நீயா நானா: லீவே இல்லாத கார்ப்பரேட் கம்பெனி! அவஸ்தையை புலம்பிய நபர்.. அதிரடியாக கேள்வி கேட்ட பெண்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் மார்ச் 31 ஆம் தேதிக்கான எபிசோடில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வார எபிசோடில் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறு தொழில் செய்பவர்கள் ஒரு பக்கமும், அப்படி கார்ப்பரேட் கம்பெனியில் இருந்து வெளியேறுவது சரியான முடிவல்ல என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கமும் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து வேறு தொழில் செய்பவர்கள் அணியில் இருந்து ஒரு நபர், நான் வேலை பார்த்த ஐடி நிறுவனத்தில் எனக்கு ஒரு நாள் கூட லீவு தரவில்லை. அதனால் நான் பட்ட அவஸ்தை என்ன என்பதை பற்றி சொல்லி இருக்கிறார்.

அதே நேரத்தில் ஐடி கம்பெனி வேலை என்பது எளிதான காரியம் இல்லை. அதை பெறுவதற்காக பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கிராமத்து பெண் ஒருவர் பல விஷயங்களை பகிர்ந்து இருக்க நீயா நானா அரங்கமே அமைதியாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மையமாகக் கொண்டு விவாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கோபிநாத் இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கோபிநாத் மாறி இருக்கிறார். அதனால் அவர் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா இல்லையா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்தது.
ஆனால் நான் எப்போதும் நீயா நானா நிகழ்ச்சியை விட்டுப் போக மாட்டேன் என்று கோபிநாத் ஏற்கனவே ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அது போலவே இப்போது செயல்படுத்தி இருக்கிறார். இந்த வாரமும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அந்த வகையில் இந்த வாரம் கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து பல்வேறு சூழல்களால் வெளியே வந்து வேறு தொழில் செய்பவர்களும், நீங்கள் இப்படி வெளியே வந்தது சரியான முடிவல்ல என்று சொல்பவர்களும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியான நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஒரு நபர் நான் ஒரு எம் என்சி கம்பெனியில் வேலை பார்த்தேன் சார். பொதுவா ஐடி கம்பெனி என்றால் லீவே இருக்காது. அதனால நான் ஃபேமிலியை டோட்டலா மறந்துட்டேன். வேலை மட்டும்தான் என்னுடைய மூளையில் பதிந்து விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு எதிர் தரப்பில் வேலையில் இருந்து வெளியே வருவது சரியான முடிவு இல்லை என்ற அணியில் இருந்து ஒரு பெண், என்னை மாதிரி கிராமத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு கார்ப்பரேட் ஆஃபீஸில் வேலை செய்வது ஒரு பெரிய கனவு. அந்த வேலையில் நான் சந்தோஷமா இருக்கேன்... சம்பளம் தர்றாங்க.. ரெண்டு நாள் லீவு தராங்க.. அப்புறம் வேற என்ன வேணும்? ஆனா இங்க இருக்குதுல ஒருத்தவங்க சொன்னாங்க ஐ டி கம்பெனியில் ஒரு நாள் தருவாங்கன்னு ஆனா அப்படியெல்லாம் இல்ல சார் என்று அவர் சொல்ல அங்கிருந்து எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இந்த ப்ரோமோ வெளியானதும் இது அதிகமான கருத்துக்களையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ப்ரோமோவிற்கு ஒரு ரசிகர், "இந்த ப்ரோகிராம் நடக்கும் விஜய் டிவியே கார்ப்பரேட் தானே?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதுபோல பலர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் ஒரு பெண், "என்னுடைய ஹஸ்பண்டும் ஐடி கம்பெனியில் தான் வேலை பார்க்கிறார். ஒரு நாள் கூட அவருக்கு லீவு கிடைக்கிறது இல்லை" என்று தங்களுடைய கஷ்டத்தை சொல்லி இருக்கிறார்.
அதுபோல இன்னொரு ரசிகர் நீங்க எப்படி வாரத்தில் ரெண்டு நாள் லீவு கிடைக்கும் என்று சொல்ல முடியும் நிறைய கம்பெனியில் வாரத்தில் ஒரு நாள் லீவே கிடைக்கிறதுக்கே அல்லல் பட வேண்டியது இருக்கு. நீங்க உங்க கம்பெனி மாதிரி நினைச்சு பேசாதீங்கம்மா? என்று அந்த ப்ரோமோவில் பேசிய பெண்ணிற்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் எபிசோடில் இது பற்றி கோபிநாத் அதிகமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.












Click it and Unblock the Notifications