இது அல்லவோ காதல்.. நீயா நானாவில் பெண் சொன்னதை கேட்டீங்களா? இந்த புரிதல் வேற லெவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஆகஸ்ட் இருபதாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வாரம் ஒரு குழந்தை போதும் என்பவர்களும் ஒரு குழந்தை போக்கு சரி இல்லை என்பவர்களும் கலந்து கொண்டு விவாதிக்கின்றனர்.

அதில் ஒரு பெண் தான் முதல் குழந்தை பெற்றெடுத்த தருணத்தில் தன்னுடைய கணவர் எனக்காக செய்த தியாகங்கள் குறித்து பேசி அதனால் எனக்கு இன்னொரு குழந்தை வேண்டாம் என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆசைப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் எளிதாக அமைந்து விடாது. ஒரு சிலருக்கு மட்டும்தான் வாழ்க்கையில் சில சந்தோஷங்கள் கிடைக்கும். அதே நேரத்தில் ஒரு சில விஷயங்கள் ஒருத்தருக்கு அலட்சியமாக தெரியும். ஆனால் அது இன்னொருவருக்கு பொக்கிஷமாக தெரியும். அந்த மாதிரி தான் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு குழந்தை போதும் என்பவர்களும் ஒரு குழந்தை போக்கு சரி இல்லை என்றும் விவாதம் நடந்து வருகிறது.

அதே நேரத்தில் ஒரு குழந்தை கூட இல்லாமல் பல பேர் தவம் இருப்பது இப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது பல பேர் குழந்தை இல்லாமல் வேதனையோடு தற்கொலை முடிவு வரைக்கும் போய்க்கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த விவாதம் பல்வேறு கருத்துக்களையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு குழந்தை போதும் என்ற அணியில் இருந்து ஒரு பெண் எனக்கு எதற்காக ஒரு குழந்தை போதும் என்று சொல்கிறேன் என்றால் இவ்வளவு நேரமாக இங்கே பேசிக் கொண்ட இருந்தவர்கள் எல்லோரும் தன்னை நினைத்து தான் எனக்கு இனி ஒரு குழந்தை தேவை இல்லை என்று கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அப்படி சொல்வதற்கு காரணம் என்னுடைய கணவர் தான்.

எனக்கு முதல் குழந்தை ஆபரேஷன் பண்ணி பிறந்தது. பையன் பிறந்த பிறகு என்னால் எந்த வேலையும் செய்ய முடியாமல் நான் இருந்த நேரத்தில் என்னுடைய கணவர் தன் குழந்தையை தோளிலே போட்டுக்கொண்டு தூங்க வைப்பார். குழந்தையை அடிக்கடி அழுது கொண்டே இருக்கும். ஆனாலும் இரவெல்லாம் தூங்காமல் என்னுடைய கணவர் பார்த்துக்கொள்வார். நான் பார்க்கிறேன் என்று சொன்னால் கூட வேண்டாம் என்று என்னுடைய உடல் நிலைக்கு ஆக என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிடுவார்.
அதே நேரத்தில் இரவெல்லாம் குழந்தையை தூங்காமல் பார்த்துவிட்டு அடுத்த நாள் காலையில் ஆபீசுக்கு கிளம்பி போவார். எனக்கு அது பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கும் நான் எவ்வளவோ சொன்னாலும் அவர் கேட்பதில்லை என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அதற்கு கோபிநாத் இப்போதும் உங்கள் குழந்தையை கணவர்தானே வைத்துக் கொள்கிறார் என்று கேட்க, ஆமா வெளியில் கணவர்தான் வைத்திருக்கிறார் என்று அந்த பெண் சொல்ல, அவருடைய கணவர் அரங்கத்திற்கு வர வைக்கப்படுகிறார்.

பிறகு அவருடைய கணவரிடமும் கோபிநாத் உங்களால்தான் நான் இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ள ஆசைப்படவில்லை என்று உங்களுடைய மனைவி சொல்றாங்க என்று கேட்க, ஆமா நாங்க அவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம் எனக்கு குழந்தை மட்டுமல்லாமல் என்னுடைய மனைவியும் முக்கியம்.
அவ கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இரவு நான் குழந்தையை பார்த்துக் கொண்டேன் என்று கூறி இருக்கிறார். இப்படியாக வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்க்க ரசிகர்கள் பலரும் அந்த பெண்மணி ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள் என்று அவருடைய கணவரை பாராட்டி வருகிறார்கள்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications