மீண்டும் விஜய் டிவியில் களம் இறங்கும் அனிதா சம்பத்..இந்த முறை இப்படி ஒரு அவதாரமா? இனி அதிரடிதான் போல
சென்னை: செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
தன்னுடைய கனவு நலமாகும் அடுத்த முயற்சி என்று சமூக வலைத்தளத்தில் அனிதா சம்பத் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அனிதா சம்பத் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

செய்தி வாசிப்பாளர்
செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பலர் அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் அனிதா சம்பத் இவர் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் செய்தி வாசிப்பாளராக இப்ப வரைக்கும் இருந்து வருகிறார். இவருடைய தமிழ் உச்சரிப்பு அதிகமான ரசிகர்களை கவர்ந்து, அழகாக இருக்கிறாரே, இவருடைய புடவை அழகாக இருக்கிறது என்று ரசித்து இருந்த ரசிகர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய அறிமுகத்தை பார்த்து அதிர்ச்சி ஆகிவிட்டனர்.

ஸ்பேஸ் கிடைக்கவில்லை
அது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் முன்னிலையில் தன்னுடைய நிஜ கேரக்டரை காட்டியிருந்தார். இவர் இந்த நிகழ்ச்சியில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிக் கொண்டிருந்தாலும், அதிகமான ரசிகர்கள் இவருடைய பேச்சைப் பார்த்து அதிர்ந்து போய் இருந்தனர். அதிலும் குறிப்பாக தன்னுடைய கணவரின் மீது தனக்கு இருக்கும் காதலை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு இடங்களில் தனக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எனக்கு ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்று ஒவ்வொரு வாரமும் கமலிடம் கம்ப்ளைன்ட் செய்வதை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர்.

தைரியமாக கேள்வி
தன்னுடைய சோகக் கதையை சொல்லி அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்களை அழ வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,இவர் சொன்ன கதையை கேட்டு பலரும் கொட்டாவி விட்டு விட்டனர். ஆனாலும் இவருடைய தைரியமான குணத்தை இப்போதும் பலரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி ஒரு பெண் தைரியமாக கேள்வி கேட்டு எதிர்த்து பேசுகிறாள் என்றால் அவரை வாயாடி என்றும் பஜாரி என்றும் பேசி விடுவார்கள். ஆனால் ஒரு ஆண் சண்டைக்கு நின்று கேள்வி எழுப்பினால் அவரை வீரன் என்று பலரும் ஒத்துக்கொள்கிறார்கள் அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூபணம் ஆகிவிட்டது.

தொகுப்பாளராக அறிமுகம்
இந்த நிலையில் அனிதா சம்பத் மீண்டும் விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். அதை குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தின் பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டிருக்கிறார். விஜய் டிவியில் விரைவில் துவக்க இருக்கும் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்ற நிகழ்ச்சியை அனிதா சம்பத் தான் தொகுத்து வழங்கப் போகிறார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ் புலமை வாய்ந்தவர்கள் நடுவர்களாக பங்கேற்கிறார்களாம். இந்த நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற தகவல்கள் அடங்கிய பிரமோ அனிதாவை வைத்து விஜய் டிவி தயார் செய்து வருகிறது.

புது முயற்சி
இந்த நிலையில் அனிதா சம்பத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், கனவுகள் நினைவாகும் எனது அடுத்த புதிய முயற்சியில் நுழைகிறேன். விஜய் டெலிவிஷனில் உங்கள் அன்பு தங்கம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்று பதிவு வெளியிட, அதற்கு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் தன்னுடைய திறமையால் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications