Neeya Naana : நீயா நானாவில் கோபிநாத் எங்களை பேசவே விடல! அங்க நடந்த விஷயம் இதுதான்! நடிகை அம்மு ஆதங்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில், தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து நடந்த விவாதம், தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதத்தால் மக்கள் மத்தியில் எழுந்த கடுமையான கருத்து வேறுபாடுகள் குறித்து, நடிகை அம்மு ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்வுபூர்வமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

விவாதமும், கருத்து மோதலும்
'நீயா நானா' நிகழ்ச்சியில் நடந்த விவாதம், பல ஆண்டுகளாக சமூகத்தில் பேசப்பட்டு வரும் ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படையாகப் பேசியது. ஒருபுறம், விலங்குகள் நல ஆர்வலர்கள், தெரு நாய்களுக்கு உணவளிப்பது, அவற்றை பராமரிப்பது மற்றும் தத்தெடுப்பது அவசியம் என்று வாதிட்டனர். மறுபுறம், தெரு நாய்களால் ஏற்பட்ட அச்சம், காயம், மற்றும் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து மக்கள் தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்தனர்.
இந்த விவாதம், சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். பலர், நாய்களை ஆதரிப்பவர்களின் மனநிலையை தவறாகப் புரிந்து கொண்டு, அவர்களைக் கிண்டல் செய்யத் தொடங்கினர். இந்தச் சூழலில்தான், நடிகை அம்மு ராமச்சந்திரன் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
அம்மு ராமச்சந்திரனின் உருக்கமான பேச்சு
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இந்த அவதூறுகளால் மனம் வருந்திய அம்மு ராமச்சந்திரன், ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், கண்களில் நீர் ததும்ப, மனம் உருகிப் பேசினார்.
நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வைத்து பலர் ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. நிறைய தவறான வார்த்தைகளை நீங்க யூஸ் பண்ணுறீங்க. அதுக்கு எல்லாம் வருத்தப்பட்டு நான் இந்த வீடியோ போடல. நீயா நானாவில் என்ன நடந்துச்சு என்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்தனும் என்பதற்காக தான் இந்த வீடியோ. நீயா நானா என்பது ஒரு ஷோ. ரெக்கார்டு பண்ணின ஒரு விஷயத்தை வெறும் 45 நிமிஷம் எடிட் பண்ணி போட்டு இருக்காங்க.
எடிட் பண்ணாத வெர்ஷன்
நீயா நானா நிகழ்ச்சியின் எடிட் பண்ணாத வெர்ஷன் பார்த்தீங்கன்னா என்ன நடந்துச்சு என்ற கதை உங்களுக்கு தெரியும். ஒரு பக்கம் நாயை விரும்புறவங்க தெரு நாயை ஆதரிக்கிறோம் என்று இருக்கிறோம். இன்னொரு பக்கம் வேண்டாம்னு சொல்லுறவங்க இருந்தாங்க. ஆப்போசிட் சைடுல இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான் அதிகம். எங்கெல்லாம் நாய்களால் பிரச்சனை நடந்துச்சோ அவர்களை எல்லாம் தேடி தேர்வு செஞ்சு கூட்டிட்டு வந்து அவங்க கிட்ட கேள்வி கேட்ட கோபி அவர்கள், இந்த சைடுல எதுக்காக நாய்கள் வேண்டும் என்று சொன்ன விஷயத்தை கேட்கவே இல்லை.
எப்போ நாங்க மைக்ல பேசணும்னு ஆரம்பிச்சாலும் இல்ல பேசாதீங்க... பேசாதீங்க.. உங்களுக்காக சான்ஸ் வரும்போது நீங்க பேசுங்க அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. எதிர் தரப்பில் நாய்கள் வேண்டான்னு சொல்றவங்க அதை பத்தி நிறைய தெரிஞ்சவங்களை உட்கார வைத்து இருந்தார்கள். அதோடு பாதிக்கப்பட்டவர்களையும் கூட்டிட்டு வந்து என்ன பண்ணனும்னு நெனச்சாங்க என்று எங்களுக்கு தெரியல. எங்க ரெண்டு பேரையும் மோத விட்டு அழகு பாக்குறதுக்காக.
கோபிநாத் பேசவே விடல
நீங்க டிஆர்பிக்காக எதுக்கு இவ்வளவு மோசமாக விளையாடுறீங்கன்னு எங்களுக்கு புரியல. இதுவரைக்கும் எந்த சேனல் பற்றி நான் இப்படி ஒரு வீடியோ போட்டதே கிடையாது. இதனால் பர்சனலா பாதிக்கப்பட போகிறது அந்த வாயில்லாத ஜீவன்கள் மற்றும் நாங்க எல்லாரும் தான். அது மட்டுமல்லாமல் நீங்க கொஞ்சம் கூட யோசிக்காமல் அங்க பேசியதை இங்க தூக்கி போட்டு இருக்கீங்க, இங்க பேசியதை அங்க தூக்கி போட்டு இருக்கீங்க. நாங்க பேசுனது எல்லாம் கட் பண்ணி எடிட் பண்ணி எப்படியோ மாத்தி மாத்தி வச்சிருக்கீங்க.
மக்களே நமக்கு நாய்களும் வேணும் அதே மாதிரி அந்த நாய்களிடம் கடிவாங்காமல் எப்படி தோழமையோடு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும் என்று தான் நாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு போனோம். மத்தபடி உங்களுடையவெறுப்பை சம்பாதிக்கணும் என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது. நானும் ஒரு மனுஷி தான். எங்களுக்கும் குடும்பம் இருக்கு இன்னைக்கு நான் எந்த இடத்தில் இருக்கேன் என்றால் முக்கியமான காரணம் நீங்கதான். அப்படி இருக்கும் போது எதுக்காக உங்களை கஷ்டப்படுத்த நான் யோசிக்க போறேன். இதை கொஞ்சமாவது யோசிச்சு பாருங்க என்று அந்த வீடியோவில் ஆதங்கத்தோடு அம்மு பேசி இருக்கிறார்.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications