சீரியலை போலவே நிஜத்திலும் மாமியார், மருமகள்.. “மெட்டி ஒலி” நடிகைக்கு மருமகளாகும் விஜய் டிவி கதாநாயகி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சந்தியா அந்த சீரியலில் அவருக்கு மாமியாராக நடிக்கும் சீரியல் "நடிகை சாந்தி"யின் மகனை திருமணம் செய்ய இருக்கிறார் இவர்களுடைய என்கேஜ்மென்ட் சமீபத்தில் முடிவடைந்திருக்கும் நிலையில் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறதாம்.
விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என்று பல சேனல்களில் தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சந்தியாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். தன்னுடைய வருங்கால கணவரோடு என்கேஜ்மென்ட் முடிவடைந்திருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து இருந்த நிலையில் அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நடிகை சந்தியா ஆரம்பத்தில் ஆதித்யா டிவியில் காலேஜ் டாட் காம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்கு பிறகு சன் டிவியில் கண்மணி, விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்து வந்து நிலையில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் என்ற சீரியலிலும் கதாநாயகனின் அண்ணன் மனைவியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தான் சந்தியா தனக்கு முரளி கிருஷ்ணா என்பவரோடு என்கேஜ்மென்ட் முடிவெடுத்து இருப்பதாக கூறி இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது இருவரும் தங்களுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படத்தை பகிர்ந்ததும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அதே நேரத்தில் சந்தியா திருமணம் செய்ய போகும் முரளி கிருஷ்ணா மெட்டிஒலி சீரியலில் நடித்த நடிகை சாந்தியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல சாந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமடைந்திருந்தார். ஆனால் ஆரம்பத்திலேயே இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்.
ஆனாலும் அடுத்தடுத்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சாந்தி இப்போது சக்திவேல் சீரியலில் நடிகை சந்தியாவுக்கு மாமியாராக நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் பெண்களை அடிமைப்படுத்தும் மாமியாராக நடித்துக் கொண்டிருக்கும் சாந்திக்கு பாவப்பட்ட அமைதியும் சுலபமான மருமகளாகத்தான் சந்தியா நடித்துக் கொண்டிருக்கிறார்.
இருவரும் சீரியலில் மாமியார் மருமகளாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது நிஜ வாழ்க்கையிலும் மாமியார் மருமகளாக மாறப் போகிறார்கள். பல நடிகர், நடிகைகள் கணவன் மனைவியாக நடித்து பிறகு காதலித்து திருமணம் செய்து கணவன் மனைவியாக மாறி இருக்கிறார்கள். ஆனால் இங்கே மாமியாரும் மருமகளுமாக நடித்து இப்போது நிஜமாக மாமியார் மருமகளாக இவர்கள் இருவரும் மாறப்போவது ஆச்சரியமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications