Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊர் நாட்டாமைக்காரர் மகன் நான்.. ஆனால் கலெக்டர் சொன்ன வார்த்தை இருக்கே! கண் கலங்கிய மதுரை முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை முத்து தன்னுடைய தந்தையின் நினைவு நாளில் அவர் பற்றி பல நினைவுகளை சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை ஊர் நாட்டாமையாக இருந்தவர். ஆனால் அவருக்கு நாள் காமெடி நடிகராக மாறியது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஆனால் மதுரை கலெக்டர் ஒருமுறை தந்தையிடம் சொன்ன வார்த்தையால் தந்தையின் மனம் மாறியது என்று மதுரை முத்து உருக்கமாக பேசியிருக்கிறார்.


அதில் மதுரை முத்து பேசுகையில் பிரிட்டிஷ்காரங்க காலத்தில் கிராமங்களை நிர்வகிக்க முன்சீஃப், கர்ணன் நியமிச்சவங்களில் மதுரை முத்துவின் தாத்தாவை தொடர்ந்து அவருடைய தந்தை வேலை பார்த்தாராம். அந்த காலகட்டத்தில் அந்த பணி நாட்டாமை பதவி போன்று தான் இருந்திருக்கிறது. மதுரை முத்துவின் சொந்த ஊரான அரசம்பட்டி மட்டுமல்லாமல் அதை சுற்றி இருக்கிற 12 கிராமங்களுக்கும் மதுரை முத்துவின் அப்பா பேச்சை தட்ட மாட்டார்களாம்.

madurai muthu about his dad memories

அந்த காலத்திலேயே கொஞ்சம் படித்தவர் மற்றும் ஆளுமை திறன் மிக்கவராக இருந்ததால் தன்னுடைய தந்தை ஊரை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் என்று கூறியிருக்கிறார். அதோடு தன்னுடைய ஊரில் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் அப்பாவிடம் தான் எல்லாரும் நியாயம் கேட்க வருவார்கள். அதிலும் அடுத்தவன் காட்டில் ஆட்டை மேய விட்டது, கடலையை களவாடியது போன்ற பஞ்சாயத்துக்கள் எல்லாம் வரும். அதற்கெல்லாம் அப்பா தீர்ப்பு சொன்னாலும் கணவன் மனைவி பிரச்சனைக்கு மட்டும் அப்பா எப்போதுமே தீர்ப்பு சொல்லவே மாட்டார். அப்படியே யாராவது இவரிடம் பஞ்சாயத்து கொண்டு வந்தால் நாளைக்கு வாங்க என்று சொல்லிவிட்டு ஊருக்கு போய் விடுவார். பிறகு இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் அப்பா ஊருக்கு வருவார். அதற்குள் கணவன் மனைவி சண்டை சமாதானமாக மாறிவிடும் என்று சிரித்தபடியே மதுரை முத்து கூறி இருக்கிறார்.

madurai muthu about his dad memories

அதுபோல நான் காமெடியனாக மாறியது அப்பாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை. என்னை ஒரு வாத்தியாராகவோ அல்லது விஏஓ வேலைக்கு தான் போகணும்னு அப்பா ஆசைப்பட்டார். அதனாலயே கூத்தாடி வேலைக்கு போயிட்டியே என்று என்னை திட்டிக்கிட்டே இருப்பார். ஆனால் ஒரு முறை கடைசியா ஊர் பிரச்சனைக்காக மதுரை கலெக்டர் ஆபீஸ்க்கு அப்பாவோடு போயிருந்த போது நீங்க மதுரை முத்து அப்பாவா என்று தான் எங்க அப்பாவிடம் கலெக்டர் கேட்டார். அதோடு உங்க பையன் நிகழ்ச்சி எல்லாம் விடாமல் பார்ப்பேன் என்று சொன்னதும் தான் அப்பாவுக்கு ஏதோ உருப்படியா நானும் வாழுறேன்னு நம்ப தொடங்கினார். அதுபோல எங்க அப்பாவுக்கு எம்ஜிஆர் பிடிக்காது. அதற்கு காரணம் அவர் ஆட்சிக்காலத்தில்தான் கிராம அதிகாரி பதவிகளுக்கு பதிலாக விஏஓ பதவி கொண்டு வந்தது. அதனால் எம்ஜிஆரின் போட்டோவை கதவில் ஒட்டி வைத்திருந்தால் கூட அதை கிழித்து போட சொல்லிவிடுவார்.


அதுபோல அப்பா இரண்டே இரண்டு படம்தான் பார்த்திருக்கிறார். அதில் கரகாட்டக்காரன் மற்றும் நாட்டாமை திரைப்படம் மட்டும்தான் அப்பா பார்த்தது. அதோடு எங்க அப்பா பெரிசா சொத்து சேர்த்து வைக்கலனாலும் நல்லா படிக்க வச்சிட்டாங்க இப்போ நான் பேர், புகழ், பணம்னு இருக்கிறதுக்கு காரணம் என்னுடைய திறமை மட்டும் அல்ல என்னுடைய அப்பா அம்மா செஞ்ச புண்ணியம் தான் என்று எமோஷனலாக மதுரை முத்து பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+