நடிகர் எஸ்.வி சேகர் உடன் கல்யாணம்! மணக்கோலத்தில் புகைப்படங்களை பகிர்ந்த சீரியல் நடிகை.. எதிர்பார்க்காத சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஷோபனா மற்றும் நடிகர் எஸ்வி சேகர் இருவரும் மணக்கோலத்தில் திருமணம் செய்து கொள்வது போன்ற வீடியோக்களை ஷோபனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்வி சேகர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல இப்போது அவருடைய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது எஸ் வி சேகர் மற்றும் நடிகை ஷோபனா இருவரும் மணக்கோலத்தில் இருக்கின்றனர். அதில் அந்த நடிகைக்கு எஸ்வி சேகர் கோவிலில் வைத்து தாலி கட்டுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.

அதிகரிக்கும் ட்ரோல்
இது உண்மை என்று சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள். ஆனால் உண்மையான சம்பவமே வேறு. அதாவது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மீனாட்சி சந்தரம் என்ற சீரியலுக்கான ப்ரோமோ மற்றும் போட்டோ சூட் புகைப்படங்கள் தான் இவை. இதை தெரிந்து கொள்ளாத சிலர் இதை வைத்து எஸ்வி சேகரை ட்ரோல் செய்கிறார்கள்.
வித்தியாசமான கதை
இந்த வயதில் உங்களுக்கு திருமணம் தேவையா? என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால் சீரியலின் கதைப்படி இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகனுக்கு கல்யாணம் முடிந்து ஒரு மகன் இருக்கிறார். ஆனால் இரண்டு மகன்களும் தன்னுடைய தந்தையை மதிக்காமல் நடந்து கொள்கிறார்கள்.
எஸ்விசேகர் திருமணம்
மருமகள் மற்றும் இரண்டு மகன்கள் இருவரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். அப்போது கூட தன்னுடைய அப்பா எழுந்து விடக்கூடாது அவரிடம் சொல்ல கூட வேண்டாம் என்று இவர்கள் ரகசியமாக கோவிலுக்கு வருகிறார்கள். அங்கே கோவிலில் வைத்து தங்களுடைய தங்கை நேற்றே படிக்கப் போறேன் என்று கிளம்பி இருந்தார். ஆனால் இன்னும் வரல இத்தனைக்கும் காரணம் அப்பாதான் அவர் கொடுக்கிற செல்லத்தால் தான் இவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.

அதிர்ச்சியில் குடும்பத்தினர்
அந்த நேரத்தில் அவர்கள் கோவிலுக்கு வரும்போது அங்கு ஒரு தம்பதிக்கு திருமணம் நடப்பதற்காக அட்சதை கொடுக்கிறார்கள். அதை மருமகள் வாங்க மறுக்கிறார். பிறகு அந்த பெண் வற்புறுத்தி கொடுப்பதால் அட்சதையை வாங்கி திருமண தம்பதிகள் மீது போட வரும் போது அங்கு தன்னுடைய மாமனாருக்கு ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடப்பதை பார்த்து இரண்டு மகன்களும் மருமகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இரண்டு சீரியலில் நடிப்பு
இந்த மீனாட்சி சுந்தரம் சீரியல் கலைஞர் டிவியில் விரைவில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஷோபனா ஏற்கனவே முத்தழகு சீரியல் மூலமாக ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர். அது போல இப்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பூங்காற்று திரும்புமா என்ற சீரியலிலும் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார். அந்த சீரியலுக்கான ப்ரோமோக்களும் வெளியாகி இருக்கிறது.
வித்தியாசமான கேரக்டர்
அதில் கொடுமைக்கார சைக்கோ கணவரிடம் சிக்கி பெற்றோரின் சப்போர்ட் இல்லாமல் ஒரு பெண் எவ்வளவு கஷ்டங்களையும் வேதனையும் அனுபவிக்கிறார் என்கிற கேரக்டரில் ஷோபனா நடித்திருக்கிறார். ஷோபனா ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் கமிட்டாகி இருக்கும் நிலையில் இப்போது எஸ்வி சேகர் உடன் வித்தியாசமான கேரக்டரில் இவர் நடிப்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications