அழகும் காமெடியும் சேர்ந்து இருக்கு...அப்போ கலர்ஸ் டிவியில் கொண்டாட்டம் காத்து இருக்கு
சென்னை: கலர்ஸ் டிவியில் அபி டெய்லரில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக சிறப்பு தரிசனத்தை கொடுத்து நட்சத்திரா அசத்தியிருக்கிறார்.
யாரடி நீ மோகினி சீரியல் முடிவடைந்த பிறகு கெத்தாக மீண்டும் ஜீ தமிழில் வந்த இவர் தற்போது கலர்ஸ் டிவியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
இவருடைய இந்த அழகு தரிசனத்தை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் கூடவே வையாபுரி வந்து இருப்பதை பார்த்ததும், அப்போ இந்த வாரம் சம்பவம் சிறப்பாக இருக்கு என்று ஆர்வத்தில் காத்திருக்கின்றனர்.

என்ட்ரியே அசத்தல் தான்
புது சீரியலாக இருந்தாலும் கலர்ஸ் டிவியில் டி ஆர் பி யில் முன்னேறிக் கொண்டிருக்கும் அபி டெய்லர் சீரியலில் புது என்ட்ரியால் வேற லெவல் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதுவும் யாரடி நீ மோகினி சீரியலின் வெண்ணிலா இந்த சீரியலில் தேவதை போல புடவையில் வந்து இருப்பதை பார்த்ததும் அசந்து போன அவருடைய ரசிகர்கள் எப்போ இந்த எபிசோடு ஒளிபரப்பாகும் என்று கேட்டு வருகின்றனர். அதுவும் அவர் தனியாக வராமல் அவர் கூடவே வையாபுரியை கூட்டிக்கொண்டு வந்து இருப்பதை பார்க்கும் போது அப்போ இவர்கள் இருவரும் காமெடியில் கலைகட்ட போகிறார்கள் என்று கேஸ் பண்ணி இருக்கிறார்கள். ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் கூட்டும் விதமாக இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

கலர்ஸ் டிவியிலும் அறிமுகம்
ஜீ தமிழில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் வெண்ணிலா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நட்சத்திராவை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. இந்த சீரியலில் அமைதியின் சொரூபமாக வலம் வந்தவர் தற்போது சிரித்த முகமாக தன்னுடைய அழகு முகத்தை காட்டி இருக்கிறார். இவர் நடித்து வந்த சீரியல் தான் முடிந்து விட்டதே இனி இவரை எப்படி பார்ப்பது என்று இவருடைய ரசிகர்கள் பலர் புலம்பி வந்தநிலையில் இவருடைய புது கெட்டப் ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுத்து இருக்கிறதாம். ஏற்கனவே இவர் அதே ஜீ தமிழில் ஒளிபரப்பான திருமதி ஹிட்லர் நிகழ்ச்சியில் சீரியலில் ஹெஸ்ட் ஆக ஒரு வாரம் வந்திருந்தார்.

ரேஷ்மாவின் கலக்கல் கூட்டணி
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புது சிறியதாக இருந்தாலும் அபி டெய்லர் சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாக தொடங்கி விட்டது. காரணம் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா ஏற்கனவே ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருடைய ஜோடியாக நடிக்கும் மதனும் அதே பூவே பூச்சூடவா சீரியலில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து கதாநாயகனும், கதாநாயகியும் ஆக தற்போதுதான் சீரியலில் நடிக்கிறார்கள் என்றாலும் இவர்கள் ஏற்கனவே காதல் பறவைகளாக நிஜவாழ்க்கையில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதனால் இவர்களின் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு அதிகமாகவே சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கேரக்டர் என்னவாக இருக்கும்?
ரேஷ்மாவும் நட்சத்திராவும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்குமே தெரியும். ஏற்கனவே யாரடி நீ மோகினி சீரியலில் நட்சத்திராவும், சைத்ரா ரெட்டியும் இணைந்து நடித்து இருந்தனர். இவர்களிருவரும் நிஜத்தில் தோழிகளாக இருந்தாலும் சீரியலில் கதாநாயகியும் வில்லியாக நடித்து இருந்தனர். இந்தநிலையில் மீண்டும் தன்னுடைய மற்றொரு தோழியோடு நடிக்கும் நட்சத்திரா இந்த சீரியலில் என்ன மாதிரி கேரக்டரில் என்ட்ரி ஆக போகிறார் என்று தெரியவில்லை என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனாலும் நட்சத்திராவும் வையாபுரியும் இந்த சீரியலில் விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாட்டத்தை கொண்டாட வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்த ப்ரோமோவும், போட்டோக்களும் தான் தற்போது நட்சத்திராவின் ரசிகர்களின் ஃபேன்ஸ் பேஜ்க்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications