மணிமேகலை பயங்கரமாக சொன்ன குற்றச்சாட்டு.. பிரியங்கா வெளியிட்ட பதிவு.. இதுதான் முடிவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்திருக்கிறார். அதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக மணிமேகலை கூறியிருக்கிறார். ஆனால் பிரியங்கா இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் instagram ஸ்டோரி ஒன்று பகிர்ந்து இருக்கிறார். இது அவருடைய ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
நேற்று இரவு மணிமேகலை திடீரென்று தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகு போவதாக அறிவித்திருந்தார். அதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் குக்காக வந்த ஒரு தொகுப்பாளர் தன்னுடைய வேலையை செய்ய விடாமல் தடுப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் மணிமேகலை பெயரை குறிப்பிடாமல் சொன்னது பிரியங்காவை தான் என்பது எல்லோருக்குமே தெரியும்.

இத்தனை வருடங்களாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மணிமேகலை தனக்கு சுய கௌரவம் முக்கியம் என்று அதே விஜய் டிவியில் சீனியர் தொகுப்பாளரான பிரியங்கா மீது பயங்கரமாக குற்றச்சாட்டுகள் வைத்திருக்கிறார். ஆனால் இதை மறுத்து பிரியங்காவோ அல்லது சேனல் தரப்பினரோ எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
காரணம் பிரியங்கா செய்யும் செயல்கள் தனக்கு பிடிக்கவில்லை தன்னை இன்சல்ட் செய்யும் வகையில் நடந்து கொள்கிறார் என்று தான் சேனல் தரப்பினரிடமும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழுவினரிடமும் நேரடியாக சொல்லியும் அவர்கள் ஆக்சன் நடக்க எடுக்கவில்லை என்று மணிமேகலை கூறி இருக்கிறார். இதனால் பொறுப்பில் இருக்கும் விஜய் டிவி மற்றும் குக் வித் கோமாளி குழுவினர்கள் இதற்கு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
ஆனால் மணிமேகலை பதிவு வெளியிடுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பிரியங்கா தான் வெக்கேஷன் டூர் போவதாக விமானத்தில் இருந்து ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே குக் வித் கோமாளி சூட்டில் நடந்து கொண்டிருக்கும்போது மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலே வெளிவந்து இருக்கிறார். நிகழ்ச்சியில் மணிமேகலை பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்க சொன்னதால் தான் அப்படி செய்ய மாட்டேன் என்று வந்துவிட்டதாக மணிமேகலை கூறி இருக்கிறார்.
ஆனால் இது பற்றி பிரியங்கா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பதால் அவர் மீதுதான் உண்மையில் தப்பு இருக்கிறதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே நேற்று மணிமேகலை போஸ்ட் போட்ட சில நிமிடத்திற்குள் பிரியங்கா தேஷ் பாண்டேவை அதிகமான ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் பிரியங்கா ஜாலியாக பேசுவது இவருக்கு பிடிக்கவில்லை போல அதனால் தான் மணிமேகலை பிரியங்கா மீது குற்றச்சாட்டு வைக்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் மணிமேகலை வேற சேனலுக்கு போகப் போகிறார் அதற்காக இது இத்தனை நாட்களாக பணியாற்றிய சொந்த சேனலை குறை சொல்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வரும் ரசிகர்களுக்கு பிரியங்கா மணிமேகலையிடம் மட்டுமல்லாமல் எல்லா போட்டியாளர்களிடமும் நடந்து கொள்ளும் விதம் தெரிந்திருக்கும்.
ஏற்கனவே இந்த சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட நாஞ்சில் விஜயன் உள்ளே இருக்கும் சில விஜய் டிவி பிரபலங்கள் அவர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அடுத்தவர்களை மட்டம் தட்டுகிறார்கள். எங்களுக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை அதனால் தான் நான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தேன் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலையில் பிரியங்கா இதுவரைக்கும் எந்த விளக்கமும் கொடுக்காமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் வெளிநாடு சுற்றுலா செல்வதாக மட்டும் அறிவித்திருக்கிறார். இதனால் இந்த பிரச்சனைகளுக்கு இவர் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை என்று சொல்கிறாரா? அல்லது இந்த பிரச்சனை நடந்தது எனக்கு தெரியாது என்று சொல்லப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
மணிமேகலை, பிரியங்கா தேஷ் பாண்டே பற்றி சொன்ன குற்றச்சாட்டு சரி என்று நீங்க நினைக்கிறீங்களா? அல்லது தவறு என்று நினைக்கிறீர்களா? உங்க கருத்து என்ன உரக்க சொல்லுங்க பாஸ்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications