பாவனிக்கே பாயாசத்தை போட்ட தாமரை... கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: பாவனி டாஸ்கில் தோற்றதற்கு தாமரை தான் காரணம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
எவ்வளவோ கஷ்டப்பட்டு ஓடி சென்ற பிறகும் டாஸ்கில் தோற்று பாவனியை வெளியேற்றி விட்டோமே என்று தாமரை பீல் பண்ணி வருகிறார்.
வெற்றி தோல்வி எல்லாம் வீரனுக்கு அழகு தான் என்று பாவனியின் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

குழம்ப வைத்த டாஸ்க்
பொம்மலாட்டம் டாஸ்கில் போட்டியாளர்கள் தாங்கள் காப்பாற்ற நினைக்கும் போட்டியாளர்களின் பெயர் வைத்திருக்கும் பொம்மையை தூக்கிக்கொண்டு கூடாரத்துக்குள் நுழைந்து தனக்கு பிடித்த போட்டியாளர்களை விளையாட்டில் தொடர்ந்து ஜெயிக்க வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றனர். இது வித்தியாசமாக போட்டியாக இருந்தாலும் இதில் பிரச்சனைகள் கிளம்பும் என்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

அதிகரித்த பீப் சவுண்ட்
நீயும் பொம்மை நானும் பொம்மை என்று வித்தியாசமான பொம்மை டாஸ்க் வைத்த பிக்பாஸ் பிரச்சனையும் பெரிய அளவில் வெடிக்கும் என்று ஆர்வத்துடன் காத்திருந்த நேரத்தில் ஒரு சில பிரச்சனைகள்
பூதாகரமாக வெடித்து போட்டியாளர்கள் ஒருசிலர் தங்களையும் மீறி அவையில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசி விட்டனர். இதனால் பிக்பாஸ் எடிட் பண்ணி பீப் சவுண்ட் எல்லாம் போட்டு ஒருவழியாக சமாளித்து இருந்தாலும் நேற்று நடந்த நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாவனியின் செம பிளான்
போன வாரம் வரை ஒரு சில நேரங்களில் ஒட்டிக்கொண்டாலும் பல நேரங்களில் மோதிக்கொண்டிருந்த தாமரையும் பாவனியும் இந்த வாரத்தில் ஆளுமை பொறுப்பில் தலைவராக ஒன்றாகத்தான் இருந்து வருகின்றனர். பாவனி தலைவர் பதவியிலும் அவருக்கு துணையாக தாமரையும் இருந்து வருகின்றனர். இதில் தாமரையை பழிவாங்குவதற்காக தான் தாமரையை தனக்கு உதவியாளராக செலக்ட் பண்ணி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில், அப்படி ஒன்றும் பெரிய லெவலில் எந்த செயலும் பாவனி செய்யவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் குற்றசாட்டு
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் பாவனியின் பொம்மையை காப்பாற்றுவதற்காக தாமரை தன்னால் முடிந்த அளவிற்கு போராடிக் கொண்டிருந்தார். இவர் எவ்வளவுதான் போராடிக்கொண்டு இருந்தாலும் கடைசி நேரத்தில் கால் இடரி ஜர்க்காகி விட்டார். இதனால் இவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த கூடாரத்திற்குள் செல்ல முடியாததால் பாவனி, தாமரையால் டாஸ்கிலிருந்து வெளியேறி விட்டார். ஆனால் இதை நெட்டிசன்கள் வேறு விதமாக கலாய்த்து வருகின்றனர். பாவனியின் மீதுள்ள கோபத்தின் காரணமாகத் தான் பாவனியை விளையாட்டிலிருந்து வெளியேற்றும் விதமாக தாமரை இப்படி விளையாடி இருக்கிறார் என்று குற்றசாட்டுகளை குவித்து வருகின்றனர்.











Click it and Unblock the Notifications