பாண்டியன் ஸ்டோர்ஸ்: தூண்டிவிடும் சுகன்யா, உண்மையை உளறிய மயில்! இனி பாண்டியன் எடுக்கும் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 நாடகம், இந்த வாரம் முழுவதும் தங்கமயிலின் திருட்டு நாடகத்தால் பரபரப்பின் உச்சத்தை எட்டியுள்ளது. தனது அப்பா செய்த திருட்டுப் பழியை அப்பாவி பழனி மாமா மீது போட்டதால், சரவணனின் கோபத்துக்கு ஆளான மயில், அதிலிருந்துத் தப்பிக்கப் போட்ட நாடகம் தான் இன்றைய எபிசோடின் திருப்புமுனை!

Pandian Stores serial Vijay TV

மயிலின் ரகசியம்

தங்கமயில் அப்பா கடையில் திருடிய சம்பவத்தால் கடும் அப்செட்டில் இருந்த சரவணன், இதுபற்றி மயிலிடம் கேட்கிறான். அவள் எதுவுமே தெரியாதது போல் பேச, "என் கண்ணு முன்னாடியே அவர் திருடுனதை பார்த்தேன். கடைல வைச்சே உன்கிட்ட கேட்டேன். இப்போ என் மாமா மேல பழி விழுந்திருக்கு. அவர் எப்படிப்பட்ட மனுஷன் தெரியுமா?" என்று கடும் கோபத்துடன் சரவணன் பேசுகிறான். அப்போதும் மயில் நல்லவள் போலவே நாடகமாடுகிறாள்.

இதனையடுத்து, மயில் தனது அம்மாவிடம் போனில் அப்பா செய்த திருட்டு வேலை பற்றிப் பேசும்போது, சரவணன் அவளைக் கையும் களவுமாகப் பிடிக்கிறான். "இதுக்கு அப்புறம் எப்படி மத்தவங்களுக்குத் தெரியாம திருடுறதுன்னு சொல்லி திட்டம் போட்டு இருக்கீங்களா? இதுக்கு மேலயும் என்னால உன்னை பொறுத்துக்க முடியாது. நாளைக்கே வீட்ல எல்லா விஷயத்தையும் சொல்ல போறேன்!" என்று உறுதியாகக் கூறுகிறான்.

மயில் போட்ட நாடகம்

சரவணன் வீட்டில் உண்மையை பேசுவதற்கு முன்பாகவே, மயில் தனது அதிரடி நாடகத்தை ஆரம்பித்து, மொத்தக் குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள். காலையில் விடிந்ததும், பையைத் தூக்கிக் கொண்டு பாண்டியன், கோமதி முன் வந்து நின்ற மயில், "நான் கர்ப்பமா இல்லைன்னு தெரிஞ்சதுல இருந்து என்னை உங்க பையன் டார்ச்சர் பண்றாரு! நான் என் அம்மா வீட்டுக்கே போகிறேன்" என்றுச் சொல்லி ஷாக் கொடுக்கிறாள். "தினம் தினம் அவர் பேசுற சுடு சொல்லை கேட்டுட்டு இருக்க முடியலை. இதுக்கு நான் வாழாவெட்டிப் பேரோடையே இருந்துறேன்" என்று கண்ணீர் நாடகம் போடுகிறாள்.

பொய் குற்றச்சாட்டுகள்

மேலும், "கடைல காணாமல் போன பணத்தையும் நானும், அப்பாவும் சேர்ந்து திருடுனதாவும் சொல்றாரு" என்று சரவணன் மீதுப் பழிபோடுகிறாள். இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியான பாண்டியன், கோமதி இருவரும் சரவணனைக் கூப்பிட்டுக் கடுமையாகத் திட்டித் தீர்க்கின்றனர். "மொத மயிலை கூட்டிட்டு உள்ள போ!" என்கிறார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் சரவணனும் அவளை அழைத்துக் கொண்டு ரூமிற்குப் போகிறான்.

இதன் பிறகு, மயில் சரவணனிடம், "என் வாழ்க்கையை காப்பாத்திக்க வேற வழி தெரியலை மாமா" என்கிறாள். அதற்குச் சரவணனோ, "உன்னைப் பற்றித் தெரிஞ்சும் நியாயம் கேட்டு வந்தேன்ல, என்னையே சொல்லணும். இதே மாதிரி எல்லா நேரமும் நீ தப்பிச்சுட்டு இருக்க மாட்ட!" எனக் கடும் கோபத்துடன் சொல்லிவிட்டுப் போகிறான்.

ராஜிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கதிர்

மயிலின் பிரச்சனை ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, மறுபுறம் கதிர் - ராஜி ஜோடி பாசத்தில் திளைக்கிறது. கதிர், ராஜி இருவரும் டிராவல்ஸில் இருந்தபோது பழனி வருகிறான். அவனை அங்கு உட்கார வைத்துவிட்டு ராஜியை அழைத்துக்கொண்டு வெளியில் கிளம்புகிறான் கதிர். நேராக ட்ரெஸ் கடைக்குச் சென்று அவளுக்குப் புடவை, சுடிதார் எல்லாம் எடுத்து கொடுத்து, "நாலே நாள் டிரெஸ் வைச்சு மாத்தி மாத்தி போடுற. அதான்" என்றுச் சொல்கிறான். ராஜி இதைக் கேட்டுப் பயங்கரமாக ஹேப்பி ஆகிறாள்.

மயிலுக்கு பொறாமை

இருவரும் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றுவிட்டுப் பிறகு வீட்டிற்கு வருகின்றனர். ஆனால், கோமதியிடம் சாப்பாடு வேண்டாம் என்று ராஜி சொல்லிய விஷயத்தை மயில் கேள்விப்பட்டு, "மாமாக்கிட்ட சொல்லாம அவங்க போயிருக்காங்க. இதெல்லாம் நம்ம பழக்கம் இல்லையே அத்தையே" என்று கோமதியிடம் கேட்கிறாள். ஆனால், கோமதி, "அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை" என்று சொல்லி விடுகிறாள்.

Pandian Stores: சரவணனுக்கு ஷாக் கொடுத்த மயில்! கடுப்பான பாண்டியன், உடைந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்
இதனால் அப்செட்டான மயில், சுகன்யாவிடம், "கல்யாணமான புதுசுல பாப்கார்ன் வாங்கிச் சாப்பிட்டதைக்கூடப் பெரியப் பிரச்சனையாப் பேசுனாங்க. ஹனிமூன் சமயத்துல தெரியாம ஒரு ஹோட்டலை அதிக விலைக்கு புக் பண்ணிட்டேன். அதுக்கு மொத்தக் குடும்பமும் சேர்ந்து எப்படிச் சிக்கனமா இருக்கனும் சொல்லி எனக்கு அட்வைஸ் பண்ணுங்க. இப்போ என்னடான்னா கதிர், ராஜி பண்றதை யாரும் எதுவும் கேட்கலை" என்கிறாள். உடனே சுகன்யா, "உனக்கு சரவணன் பணமும் கொடுக்குறது இல்லைல?" எனக் கேட்டுத் தூண்டி விடுகிறாள். இப்படியாக உணர்வுபூர்வமான சண்டைகள் மற்றும் பாசமான காட்சிகளுடன் இன்றைய எபிசோட் நிறைவுபெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+