நெஞ்சத்தை கிள்ளாதே: கௌதம் கொடுத்த அடி.. அபிஷேக் வைத்த ட்விஸ்ட், ஆவேசத்தில் சகுந்தலா
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிஷேக்கின் நண்பன் லெட்ஜரை எடுத்தது சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது கௌதம் அபிஷேக் மற்றும் அவனது நண்பனை சந்திக்க வந்திருக்க எதுக்குடா லெட்ஜரை எடுத்த என்று அபிஷேக்கின் நண்பனை அடித்து கேட்க அவன் ஒரு கட்டத்தில் அடிக்காதீங்க உண்மையை சொல்லுகிறேன் என்று சொல்கிறான்.

இதனால் பதற்றம் ஆகும் அபிஷேக் நண்பனைப் போட்டு அடித்து வேலையை விட்டு துரத்தி கௌதமிடம் மன்னிப்பு கேட்க கௌதம் அவன் பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ என்று சொல்கிறான்.
மறுபக்கம் மதுமிதா கௌதமின் பாட்டியிடம் அம்மாவை பார்க்க வீட்டுக்கு போயிட்டு வருவதாக சொல்லி அனுமதி கேட்க பாட்டி போய்ட்டு வா என அனுப்பி வைக்கிறார். மதுமிதா வீட்டுக்கு வர மாயா சோகமாக இருக்க பிறகு இனிமே சண்டை போட வேண்டாம் என ஜீவாவிடம் சொல்வதாக சமாதானம் செய்து வைக்கிறாள்.

அடுத்து அபிஷேக் வீட்டுக்கு வர ஆபீஸ்க்கு கணக்குல இருந்து 25 கோடி பணம் காணாமல் போய் இருக்கு என்ன விஷயம் என்று கேட்க என் பிரண்டு எடுத்து இருக்க மாட்டான் அவன் மேல பழி போடுறாங்க என்று சொல்கிறான். அப்ப எதுக்கு அவனை அடிச்ச என்று சகுந்தலாவின் அண்ணன் கேள்வி கேட்க அந்த பணத்தை நான் தான் எடுத்தேன் என ஒப்புக்கொள்கிறான்.

இந்த விஷயம் அறிந்த சகுந்தலா தப்பு பண்ணாலும் மாட்டிக்காத மாதிரி பண்ணனும் என கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.












Click it and Unblock the Notifications