Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீயா நானாவால் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல! சரவணன் மீனாட்சி சீரியலின் ஏலோ ஏலேலோ பாடகி நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி பிரியா பிரகாஷ் தன்னுடைய 30 வருட அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.

பிரியா பிரகாஷ் பல ஹிட் பாடல்களை பாடி இருந்தாலும் அவருடைய முகம் ரசிகர்களின் மத்தியில் தெரியாமல் இப்போ வரைக்கும் இருந்து வருகிறது.

இந்நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னை பலருக்கும் தெரிவதாக மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.

பின்னணி பாடகிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் பிரபலங்களாக மாறிவிடுகிறார்கள். கோபிநாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக அவர்களுடைய கருத்துக்களை கேட்டு பிரச்சனைகளுக்கு முடிவு சொல்லியிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பின்னணி பாடகிகள் பலர் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். ரசிகர்கள் பலர் கேட்டு ரசித்த பாடல்களுக்கு சொந்தக்காரர்களை முதல் முறையாக அந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி இருந்தனர்.

Neeya Nana participated in Saravanan Meenakshi serial sang the title song Priya Prakash Interview

சரவணன் மீனாட்சி பாடல்

அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் பிரியா பிரகாஷ். இவர் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான பிறகுதான் இவரா அவர் என்று பலரும் வியந்து போயிருக்கிறார்கள். சின்னத்திரையில் பல பேருடைய மனதில் இப்ப வரைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் சரவணன் மீனாட்சி சீரியலின் எவர்கிரீன் மியூசிக் கான ஏலே ஏ..லே சாங் இவருடைய வாய்ஸில் தான் வந்திருக்கிறது. ஆனால் இந்த ரகசியம் அவருக்கே தெரியாமல் இருந்திருக்கிறது.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சி

பாடகி பிரியா பல பின்னணி பாடல்களை பாடி இருப்பது போல சரவணன் மீனாட்சி சீரியலுக்கு முன்பாக மதுரை என்கிற சீரியலில் இவருடைய பாடல் வேண்டும் என்று கேட்டார்களாம். இவரும் போய் பாடி கொடுத்துட்டு வந்திருக்கிறார். அதற்குப் பிறகு அந்த பாடல் வந்தது போல இல்லை என்று இவர் இருந்திருக்கிறார். ஒருநாள் யதார்த்தமாக இவர் வெளியே சென்றிருக்கும்போது இன்னொருவருடைய ஃபோனில் இருந்து ரிங்டோன் ஆக இவருடைய குரல் கேட்டிருக்கிறது. அப்போதுதான் இவருக்கு இது நான் பாடியது எப்படி உங்களுக்கு கிடைத்தது என்று கேட்டிருக்கிறார்.

மகிழ்ச்சி தான்

பிரியா பிரகாஷின் வார்த்தையை கேட்டு அதிர்ச்சியான நபர், இது விஜய் டிவியில் வரும் சரவணன் மீனாட்சி சீரியல் பாடல் நீங்க போய் முதலில் கேளுங்கள் என்று சொன்னாராம். பிறகு வீட்டில் வந்ததும் இவர் அந்த சீரியலை வைத்து பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ரொம்பவே சந்தோஷமாக இருந்ததாகவும் தனக்கே இது தெரியாமல் இருந்திருக்கிறதே என்று அதிசயப்பட்டு இருக்கிறார்.

இத்தனை பாடல்களா

அதுமட்டுமல்லாமல் பிரியா பிரகாஷ் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து கலக்கிய தசாவதாரம் திரைப்படத்தில், முகுந்தா முகுந்தா எனும் பாடலின் பாட்டி வாய்ஸில் இவர்தான் பாடியிருக்கிறார் .அதுபோல பல திரைப்பட பாடல்களில் இடையில் வரும் வசனங்களையும் இவர் பாடி அசத்தியிருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் இவர் அதிகமான பாடல்கள் பாடி இருந்தாலும் குறிப்பாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் வரும் வா ராஜா வா வா இதுதான் உன் டாவா என்னும் பாடலும் இவர் பாடியதுதானாம்.

Neeya Nana participated in Saravanan Meenakshi serial sang the title song Priya Prakash Interview

பலருக்கும் தெரியவில்லை

இந்த நிலையில் 30 வருடங்களாக பாட்டு பாடி கொண்டிருந்தாலும் அது நான் தான் பாடினேன் என்று வெளியே தெரியாமல் இருந்த நிலையில் நீயா நானா வந்த பிறகுதான் என்னை பலருக்கும் தெரிந்திருக்கிறது. குறிப்பாக நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் கூட இவர் சரவணன் மீனாட்சி சீரியலின் தீம் பாடல் நான் பாடியது என்று சொன்னதும், அது நீங்களா? என்று அதிர்ச்சி அடைந்தார். எனக்கு இத்தனை நாளும் தெரியாது என்று அவர் சொன்னார். அதுபோலத்தான் இருக்கிறது என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+