நேற்றைக்கு அப்படி பேசிய நமிதா.. இன்றைக்கு இப்படி பேசலாமா??..ஆனால் கரைஞ்சு போச்சு ரசிகர்களின் மனசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதைசொல்லும் டாஸ்க் வந்ததுதான் வந்தது அனைவரும் கண்ணீர் கடலில் மூழ்கடித்து வருகின்றனர்.

Recommended Video

    BIGG BOSS 5 Namitha பற்றி Sudha Mummy | # Closecall | Filmibeat Tamil

    ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்று இவர்கள் சொல்லும் கதையை கேட்டு ரசிகர்கள் பலர் பீலிங்கை கொட்டி வருகின்றனர்.

    சீரியல்களில் தான் அழுகாச்சி சீன்கள் இருக்கிறது என்று புலம்பி வந்த ரசிகர்களுக்கு ரியாலிட்டி ஷோவிலும் அதே தானா என்று புலம்ப வைத்துவிட்டார்கள்.

    சொந்தக்கதை சோக கதையாச்சி

    சொந்தக்கதை சோக கதையாச்சி

    பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் வழக்கம்போல டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கண்ணீரை சிந்த வைத்திருக்கும் கதை கேளு....கதை கேளு டாஸ்க் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு பேர் தங்களுடைய சோகக் கதைகளை கூறி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை மட்டும் அல்லாமல் சோக கீதங்களை பாட விட்டும் வருகின்றனர்.

    போட்டியாளர்களின் மறுபக்கம்

    போட்டியாளர்களின் மறுபக்கம்

    இந்த சீசனின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் விதவிதமாக இருந்ததை பார்த்ததும் இந்த சீசன் என்டர்டைன்மென்ட்க்கு பஞ்சமே இல்லாமல் களைகட்டும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளிலிருந்து சோக கீதங்கள் ஒளிபரப்புவது கொஞ்சம் கடுப்பாக தான் இருந்து வருகிறது. ஆனால் தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் இன்னொருபக்கம் தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வமாகவும் இருக்கிறது. சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆர்வம் அதனை வென்று டிவி முன்பு அனைவரையும் இருக்க வைத்து விடுகிறது. இன்று யார் கதையை ஆரம்பிக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.

    மனதை பாதிக்கும் கதைகள்

    மனதை பாதிக்கும் கதைகள்

    இன்று நல்ல நிலையில் இருக்கும் அனைவருமே ஆரம்பத்தில் கடினமான கால கட்டங்களையும், பல கஷ்டங்களையும் அனுபவித்து தான் வந்திருப்பார்கள். அது அனைவருடைய வாழ்க்கையிலும் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு இவர்களுடைய கஷ்டம் தெரியாது. அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவர்களின் மீது நன்மதிப்பை உருவாக்குவதற்காகவும், இவர்களைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்வதற்காகவும் போட்டியாளர்களின் கடந்த கால கஷ்டங்களை கூற வைக்கும் டாஸ்க் இருந்து வருகிறது. இதனை எடுத்துச் சொல்வதில் பலரும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் ஒரு சிலருடைய கதைகள் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் பாதித்து விடுகிறது.

    மாற்று பாலினத்தவர் அறிமுகம்

    மாற்று பாலினத்தவர் அறிமுகம்

    பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் முதல் முறையாக ஒரு திருநங்கை போட்டியாளராக அறிமுகமாகியிருக்கிறார். இது அவருக்கு மட்டுமல்லாமல் அவரை சார்ந்த சமூகத்தினரக்கும் பெரிய ஒரு அங்கீகாரம் ஆகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் இவருடைய கதை சொல்லும் நேரம் வந்து இவர் தன்னுடைய கஷ்டங்களை கூறிக் கொண்டிருக்கிறார். அதில் பொதுவாக திருநங்கைகள் பலரும் இந்த கஷ்டங்களை கடந்து தான் வைத்திருப்பார்கள். பல பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அவர்களை புரிந்து கொள்ளாமல் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அதிகமாக காயப்படுத்தி விடுகிறார்கள்.

    மனசு கரைஞ்சு போச்சி

    மனசு கரைஞ்சு போச்சி

    அந்த மாதிரிதான் நமிதாவின் வீட்டிலும் நடந்திருக்கிறது. ஆனால் அவர் அவ்வளவு கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவித்து இருந்தாலும் இன்று பலருக்கும் முன்னுதாரணமாக வந்திருக்கிறார். இவர் கஷ்டங்களை கூறிக் கொண்டிருக்கும் போது சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் அவரை போன்று தனது உணர்வுகளையும், உரிமைகளையும் வெளிக்காட்டிக் கொள்ள துடித்துக்கொண்டிருக்கும் சமூகத்தினருக்கும் தங்களை அறியாமலேயே கண்ணீர் வந்திருக்கிறது. ஆனால் இது கண்ணீரோடு மட்டுமில்லாமல் வெற்றியோடு இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில ரசிகர்கள் நேற்று இமான் அண்ணாச்சி தன்னுடைய கதையை கூறும் போது எல்லோரும் கஷ்டப்பட்டோம் கஷ்டப்பட்டோம்னா...கஷ்டப்பட்ட தானே ஒரு பொசிஷனுக்கு போக முடியும். அதனால் இப்படி கூறக் கூடாது என்று கூறிய இவரே என்று தன்னுடைய கஷ்டத்தை கூறி அடுத்தவர்களை அழ வைக்கலாமா என்று பல நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+