இந்த மாதிரி டயலாக் தேவையா..!!?? பிரபல சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சென்னை: தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மீண்டும் மெடிசன்களின் வசம் சிக்கி இருக்கிறது.
ஆரம்பம் முதலே அதிகமாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வந்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பிரபலம் அடைந்த நிலையில் மீண்டும் ரசிகர்கள் பலர் இந்த சீரியலுக்கு எதிராக கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது தீவிரவாதிகளின் வசம், பாரதியின் ஹாஸ்பிடல் இருக்கும் நேரத்தில் தீவிரவாதி ஒரு பெண்ணை கற்பழித்து விட்டு பேசும் வரைமுறைற்ற வார்த்தைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளதாம்.

கதையின் சுருக்கம்
பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பம் முதல் தற்போது வரை பல நெகட்டிவ் கருத்துக்களை பெற்றிருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பாரதி ஒரு டாக்டராக இருந்தாலும் அவருக்கு ஆண்மை இல்லை என்று டாக்டர் கொடுத்த சர்டிபிகேட்டை நம்பிக்கொண்டு தன்னுடைய காதல் மனைவியை சந்தேகப்பட்டு அவருடைய குழந்தைக்கு தான் தகப்பன் அல்ல என்று கூறி வருகிறார். பாரதியின் மனைவியான கண்ணம்மாவும் உன் முன்பாக நன்றாக வாழ்ந்து காட்டுவேன் என்று சபதம் விடுத்து வீட்டை விட்டு வெளியேறி பல வருடங்கள் ஆகியும் பாரதி தான் தன் குழந்தைகளுக்கு அப்பா என்பதை தெளிவாக கூறாமல் இருந்து வருகிறார்.

பீஸ்ட் காத்து வீசுது போல
டாக்டர் பாரதி ஒரு டிஎன்ஏ டெஸ்ட்டை ஒழுங்காக எடுத்து இருந்தால் இந்த சீரியல் எப்போதே முடிந்திருக்கும் என்று ரசிகர்கள் சில நேரங்களில் நொந்து கொள்ளும்படி காட்சிகள் அமைந்து வருகிறதாம். கதையின் விறுவிறுப்பை கூட்டுவதற்காக இயக்குனர் புதுப்புது திரைப்படத்தின் கதைகளை இந்த சீரியலில் இணைத்து வருகிறார் என்று ரசிகர்கள் இந்த சீரியல் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். தற்போது இயக்குனர் பீட்ஸ் படத்தை பார்த்திருப்பார் போல, அதனால் தான் பீட்ஸ் படத்தில் வரும் அதே தீவிரவாதிகள் சீன் பாரதி கண்ணம்மா சீரியலிலும் வைத்து விட்டார் என்று சமூக வலைத்தளத்தில் பாரதி கண்ணம்மா சீரியலை பற்றி மீம்ஸ்கள் பறந்து வருகிறது.

தீவிரவாதிகள் மிரட்டல்
பாரதி கண்ணம்மா சீரியலில் தீவிரகவாதிகளின் வசத்தில் பாரதியின் ஹாஸ்பிடல் இருந்து வருகிறது. அமைச்சரை காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் ஹாஸ்பிடலில் இருப்பவர்களை ஒவ்வொருவரையாக நான் சுட்டு கொன்று விடுவேன் என்று வில்லன் மிரட்டி இருக்கிறார். அதுவும் முதல் ஆளாக உனது குடும்பத்தை சார்ந்தவர்களை தான் நான் சுடுவேன் என்று கூறியதை தொடர்ந்து பாரதி அமைச்சருக்கு ஆபரேஷன் செய்ய சென்றிருக்கிறார். இந்த நேரத்தில் தீவிரவாதியின் இயக்கத்தை சேர்ந்த ஒரு தீவிரவாதி அந்த மருத்துவமனையில் நர்சாக இருக்கும் ஒரு பெண் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று சொன்னதும் அவரை துப்பாக்கி முனையில் அழைத்து சென்று பாத்ரூம் உள்ளே அனுப்பி வைக்கிறார்.

நெட்டிசன்களின் கேள்விகள்
அந்த தீவிரவாதி அந்த மருத்துவமனை நர்ஸ் பெண்ணை கற்பழித்து விடுகிறார். அப்போது அந்த தீவிரவாத இயக்கத்தை சார்ந்த ஒரு பெண் இது எல்லாம் நம் இயக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொன்னபோது, "இது மண்ணு திங்கிற உடலை நாம கொஞ்சம் என்ஜாய் பண்ணுனா..அது கொள்கைக்கு தப்பா" என்று அந்த தீவிரவாதி கூறியிருக்கிறார். இந்த சீனை வைத்து தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த மாதிரி சீரியலில் டயலாக் வைக்கலாமா?? என்று கலாய்த்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் சீரியலாக இருந்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டாமா? அந்தப் பெண் பாத்ரூம் செல்லும்போது கதவை லாக் செய்து கொண்டு தானே சென்றார் பின்பு எப்படி இந்த தீவிரவாதி உள்ளே சென்றார் என்று சிலர் விதண்டா விதமாக யோசித்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications