மாதம்பட்டி ரங்கராஜன் என்கிட்ட நேரடியா இன்று பேசினாரு! விசாரணையில் நடந்தது இதுதான்! ஜாய் கிறிஸ்டில்லா பேட்டி
சென்னை: தமிழ் திரையுலகில் சமையல் மற்றும் சினிமா மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் நடுவராகப் புகழ் பெற்ற இவர், தற்போது தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்துள்ளச் சிக்கல்களால் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறார். தன் முதல் மனைவி ஸ்ருதி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக எழுந்த புகார், தற்போது மகளிர் ஆணையத்தின் விசாரணை வரை சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்
கோயம்புத்தூரைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், ஆரம்பத்தில் ஒருசில படங்களில் நடித்தாலும், சமையல் தொழிலில் தனது தனி முத்திரையைப் பதித்தார். இவரது சமையல், பெரிய நிகழ்ச்சிகள் முதல் அரசியல் கூட்டங்கள் வரை அனைத்திலும் இடம்பிடித்தது. சமையல் துறையில் உச்சம் தொட்ட இவர், விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்டு, தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
ஜெய் கிறிஸ்டில்லா அதிரடி குற்றச்சாட்டு
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லா சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்திருந்தார். "தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் மாதம்பட்டி ரங்கராஜ்தான், ஆனால் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்" என்று ஜாய் குற்றம் சாட்டினார். மேலும், "தான் இரண்டு முறை கருக்கலைப்பு செய்ததாகவும், அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் காரணம். தற்போது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கலைக்கச் சொன்னார். ஆனால் நான் முடியாது என்று சொன்னதால்தான் எங்களுக்குள் பிரச்சனை வெடித்தது" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முதல் மனைவியின் பதிவு
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமைதியாக இருந்த ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி, சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், "வெளியே இருந்து வருபவர்கள் உங்களுடைய கணவனை அபகரிக்கப் பிளான் போடலாம். ஆனால், நீங்கள் எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் கணவரையும், உங்களது வாழ்க்கையையும் விட்டுக் கொடுக்காதீர்கள். என்னைப்போல போராடுபவர்களுக்கு நான் துணையாக நிற்கிறேன்" என்று அவர் கூறியிருந்தது, இந்தப் பிரச்சனைக்கு மேலும் ஒரு கோணத்தை ஏற்படுத்தியது.
விசாரணையில் நேருக்கு நேர்
இன்று (அக்டோபர் 28) மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜெய் கிறிஸ்டில்லா கொடுத்தப் புகார் காரணமாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த ஜாய், செய்தியாளர்களிடம் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். "இதுவரைக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் என்னிடம் நேரடியாக பேசவில்லை என்று ஜாய் சொல்லி இருந்த நிலையில் விசாரணையின்போது என்னிடம் நேரடியாக பேசினார் என்று ஜாய் சொல்லி இருக்கிறார்.
அரசியல் பின்புலம்
"ஆரம்பத்தில் புகார் கொடுத்திருந்தபோது, சரியாக நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் அரசியல் பின்புலம் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டதற்கு, "அதுவும் ஒரு காரணம்தான்" , "இன்றுதான் எங்கள் இருவரையும் ஒரே அறையில் வைத்து விசாரித்தார்கள். சில ஆவணங்கள் கொடுத்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் முழுமையாக விசாரணை முடியவில்லை. வரும் வெள்ளிக்கிழமை உள்ளே நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு அறிவுரை
பெண்கள் யாராக இருந்தாலும் சரி, எந்தப் பிரச்சனைகள் வந்தாலும் சரி, உங்களுக்கு மகளிர் ஆணையம் துணையாக இருக்கிறது. "எனக்கு வந்த பிரச்சனைக்கு நான் மகளிர் ஆணையத்தைத் தொடர்பு கொண்டப் பிறகுதான் எனக்குச் சரியான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இங்கு இருப்பவர்களும் உதவி செய்கிறார்கள்" என்று கூறி, பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தைரியம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications