந்து சோசியல் மீடியாக்களிலும் மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி தொடர்ச்சியாக பேட்டி கொடுத்திருந்தார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜன் பற்றி பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதோடு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவிற்க்கு தடை விதிக்க கோரியும் சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்களை நீக்க கோரியும் மாதம்பட்டி ரங்கராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என் செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜாய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து வாழ்வதாக சொல்லி ரங்கராஜ் ஏமாற்றி விட்டதாக சொல்லி இருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜனுக்கு எதிராக கொடுத்த புகாரை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை அனுப்பி வைத்து விட்டனர், ஜாய் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் 8:00 மணி நேரமாக காவல் நிலையத்தில் உட்கார வைத்தனர் என்று ஜாய் தரப்பு தெரிவித்து இருந்தார்.
அதோடு ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மகளிர் ஆணையம் உத்திரவிடப்பட்டும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜாய் தரப்பில் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாய்க்கு பிறந்த குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர்.

அதோடு டிஎன்ஏ பரிசோதனையில் மாதம்பட்டி ரங்கராஜன் தான் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் மாதம்பட்டி ரங்கராஜன் ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அவருடைய நற்பெயரை பாதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் மோசமான வீடியோக்களை பரப்பி ஜாய் கிரிஸில்டா பணமாக்கி வருகிறார், அத்தகைய யூடியூப் சேனல்கள் தங்களைப் பற்றி அவதூறான வீடியோக்களை தடை விதிக்க வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இரண்டு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மாதம்பட்டி ரங்கராஜன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார். அந்த நோட்டீசை ஜாய் கிரிஸில்டா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து தனக்கு நீதி கிடைத்தது என்று அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது போல எமோஜி பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications