சர்ச் மட்டுமல்ல... கோவிலுக்கும் மசூதிக்கும் கூட போயிருக்கேன் - கடவுள் நம்பிக்கை அதிகம் என்ற விஜய்
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். சர்ச்சுக்கு மட்டுமல்லாது இந்து கோவில்களுக்கும், பிரபல மசூதிக்கும் போயிருப்பதாக கூறினார் நடிகர் விஜய்.
சென்னை: தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். சர்ச்சுக்கு மட்டுமல்ல பிரபல கோவிலான பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவிலுக்கும் போயிருக்கேன்,திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கும் போயிருக்கேன் என்று கூறினார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக விஜய் தனது படத்தின் ஆடியோ ரிலீஸ் நாளில்தான் மேடையில் பேசுவார். பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீடு இல்லை என்பதால் ரசிகர்கள் விஜய் பேச்சை கேட்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

சன் டிவியில் ஸ்பெஷல் பேட்டி
ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காகவே நடிகர் விஜய் சன் தொலைக்காட்சியில் இன்று ஸ்பெஷல் பேட்டி கொடுத்தார். இயக்குநர் நெல்சன் கேள்வி கேட்க சில கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும், சில கேள்விகளுக்கு சீரியஸ் ஆகவும் பதில் அளித்தார் நடிகர் விஜய்.

ஏன் பேட்டி கொடுக்கலை
பத்தாண்டுகளாக ஏன் பேட்டி எதுவும் தரவில்லை என்று நெல்சன் கேட்க... அதற்கு விஜய், முன்பு ஒரு பேட்டியில் நான் சொன்ன விசயங்கள் எழுத்தில் வேறு மாதிரி வந்து விட்டது என்று கூறினார். எனக்கு தெரிந்தவர்களுக்கு நான் விளக்கம் கொடுத்தேன். எல்லோருக்கும் விளக்கம் தர முடியாது இல்லையா அதனால்தான் பேட்டி தருவதில்லை என்று கூறினார்.

கோபம் வருமா
நீங்க எப்படி உங்களுக்கு கோபம் வந்து பார்த்ததே இல்லையே... கோபம் வருமா என்று நெல்சன் கேட்க அதற்கு விஜய். எனக்கு கோபம் வரும்... பாதி பாதி என்றார். எந்த ஒரு விசயத்தையும் தேவையில்லாமல் மைண்டில் ஏற்றி டென்சன் ஆக மாட்டேன் என்று கூறினார்.

கடவுள் பக்தி அதிகமோ
பீஸ்ட் பட சூட்டிங்கின் போது திடீர்னு ஒரு இடத்துக்கு போறேன்னு சொன்னீங்க. எங்க போறீங்க என்று கேட்டதற்கு சர்ச்சுக்கு போறேன்னு சொன்னீங்க... நாங்களும் வந்து பார்த்தப்ப சர்ச்சில் பிரேயர் செய்தீர்கள்... கடவுள் பக்தி ரொம்ப அதிகமோ என்று நெல்சன் கேட்க சிரித்துக்கொண்டே சர்ச் மட்டுமல்ல கோவில்களுக்கும் போவேன் என்றார்.

பிள்ளையார்பட்டி, திருநள்ளாறு
பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவிலுக்கு போயிருக்கிறேன்.... திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கும் போயிருக்கிறேன் என்று சொன்னார் விஜய். கத்தி பட சூட்டிங்கின் போது ஆந்திராவில் பிரபலமான மசூதிக்கும் போய் வழிபட்டிருக்கிறேன். எங்கு போனாலும் ஒரே பீல் வரும். எனக்கு கடவுள் பக்தி அதிகம்தான் என்று சொன்னார் விஜய். ஒவ்வொரு கேள்விக்கும் ட்ரேட் மார்க் சிரிப்பு சிரித்துக்கொண்டே பதில் சொன்னது பேட்டியை சுவாரஸ்யமாக்கியது.
-
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications