அமெரிக்காவில் இந்தியர்களை பெருமைப்படுத்திய நெப்போலியன்.. தேசியக்கொடியோடு நடந்த கொண்டாட்டம்
சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் பிசினஸ் செய்து வரும் நிலையில் அங்கு இந்தியர்களோடு ஒன்றிணைந்து " India day parade 2024" என்ற நிகழ்ச்சியை நடத்தி அதில் பல இந்திய குடும்பங்களோடு சேர்ந்து அங்கு இந்தியர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவரைக்கும் இருக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அதற்குப் பிறகு கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். அதோடு அரசியலிலும் ஈடுபட்டு எம்எல்ஏவாகவும், மத்திய மந்திரிகாகவும் பதவி வகித்த நெப்போலியன் தற்போது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

கடந்த மாதத்தில் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் எங்கேஜ்மெண்டை முடித்து இருக்கிறார். வரும் நவம்பர் மாதத்தில் தன்னுடைய மகனின் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். தன்னுடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வீடியோ கால் மூலமாகவே தமிழ்நாட்டில் அதுவும் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைபட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு நிச்சயதார்த்தத்தை முடித்து இருந்தார்.

எல்லாமே வதந்தி.. நெப்போலியன் மகனுக்கு இப்படிதான் பெண் பார்க்கப்பட்டது.. மயோபதி மருத்துவர் விளக்கம்
அதுபோல தன்னுடைய மகன் திருமணம் ஜப்பானில் நடைபெறுவதாகவும் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அமெரிக்காவில் தன்னை போல வசித்து வரும் பல இந்தியர்களை ஒன்றிணைத்து ஒரு விழா கொண்டாடியதாக கூறியிருக்கிறார்.
அந்தப் பதிவில், அமெரிக்காவில், நேஷ்வில் நகரில் India Day Parade 2024 என்ற ஒரு நிகழ்ச்சியினை நடத்தி, அதில் ஒவ்வொருவரும் குடும்பத்தோடு கலந்துகொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடினோம்..!! இந்தியாவில் நாம் எல்லோரும் பிறந்து வளர்ந்தாலும், இங்கு அமெரிக்காவிற்கு வந்து நாங்கள் எங்கள் வேலைக்காகவும், சூழ்நிலைக்காகவும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்..!

ஒரு பெண்ணிற்கு எப்படி பிறந்த வீடு, புகுந்தவீடு என்று இரு வீடு இருப்பதுபோல, தாய்நாட்டைவிட்டு வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் இரண்டு நாடுகள் உண்டு..!! புகுந்த நாட்டில் இருந்துகொண்டு, நம்முடைய பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக, நேற்று Indian Association of Nashville (IAN)& One India Association முதல் முறையாக நடத்திய India Day Parade 2024 என்ற இந்த நிகழ்வில் நாங்கள் அனைவரும் கடமை உணர்வோடு கலந்துகொண்டு எங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம்.. புதிய சரித்திரம் படைத்திருக்கிறோம்..!!
இயற்கையால், பிறப்பால் , இந்தியாவில், மாநிலவாரியாக, மொழிவாரியாக, ஜாதி மத இன வாரியாக பிறந்திருந்தாலும், வளர்ந்திருந்தாலும் நாங்கள் அனைவரும் இந்தியன் என்ற உணர்வோடு, ஒரு தாய்வீட்டு பிள்ளைகள், ஒரே நாட்டின் சகோதர, சகோதரிகள் என்ற பாசத்தோடும், நேசத்தோடும்,ஆர்வத்தோடும்,மகிழ்ச்சியோடும் கலந்து கொண்டது, மிகவும் சிறப்பாக இருந்தது..! எல்லோருக்கும் இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது உண்மை..!!
வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த கட்டாய கடமை இருக்கிறது, நமது மொழியையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், தேசப்பற்றையும், நமது பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டியது, வருங்கால சந்ததியினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது நம்முடையமுக்கிய கடமை..!!

வெளிநாட்டிலேயே பிறந்தாலும், வளர்ந்தாலும், வாழ்ந்தாலும் தமிழனாக,மலையாளியாக தெழுங்கராக, கன்னடராக, மராட்டியாக, பெங்காளியாக, குஜராத்தியாக,ராஜஷ்தானியாக, பஞ்ஜாபியாக, ஹரியானராக, காஷ்மீரியாக, அசாமியாக ஏன் இந்தியாவின் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் அடிப்படையில் நாம் ஒரு இந்தியன் (Orgin )என்ற உணர்வை ஊட்டவேண்டியது நம் அனைவரது கடமை..!
இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நாம் அனைவரும் ஒன்று கூடி இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி , நாம் பிறந்த மண்ணிற்கும், பிறந்த நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்..! என்று கூறி இருக்கிறார்












Click it and Unblock the Notifications