ஏய் எப்புட்றா? ஒரே நாளில் பாண்டியன் ஸ்டோரில் நடந்த அதிசயம்.. இதை நோட் பண்ணுனீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 5ஆம் தேதி எபிசோடை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இன்றைய எபிசோட்டில் நார்மலாக இருக்க வேண்டும் என்று நினைத்து சில சொதப்பல்கள் நடந்திருக்கிறது.

கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா மற்றும் தனத்தின் வயிறு ஒரே நாளில் பெரியதாக மாறிவிட்டதே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

சீரியல்களின் முன்னேற்றம்

சீரியல்களின் முன்னேற்றம்

முன்பெல்லாம் டிவி சீரியல்கள் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் விரும்பி பார்ப்பார்கள். ஆனால் இப்போது தங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ இளைஞர்கள் பலரும் ட்ரோல் செய்வதற்காகவே சீரியல் பார்க்க தொடங்கி விட்டார்கள் போல, அதனால் தான் சீரியலுக்கு தற்போது டிஆர்பி எகிரி கொண்டிருக்கிறது. ஒரு சில சீரியல்கள் பல சொதப்பல் சீசன்களை வைத்துக் கொண்டிருந்தாலும் நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிக் கொள்கிறது. முன்பெல்லாம் என்னதான் க்ரிஞ் வந்தாலும் அதையும் பொறுத்துக் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்கள் பார்த்து அழுது கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது பலரும் தங்களுக்கு கதை பிடிக்கவில்லை என்று தெரிந்தால் அதைக் குறித்து மீம்ஸ் போட்டு கலாய்த்து விடுவார்கள்.

மாட்டிக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்

மாட்டிக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்

ஒரு பக்கம் தங்களுக்கு வரும் நெகட்டிவ் மீம்ஸ்கள் கூட சீரியலுக்கு பிளஸ் பாயிண்ட் ஆக தான் இருந்து வருகிறது. அந்த மாதிரி சமீபத்தில் முடிவடைந்த பாரதி கண்ணம்மா சீசன் ஒன்று கூட பெரிய லெவெலில் ஹிட் ஆனது. கையில் பேக் ஓடு சுற்றி திரிந்த கண்ணம்மாவை நெட்டிசன்கள் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கலாய்த்து சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்தனர். இந்த நிலையில் தற்போது அதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் அடிக்கடி மாட்டிக் கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் அண்ணன் தம்பி கதைகளில் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வந்தது. ஆனால் தற்போது சில சொதப்பல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 அடுத்த பிரச்சனை

அடுத்த பிரச்சனை

காரணம் தற்போது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் மொத்தமும் கதிர் உடைய சின்ன வீட்டில் தஞ்சம் அடைந்தது தான். அனைவரும் ஒரே ஹாலில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அடுத்தடுத்து மூன்று மருமகள்களும் கர்ப்பமானார்கள். இது இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு கூட கடுப்பாக இருந்தது. ஏன் தான் கதையை லாஜிக் இல்லாமல் இப்படி கொண்டு போறாங்களோ என்றெல்லாம் யோசிக்க தோன்றியது. இந்த நிலையில் ரசிகர்களின் மனதை மாற்றும் விதமாக அடுத்ததாக ஒரு டயபர் வச்சு வந்த பிரச்சனையால் திருமண மண்டபத்தில் மொத்த குடும்பமும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து இருக்கின்றனர். இது பெரும் பரபரப்பையும், ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பையும் ஏற்படுத்தி கர்ப்ப சீன்களை ரசிகர்கள் மறக்க தொடங்கி விட்டனர்.

இது எப்படி மாறுச்சு

இது எப்படி மாறுச்சு

இந்த நிலையில் இப்போது மீண்டும் சொதப்ப தொடங்கி இருக்கிறார்கள். ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் கதிர் உடைய வீட்டை விட்டு வெளியேறி ஒரு நாள் தான் ஆகிறது. அதற்குள் ஐஸ்வர்யாவின் வயிறு பெரியதாக மாறி இருக்கிறது. கடந்த வாரம் வரைக்கும் ஐஸ்வர்யாவிற்கு இரண்டு மூன்று மாதங்கள் இருந்த நிலையில் இப்போது திடீரென்று இவ்வளவு பெரிய வயிறு எப்படி வந்தது என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்க, அதுவும் இந்த சீரியலில் முதன்முதலாக கர்ப்பமாக மாறியது முல்லை தான் ஆனால் அவருடைய வயிறு சின்னதாக இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு கர்ப்பமான ஐஸ்வர்யாவின் வயிறு பெரியதாக மாறி இருக்கிறது. தனத்தின் வயிறும் பெரியதாக இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் எப்படிடா ஒரு நாள் குள்ள இவ்வளவு பெருசா வயிறு மாறிவிட்டது என்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

ஒருவேளை இருக்குமோ

ஒருவேளை இருக்குமோ

அதற்கு முந்தின நாள் எபிசோட்டில் கூட ஐஸ்வர்யாவிற்கு வயிறு தெரியவில்லை. ஆனால் ஒரே நாளில் இவ்வளவு பெரியதாக காட்டியதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்று கேள்வி எழுப்ப, ஒரு வேலை பாண்டியன் ஸ்டோர் சீரியல் சீக்கிரமாக முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகிறது. அதனால் கூட இப்படி அடுத்தடுத்து கதையை நகர்த்திக் கொண்டு போவதற்காக சீக்கிரம் குழந்தை பிறப்பது போன்று கதை வைக்கலாம். அதற்காக இவ்வளவு பெரியதாக காட்டுகிறார்களா இருக்கும் என்றும் கருத்துக்கள் குவிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+