Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருப்பா அழகா மாப்பிள்ளை வேணும் சார்... அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா ரியாலிட்டி ஷோ வாராவாரம் சுவையான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

மனதிற்கு பிடித்திருக்கிறதா, என்பதை தவிர மீதி அனைத்தையும் பார்க்கிறார்கள்!" என்று வாதாடும் திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் ஒரு பக்கம், அவர்களது அம்மாக்கள் மறு பக்கம் என்று சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அழகான விவாதம்.

வரும் வாரம் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு பார்த்து மகிழுங்கள்.அதற்காக இப்போது ப்ரோமோவைப் பார்த்து மகிழுங்கள்.

கரு.பழனியப்பன் தொகுப்பாளர்

கரு.பழனியப்பன் தொகுப்பாளர்

தமிழா தமிழா நிகச்சியைத் தொகுத்து வழங்கும் கரு பழனியப்பன்,ஒரு இளம் பெண்ணிடம் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். எனக்கு கவர்ன்மென்ட் மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு பார்க்கறாங்க. வயசு எவ்வளவு வேணா இருக்கலாம்னு மைண்ட் செட் அவங்களுக்குன்னு சொல்லுது.

அரசு வேலை

அரசு வேலை

அண்ணன் பையன் சார்.. அரசு வேலை பார்க்கிறான். அந்த பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்க சொல்றோம்னு அம்மா சொல்றாங்க. அவங்க அண்ணன் பையன்னு சொல்றாங்க. நீங்க யாரையாவது செலெக்ட் பண்ணிடீங்களான்னு கரு.பழனியப்பன் கேட்க..ஆமாம் சார்னு சொல்றாங்க அந்த பெண்.

செட்டாகாது லவ்

செட்டாகாது லவ்

முதலிலேயே சொல்லியாச்சு சார்.. நம்ம வீட்டுக்கு ;லவ் செட்டாகாதுன்னு. நிச்சயமா என் அண்ணன் பையன்தான் மாப்பிள்ளைன்னு சொல்றாங்க. உங்க அண்ணன் பையன் என் கண்டிஷனுக்கு ஒத்து வருவாரான்னு கேட்க, அப்படி என்னம்மா உன் கண்டிஷன்னு இவர் கேட்கிறார். நல்லா சமைக்க தெரிஞ்சு இருக்கணும், வேலைக்கு போகும்போது எதையாவது மறந்துட்டா எடுத்துக்கிட்டியான்னு கேட்கணும்னு சொல்ல, நிச்சயம் கேட்பான் சார்னு அம்மா சொல்றாங்க. .

அம்மா எதிர்பார்ப்பு

அம்மா எதிர்பார்ப்பு


என் அம்மா எப்போப் பார்த்தாலும் மாப்பிள்ளை அழகா இருக்கணும்னு சொல்றாங்க சார்.நானும் கேட்டேன்..நான்தானே கல்யாணம் செய்துக்க போறேன்..நீயா கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு.. உனக்கு எது அழகுன்னு நினைக்கிறீங்கன்னு இவர் கேட்க, கருப்பா அழகா இருக்கணும் சார்.. ஆனா அம்மாவுக்கு வெள்ளையா இருக்கணுமாம் என்று ஆச்சரியப்படுத்துகிறார்.

அதோட நிக்கலை இந்த பொண்ணு.. கருப்பா இருக்கும் பையனை கல்யாணம் செய்துகிட்டு அவனையும் யாரும் பார்க்க மாட்டாங்க..கூட போனா இவங்களும் அழகா தெரிவாங்களாம்.

நல்லா இருக்குங்க உங்க நியாயம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+