போன் பண்ணி பஞ்சாயத்து செய்த ஐஸ்வர்யா.. பதிலடி கொடுத்த மீனா.. கஸ்தூரியால் வீட்டிற்கு வரும் பிரச்சனை
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா மீனாவிற்கு போன் செய்து தன்னைப் பற்றி போட்டுக் கொடுத்து விட்டீர்களா என்று திட்டுகிறார்.
தனத்தைப் பற்றி குறை சொன்ன ஐஸ்வர்யாவிற்கு மீனா பதிலடி கொடுக்கிறார்.
தனம் ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்றதற்காக மூர்த்தி தனத்தை திட்டுகிறார்.

கம்ப்ளைன்ட் செய்யும் ஐஸ்வர்யா
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் ஐந்தாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா தன்னுடைய வீட்டிற்கு தனம் வந்து பேசியதால் மீனாவிற்கு போன் செய்து அதுக்குள்ள போட்டு கொடுத்துட்டீங்களா? என கேட்க மீனா நான் என்னத்த போட்டு கொடுத்தேன் என்று கேட்க, கடையில் நாங்கள் பொருட்களை வாங்கியதை பற்றி நீங்கள் போட்டு கொடுத்துட்டீங்களா? என்று கேட்க, நான் போன் பண்ணும் போது பார்த்தேன் என்று தான் சொன்னேன் என்று சொல்ல, அப்போ சண்டை போட்டு பிரிஞ்ச பிறகும் நீங்க இன்னும் பேசிகிட்டு தான் இருக்கீங்களா? எனக்கே நான் உன்கிட்ட கூட தான் பேசிகிட்டு இருக்கேன். அதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்க மாமா அன்னைக்கு பெரிய மாமாவை எவ்வளவு திட்டுனாரு ஆனா நீங்க பேசிகிட்டு இருக்கீங்க என்று ஐஸ்வர்யா கேட்கிறார்.

திட்டும் மீனா
பிறகு அடுத்தடுத்து தனத்தைப் பற்றி ஐஸ்வர்யா குறை கூறிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் கோபமான மீனா பழசை எல்லாத்தையும் மறந்துட்டு பேசாத, எப்படி உன்னால எப்படி நடந்து கொள்ள முடியுது என்று திட்டுகிறார். அவங்க பொறாமைப்படுற ஆள் கிடையாது நீ இப்படி தேவையில்லாத பத்தி பேசிக்கிட்டு இருக்காத என்று பேச கடுப்பான ஐஸ்வர்யா போனை வைத்து விடுகிறார். பிறகு மீனா புலம்பி கொண்டு இருக்க, என்ன ஆனது என்று மீனாவின் அப்பா அம்மாவும் கேட்க ஐஸ்வர்யா பேசியதை பற்றி மீனா கூறுகிறார்.

திரி மூட்டும் மீனாவின் அம்மா
இதனால் அவர்கள் ஐஸ்வர்யா தான் சரி, அவ எப்படி புருஷனை பிரித்துக் கொண்டு போயிட்டா என்று உனக்குத்தான் எதுவுமே தெரியல என அட்வைஸ் பண்ண நான் அதை பத்தி இப்போ எதுவும் சொல்லல. அவ பேசுறத பத்தி தான் பேசுறேன் என்று மீனா அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார். பிறகு மூர்த்தியின் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது முல்லை, தனம் ஐஸ்வர்யா வீட்டுக்கு போனதை பற்றி அனைவரும் முன்னாடியும் பேசுகிறார்.

போட்டுக் கொடுத்த கஸ்தூரி
அதற்கு மூர்த்தி அவங்க தான் ஒரு மாதத்தில் குடும்பத்தை பாத்துக்குற அளவுக்கு வளர்ந்துட்டாரே. அப்புறம் நீ எதுக்கு போனா? நீ திருந்தவே மாட்டியா என்று தனத்தை கேட்டு க்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தனத்தின் அண்ணி கஸ்தூரி வந்து கண்ணன் ஐஸ்வர்யாவின் கதையை பற்றி பேசுகிறார். அப்போது அவங்க தனி கொடுத்தனம் போகணும் என்று நினைக்கிறார்கள். அதனால ஐஸ்வர்யா எப்படியும் நீங்க கட்டிக்கிட்டு இருக்க புது வீட்டுக்கு வர மாட்டாள். அதனால அவளுக்கு சேர வேண்டிய சொத்த பிரிச்சு கொடுத்தா அவ புது வீடு கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம் என்று ஆசைப்படுற, அப்படியே அன்னைக்கு பேசிக்கிட்டு இருந்தா என்று சொல்ல கோபமான மூர்த்தி சாப்பிடாமல் கிளம்பி செல்கிறார்.

நாரதர் கலகம் தொடங்கியது
பிறகு மூர்த்தியை எல்லோரும் சமாதானம் செய்ய முயற்சி செய்ய அது எடுபடவில்லை. கஸ்தூரியிடம் ஏன் இப்படி பேசுறீங்க என்று கேட்க, நானா சொல்லல. இது ஐஸ்வர்யா தான் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கா என்று சொல்ல முல்லை ஐஸ்வர்யாவை திட்டி அவளுக்கு சொத்து வேணும் என்று பிரிச்சி கேட்க தெரியுது இல்ல, அப்ப நேர்ல வர சொல்லுங்க என்று பேசுகிறார். பிறகு ஒரு மாத சம்பளம் வாங்கியதும் பழசு எல்லாம் மறந்து போச்சா? என்று உள்ளே தீட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு கஸ்தூரி நேராக ஐஸ்வர்யா வீட்டிற்கு செல்கிறார். அங்கே நலம் விசாரித்து விட்டு மூர்த்தி வீட்டில் தான் சொன்னதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதை கேட்டு கண்ணன் அதிர்ச்சியாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications