Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனோஜ் மனைவி கழட்டி தந்த தங்க நகைகள்.. கடைசி நிமிடத்தில் மனோஜ்ஜின் பக்கத்தில் இருந்தது இவரா?: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் திறமையால் தன்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையால், தயாரிப்பாளர்களை மட்டுமே அணுகி வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தார். சிவப்பு ரோஜாக்கள் 2 படத்தை 5 வருடங்களுக்கு முன்பு சிம்புவை வைத்து எடுத்திருந்தால், நிச்சயம் அவர் மனோஜ் பெற்றிருப்பார் " என்று பிரபல டைரக்டர் சுசீந்திரன் கூறியிருக்கிறார்.. அத்துடன் மனோஜ் குறித்த பல்வேறு நினைவுகளையும் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு, SS Buzz என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் விகே சுந்தர், "முதன்முதலில் மனோஜ்,, மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்குவதால், மறைமுகமாக பாரதிராஜாவும் ஒரு பெரிய தொகையை அதில் முதலீடு செய்தார்.. படமும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.. ஆனால், ரிலீஸ் நேரத்தில் நிதி சிக்கல் வந்துவிட்டது.

Television manoj bharathiraja manoj

தங்க நகைகள்

அதனால், சுசீந்திரனும், மனோஜூம், அவரது அம்மாவை பார்த்து உதவி கேட்டார்கள்.. உடனே மனோஜ்ஜின் அம்மா, தான் கழுத்தில் அணிந்திருந்த நகை உட்பட, வீட்டில் சேர்த்து வைத்திருந்த நகைகளையும் தந்தார். அந்த பணத்தை அடமானம் வைத்து, படம் ரிலீஸ் செய்யப்பட்டது.. தங்கள் மகன் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக தாய், தகப்பன் இருவருமே உதவி செய்திருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், Newstamil 24X7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சுசீந்திரன் மனோஜ் பற்றின பல்வேறு உருக்கமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறர்.. "மனோஜ்ஜை பொறுத்தவரை யாரிடமும் காயப்படாத மனிதர் கிடையாது.. பலரால் மறைமுகமாக காயப்படுத்தப்பட்டுள்ளார்.

அவமானப்பட்ட மனோஜ்

ஒரு இயக்குனருக்கான எல்லா அவமானத்தையும், போராட்டத்தையும் சந்தித்திருக்கிறார்.. அந்த வலிகள்தான், சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தந்து கொண்டிருந்தது..

ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் மனோஜ் கதை சொல்ல சென்றிருக்கிறார்.. கதையை கேட்ட அந்த தயாரிப்பாளர், "கதை மிகவும் அருமையாக உள்ளது, கண்டிப்பாக படம் தயாரிக்கலாம்" என்று நம்பிக்கை தந்துள்ளார்.. பலநாள் இந்த வாய்ப்புக்காகவே காத்திருந்த மனோஜ்ஜூக்கு, தயாரிப்பாளர் சொன்னது உச்சக்கட்ட மகிழ்ச்சியை தந்துள்ளது.

அந்த தயாரிப்பாளர் அலுவலகத்திலிருந்து கிளம்பி வெளியே வந்ததுமே, தன்னுடைய உதவியாளரை அழைத்த அந்த தயாரிப்பாளர், "மனோஜ் மறுபடியும் வந்தால் உள்ளே விட வேண்டாம்" என்று சொன்னாராம். இதை என்னிடம் மனோஜ் சொல்லும்போதே, கண்ணீர் மல்க சொன்னார்..

குடைச்சல் கேள்வி - அகச்சிக்கல்

அதேபோல, வீட்டை விட்டு வெளியே வந்தாலே, "அடுத்து என்ன படம் பண்றீங்க?" என்ற கேள்விகள்தான் அவரை துளைத்தெடுத்தது.. நிறைய நடிகர்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி போவதற்கான காரணமும் இதுதான்..

எந்த படமும் கைவசம் இல்லாததால், இதுபோன்ற நடிகர்களால் பொதுமக்களை எதிர்கொள்ள முடியாது.. எந்தவொரு நிகழ்ச்சிக்கும் போக முடியாது.. இதுதான் நடிகர்களின் மிகப்பெரிய அகச்சிக்கல்.. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லாததால்தான், நிறைய நிகழ்ச்சிகளுக்கு செல்வதைகூட மனோஜ் தவிர்த்துவிட்டார்..

சூர்யா, கார்த்திக், விஜய்

பிறகு மீண்டும் மீண்டும் தன்னை டைரக்டராக நிரூபிக்க முயற்சித்து கொண்டேயிருந்தார்.. அந்த அளவுக்கு சினிமாவை அவருக்கு பிடித்திருந்தது.. அதற்காக சூர்யா, கார்த்திக்கிடம் எல்லாம் வாய்ப்பு கேட்டு சொல்லவில்லை.. இவர்கள் எல்லாருமே குழந்தையிலிருந்து பழகுபவர்கள், ஒரே தெருவில் வசிப்பவர்கள்..

ஆனால், அவரவர்கள், தங்களது இடத்தை நோக்கி நகர்ந்தும் வெற்றி பெற்று கொண்டிருக்கும்போது, அவர்களுடன் சேர்ந்து நாமும் ஜெயிக்க வேண்டும் என்றுதான் மனோஜ் நினைத்தாரே தவிர, அவர்களிடமே சென்று சான்ஸ் கேட்க வேண்டும் என்று நினைத்ததில்லை..

தன் திறமையால் தன்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையால், தயாரிப்பாளர்களை மட்டுமே அணுகி வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தார். சிவப்பு ரோஜாக்கள் 2 படத்தை 5 வருடங்களுக்கு முன்பு சிம்புவை வைத்து எடுத்திருந்தால், நிச்சயம் அவர் மனோஜ் பெற்றிருப்பார்.

மனோஜின் ஒரே நட்பு

அதேபோல, வாரம் ஒரு முறை சந்தித்து கொள்ளும் அளவுக்கோ, மனசு விட்டு பேசக்கூடிய அளவுக்கோ மனோஜூக்கு நண்பர்கள் யாருமில்லை.. எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரே நட்பு, அவரது மனைவி மட்டும்தான்..

பிறகு கவின் என்ற உதவியாளர், மனோஜூடன் 10 வருடமாக இருக்கிறார்.. குருபக்தி நிறைந்த உதவியாளர்.. மனோஜ் இறந்த நொடியில், பக்கத்தில் இருந்தவரும் இந்த நபர்தான்.. மனோஜ்ஜை அதிகமாக நேசித்த உதவியாளர் கவின்.. இவர்தான் அந்த குடும்பத்துக்கு விசுவாசமான நபர்..

தைரியமும், திடமும் தரணும்

என்னால் மனோஜ் மனைவியை நேருக்கு நேர் சந்திக்கும் திராணி எனக்கில்லை.. அந்த அளவுக்கு அவங்களை பற்றிதான் என்னிடம் மனோஜ் சொல்லி கொண்டே இருப்பார்.. கணவரின் இழப்பிலிருந்து மீண்டு வருவது மிகப்பெரியகஷ்டம். தன்னுடைய மகள்களிடமும் நண்பர் போலவேதான் பழகினார்.. அந்த குழந்தைகளும் எப்படி மீண்டு வந்து, இயல்பு வாழ்க்கையை எதிர்கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. இறைவன்தான் அவர்களுக்கு தைரியத்தையும், திடத்தையும் தரணும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+