For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷெஃல்ப்ல செல்போனை வச்சேன்.. பாத்திரம் கழுவுறதை விட என்னை கழுவி ஊத்திட்டாங்க.. "நீயா நானா" கொடுமை

Google Oneindia Tamil News

சென்னை: வீட்டுப் பணியாளர்கள் வெர்சஸ் பணிக்கு அமர்த்தும் குடும்பத் தலைவிகள் என்னும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக ஒவ்வொரு விஷயமாக வெளியே வருவதை பார்த்தால் வீட்டுப் பணியாளர்கள் எத்தனை மன வேதனையில் வேலை பார்த்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் வாரந்தோறும் நம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளையே விவாதமாக எடுத்துக் கொண்டு பேசுவதால் அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த வாரம் வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கும் அவர்களை பணிக்கு அமர்த்திய குடும்பத் தலைவிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.

எளிமையான முறையில் காதலியை கரம்பிடித்த விஜய் டிவி புகழ்... வாழ்த்தும் ரசிகர்கள்எளிமையான முறையில் காதலியை கரம்பிடித்த விஜய் டிவி புகழ்... வாழ்த்தும் ரசிகர்கள்

 வீட்டுப் பணியாளர்கள்

வீட்டுப் பணியாளர்கள்

அப்போது வீட்டு பணியாளர்களின் கோரிக்கை என்பது வாரத்தில் ஒரு நாள் விடுமுறை. அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை வேண்டும் என்பதாக இருந்தது. மேலும் வீட்டு பணியாளர்களுக்கு குடும்பத் தலைவிகளால் ஏற்படும் பிரச்சினைகள், இவர்களால் குடும்பத் தலைவிகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும் அலசப்பட்டது.

 தனி தட்டு

தனி தட்டு

அப்போது வீட்டு பணியாளர்களுக்கு தனி தட்டு, டம்ளர் என பெரும்பாலான குடும்பத் தலைவிகள் சொன்னது பகீர் என உள்ளது. தீண்டாமை ஒரு குற்றம் என்றும் அதை ஒழிக்க பல தலைவர்கள் போராடிய நிலையில் தற்போது வேறு ஒரு ரூபத்தில் நடக்கும் அந்த கொடுமையை கேட்டு கோபிநாத்தே அதிர்ந்து விட்டார்.

17 ஆண்டுகள்

17 ஆண்டுகள்

வீட்டு பணியாளர் ஒருவர் சொல்லும் போது தான் 17 ஆண்டுகள் ஒரு வீட்டில் வேலை செய்ததாகவும் அங்கு பணியிலிருந்து நின்றுவிட்டு மீண்டும் சென்ற போது துணி மணிஎடுத்துக் கொடுத்து தனக்கு வேண்டியதை செய்த அந்த ஓனர், வேறு ஏதாவது வேண்டுமா என கேட்டது தன்னை நெகிழச் செய்தது என்றார். இன்னொரு பெண் குழந்தையுடன் சென்றால் வேலை கொடுப்பதில்லை. தங்கள் வீட்டிலேயே இரு குழந்தைகள் இருக்கிறது. உன் குழந்தையும் வந்துவிட்டால் வீடு மிகவும் சப்தமாக இருக்கும் என ஒரு குடும்பத் தலைவி கூறி வீட்டு பணியாளருக்கு வேலை கொடுக்க மறுத்துவிட்டாராம்.

வீட்டு பணியாளர்

வீட்டு பணியாளர்

இந்த நிகழ்ச்சியில் வீட்டுப் பணியாளர் குறித்து குடும்பத் தலைவி ஒருவர் கூறுகையில், எங்கள் வீட்டுக்கு பாத்திரம் தேய்க்க வரும் பணியாளர் ஒருவர் தினமும் முணகி கொண்டே பாத்திரம் தேய்த்து கொண்டே இருப்பார். நானும் அவரிடம் அப்படி என்னதான் முணகுகிறீர்கள் என கேட்ட போது அதெல்லாம் ஒன்றுமில்லை என கூறிவிட்டார்.

முணகல்

முணகல்

நான் கேட்ட பிறகும் தொடர்ந்து முணகி கொண்டே இருந்தார், சரி இவர் அப்படி என்னதான் முணகுகிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காக செல்போனில் ரெக்கார்ட்டை போட்டு வைத்துவிட்டு வந்தேன். அவர் போன பிறகு செல்போனை எடுத்து பார்த்தால் அவர் பாத்திரம் கழுவுவதை விட என்னைதான் அதிகமாக கழுவி ஊற்றினார்.

 நியாயமா

நியாயமா

எத்தனை டம்ளர், எத்தனை தட்டு, இவ்ளோ பாத்திரமா போடுவா.. அப்படி இப்படினு இப்ப வரைக்கும் அந்த ரெக்கார்ட்டை வைத்திருக்கிறேன் என்றார். அதற்கு கோபிநாத், அவர் என்ன வேணாலும் முணகட்டும். செல்போனில் ரெக்கார்டு செய்வதெல்லாம் நியாயமா என கேள்வி எழுப்பினார்.

English summary
Neeya Naana debate- Maid vs Owners of the house. Here are the points which was discussed in the debate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X