வயதான நடிகரை திருமணம் செய்தால் என்ன தப்பு.. படுக்கையறை விமர்சனத்திற்கு நடிகை திவ்யா ஸ்ரீதர் பதிலடி
சென்னை: மலையாள தொலைக்காட்சித் தொடரான 'பத்தராமட்டு' மூலம் பிரபலமான நடிகை திவ்யா ஸ்ரீதர், தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கிரிஸ் வேணுகோபால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட திவ்யா ஸ்ரீதர், தனது முடிவில் உறுதியாக இருப்பதாக பதிலடி கொடுத்துள்ளார்.
திவ்யாவுக்கு 38 வயது. கிரிஸ் வேணுகோபாலுக்கு 49 வயதாகும். இருப்பினும் அவர் வயதில் மிகவும் மூத்தவர் போல காட்சியளிப்பார். எனவே தாத்தா வயதிலுள்ளவரை திவ்யா திருமணம் செய்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்து கொட்டி வருகிறார்கள்.

திவ்யா ஸ்ரீதர் மற்றும் கிரிஸ் வேணுகோபால் இருவரும் 'பத்தராமட்டு' தொடரில் இணைந்து நடித்த போது காதலித்து, தீபாவளிக்கு முன்பு குருவாயூர் கோயிலில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர்.
இந்த போட்டோ வெளியானது முதலே, திவ்யா ஸ்ரீதர் சொத்துக்காக திருமணம் செய்ததாகவும், படுக்கை அறை விஷயத்தில் திவ்யா ஸ்ரீதர் எந்த எதிர்பார்ப்பையும் போக்க முடியாது என்றும் கூட சகட்டு மேனிக்கு கமெண்ட்கள் போடுகிறார்கள். இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த திவ்யா ஸ்ரீதர், "என் வாழ்க்கையை நானே தேர்ந்தெடுக்கிறேன். என் முடிவுகளை நானே எடுக்கிறேன். மற்றவர்களின் கருத்துக்கள் என்னை பாதிக்காது" என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தைகளின் ஒப்புதலுடன் இந்த திருமணத்தை செய்துகொண்டதாகவும், தற்போது அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கிரிஸ் தயங்கி தயங்கி தான் தன் காதலை வெளிப்படுத்தினார். முதலில் அவருடைய உணர்வுகளின் ஆழத்தை உணரவில்லை. ஆனால், பின்னர் அவர் என்னை மணக்க விரும்புவது தெளிவாக புரிந்தது. இரண்டாவது திருமணம் என்பதால், குழந்தைகளின் ஒப்புதல் பெறுவது முக்கியமாக இருந்தது. என் மகள் எனது முடிவை ஆதரித்தார். இதையடுத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இன்று, கிரிஸ் எங்கள் குழந்தைகளுக்கு ஒரு அருமையான தந்தையாக இருக்கிறார் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
"ஒரு நடிகை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளக் கூடாதா? வயது வித்தியாசம் காதலைத் தடுத்து நிறுத்த முடியுமா? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?" என்று திவ்யா ஸ்ரீதர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திவ்யா ஸ்ரீதரின் இந்த பதில், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் திவ்யா ஸ்ரீதரை ஆதரித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், சிலர் இன்னும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications