நைட்டியில் அனிதா சம்பத்.. “அந்த” வீடியோ கேட்ட ரசிகர்.. “எதார்த்தமான” பதில்.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அம்மா வீட்டில் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் ஆரம்பத்தில் நைட்டியில் இருப்பது போன்றும் பிறகு கல்யாணப் பெண் போல மேக்கப் அணிந்தபடியும் இருக்கிறார்.
அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் அவரிடம் கேட்ட கேள்விக்கு அனிதா சம்பத் யதார்த்தமான பதிலை கொடுத்திருக்கிறார். தற்போது இது குறித்து அதிகமான ரசிகர்கள் அனிதா சம்பத்தை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

செய்தி வாசிப்பாளராக அனிதா சம்பத் பலருக்கும் பரிட்சயமானவர்தான். இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது சிரித்த முகமாக, தெள்ளத் தெளிவாக தமிழ் உச்சரிப்பை வாசித்துக் கொண்டிருந்தாலும் இவருடைய கேமராவுக்கு பின்னாடி இருக்கும் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக தான் இருந்திருக்கிறது.
நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த அனிதா சம்பத் காலேஜ் முடித்ததுமே வீட்டு செலவுக்காகவும் தன்னுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் செய்தி வாசிப்பாளராக மாறி இருந்தாலும் பல போராட்டங்களை அப்போதே துணிச்சலாக எதிர்கொண்டு இருக்கிறார். பஸ்ஸுக்கு கூட பல நேரங்களில் காசு இல்லாமல் பல கிலோமீட்டர் தூரம் தான் நடந்தே சென்று வேலை பார்த்ததாக அவரே கூறி இருக்கிறார்.
அதுபோல சமுதாயத்திலும் குடும்பத்திலும் பல பிரச்சனைகள் வந்தாலும் எல்லாவற்றிலும் துணிந்து நிற்க வேண்டும் என்று அனிதா சம்பத் அடிக்கடி மோட்டிவேஷன் கொடுத்து கொண்டிருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருக்கும் போது அனிதா சம்பத்துக்கு அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி பலரையும் ஆட்டம் காண வைத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும் சமுதாயத்தில் இப்போதும் ஆண்கள் ஒரு செயல் செய்தால் அது சரி என்று அதே செயலை பெண் செய்தால் தவறு என்று சொல்வது அனிதா விஷயத்தில் வெட்ட வெளிச்சமாக நிரூபிக்கப்பட்டு இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தைரியமாக குரல் கொடுத்த அனிதா சம்பத் வாயாடி என்று பெயர் வாங்கி இருந்த நிலையில் அதேபோல ஒரு ஆண் போட்டியாளர் பேசி இருக்கும்போது அவர்தான் ஹீரோ என்று பலர் அவருக்கு சப்போர்ட் கொடுத்தனர். அது குறித்து கூட கடந்த சீசனில் அனிதா சம்பத் தன்னுடைய கருத்தையும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக சில சினிமாக்களிலும், சீரியல்களிலும் அனிதா சம்பத் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் போட்டோஸூட் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மா வீட்டில் பேமிலி போட்டோ சூட் என்கிற மாதிரி ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய அம்மாவை முதல்முறையாக அனிதா சம்பத் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் அந்த வீடியோவில் அனிதா சம்பத் ஆரம்பத்தில் நைட்டி அணிந்து இருக்கிறார். அதுபோல அதைத் தொடர்ந்து மேக்கப் எல்லாம் போட்டதும் புடவை அணிந்து கல்யாண பெண் போல கலக்கலாக இருக்கிறார்.இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் கருத்துக்களை குவித்து வருகிறார்கள். அதில் ஒரு ரசிகர் உங்களுக்கு டிரைவிங் தெரியுமா? ஆனால் கார் ஓட்ட தெரியும் என்பதை உங்கள் youtube சேனலில் எந்த வீடியோவும் நீங்கள் போடவில்லையே ஏன் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அனிதா சம்பத் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது எப்படி வீடியோ எடுக்க முடியும்? அது தப்பு என்று சொல்வது போன்று பதில் கொடுத்திருக்கிறார். தற்போது இதை ரசிகர்கள் பாராட்டி இருக்கின்றனர். நாம் கார் ஓட்டிக்கொண்டே வீடியோ எடுத்தால் அதை பார்ப்பவர்கள் பின்பற்றி விடக்கூடாது என்று அனிதா சம்பத் எப்படி எல்லாம் யோசிக்கிறார் என்று தொடர்ச்சியாக அவரை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications