சொந்த கதையே கிடையாதா..?? பாரதி கண்ணம்மா சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்.. இப்படியா பண்ணுவாங்க.!!??

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ரசிகர்கள் வெளியிடும் கருத்துக்களை அப்படியே சீரியலாக எடுத்து வருவதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டி வருகிறார்கள்

அடுத்தடுத்த திருப்பங்கள் என்கிற பெயரில் இப்படி செய்யலாமா? ? என மீம்ஸ்களில் கலாய்த்து வருகிறார்கள்.

நிறைவேறாத நெட்டிசன்களின் எதிர்பார்ப்பு

நிறைவேறாத நெட்டிசன்களின் எதிர்பார்ப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்து விடும் என்று பல வருடங்களாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு எல்லாம் ஏமாற்றத்தை கொடுத்துக் கொண்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை ஒரு பக்கம் நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும், இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதனாலே இந்த சீரியலின் டிஆர்பி எப்போதும் முதன்மையான இடத்தில் இருந்து வருகிறது. ஆனாலும் எங்களுடைய முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று இந்த சீரியலுக்கு எதிராக பல மீன்ஸ் கிரியேட்டர்கள் தங்களுடைய கோபங்களை காட்டி வருகிறார்கள்.

இயக்குனருக்கு வரும் அர்ச்சனை

இயக்குனருக்கு வரும் அர்ச்சனை

பாரதி கண்ணம்மா சீரியலில் ஒவ்வொரு வாரமும் ஒரு புது திரைப்படத்தின் கதைக்களம் காப்பியடிக்கப்படுகிறது என்று பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியலில் டிஎன்ஏ என்ற ஒன்றை மட்டும் தான் மையமாகக் கொண்டிருக்கிறது. அதை பார்த்துவிட்டால் போதும் சீரியல் முடிந்துவிடும். அதனால் அதை கடைசி வரை எடுக்கப் போவதில்லை என்று இயக்குனர் முடிவெடுத்து வைத்திருக்கிறார் போல என்று தினமும் இயக்குனரை வஞ்சனை இல்லாமல் கலாய்க்கும் கூட்டம் சமூக வலைத்தளத்தில் அதிகரித்து வருகிறது.

வெண்பாவின் புது பிளான்

வெண்பாவின் புது பிளான்

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதிலாவது பாரதி கண்ணம்மாவை புரிந்து கொண்டு அவரை ஏற்றுக் கொள்வாரா?? இல்லை அடுத்த சீசன் தொடங்கி விடுவார்களா?? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஒரு சில வாரங்களாக ஏற்கனவே பாரதியின் மருத்துவமனை தீவிரவாதிகளின் பிடியில் இருந்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தது. தற்போது வெண்பா கர்ப்பமாக இருக்கும் செய்தி யை கூற பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று புதிய பிளான் போட்டு இருக்கிறார்.

அப்படியே நடக்குது

அப்படியே நடக்குது

நேற்றைய எபிசோட்டில் வெண்பாவின் பிளான் பலனளிக்காமல் சென்று விட்டது. தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு யார் காரணம் என்றே தெரியாது, அதனால் என்னுடைய குழந்தை அப்பா தெரியாத பிள்ளையாக வாழ்ந்திட கூடாது என்னை தயவு செய்து கல்யாணம் பண்ணிக்கொள் என்று பாரதியிடம் கெஞ்சி இருந்தார். ஆனால் அதற்கு பாரதி கண்டுகொள்ளாமல் எனக்கு இருக்கிற பிரச்சனைக்கு இதெல்லாம் தேவையில்லை என்று போய்விட்டார். தற்போது பாரதியை மிரட்டுவதற்காக விஷம் குடித்து தற்கொலை முயற்சி எடுத்து இருக்கிறார். அப்போது ஓடி வந்து வெண்பாவை தூக்கிக் கொண்டு பாரதி சொல்வது போன்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஒரு சில நாட்களாக ரசிகர்கள் இனி வெண்பா பாரதியை கல்யாணம் செய்வதற்காக பல நாடகங்களை போடுவார் என கூறி வந்தனர். தற்போது அதையே இயக்குனர் கதையாக மாற்றிவிட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+