Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pandian Stores : டைவர்ஸ் கேட்ட சரவணன்.. ஜீவனாம்சமாக மயில் அம்மா கேட்ட விஷயம், ஆடிபோன பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடில், மயிலுடன் இனி என்னால் வாழ முடியாது, அவளிடம் இருந்து எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க என்று சரவணன் சொல்கிறார். அதற்கு மயிலின் அம்மா ஜீவனாம்சம் கேட்டிருக்கிறார். இதற்கு பாண்டியன் குடும்பத்தினர் என்ன செய்யப் போகிறார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மயில் பாண்டியன் வீட்டு வாசலில் நின்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். இதனால் கோபமான கோமதி மயில் அம்மா பாக்கியாக்கு போன் செய்து உன் பொண்ணு இங்கே வந்து பிரச்சனை செஞ்சுட்டு இருக்க நீதான் அனுப்பி வச்சியா? என்று திட்டி சண்டை போடுகிறார். உடனே பாக்கியா இவா நான் போட்ட பிளானை கெடுத்துடுவா போல என்று சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார்.

Pandian Stores serial vijay tv

மறுபக்கத்தில் மயிலை வீட்டிற்குள் விடக்கூடாது என்று கோமதி கதவை பூட்டி வைத்திருக்கிறார். அப்போது மயில் கத்திக்கொண்டே இருப்பதை பார்த்து சரவணன் உச்சகட்ட கோபத்திற்கு போகிறார். அவரை தடுக்கும் கோமதி, நீ உள்ள போடா என்று அனுப்பி வைக்கிறார். பிறகு பாண்டியன் யோசனையில் இருக்க அவரிடமும் இவளை வீட்டுக்குள் விட்டா தூங்கும் போது தலையணையை வைத்து அழுத்தி கொன்னு போட்டுவிடுவா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போதும் மயில் விடாமல் கதவை தட்டிக் கொண்டே இருக்க, அதை பார்த்து சக்திவேல் காலையிலேயே கண்கொள்ளாக் காட்சியாயிருக்கு என்று சந்தோஷப்படுகிறார். குமாரும் அங்கு நின்று நடந்ததை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்க, அவரை அவருடைய அம்மா திட்டி வீட்டிற்குள் விரட்டி விடுகிறார். அப்போது அக்கம் பக்கத்தினர்கள் எல்லோரும் சுற்றி நின்று மயில் அழுவதை பார்த்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த சமயத்தில் மயிலின் அம்மாவும், அப்பாவும் வருகின்றனர். இரண்டு பேரும் கதாவை திறக்க சொல்லி சத்தம் போடுகின்றனர். என் பொண்ணை இப்படி ரோட்டில் நிறுத்தி வைத்திருக்கிறீர்களே நல்லாவே இருக்க மாட்டீங்க என்று பாக்கியம் சாபம் விடுகிறார், அப்போது மயில் அப்பா கதவை திறயா முதலில்.. நீதி நேர்மைன்னு பேசுவ இப்போ எங்க போச்சு அதெல்லாம் என்று கத்துகிறார்.

இதனால் சரவணன் கோபமாக கதவை திறந்து கொண்டு வெளியே வருகிறார். மயிலின் அப்பாவை பார்த்து, எங்க கடையில் பணம் திருடனபோது உனக்கு நீதி நேர்மை எங்கய்யா போச்சு? என்கிட்ட பொய் சொல்லி ஏமாத்துன போதெல்லாம் உனக்கு இந்த நீதி நேர்மை எல்லாம் ஞாபகம் வரலையா என்று அசிங்கப்படுத்துகிறார்.

அதற்கு மயில் அப்பா எல்லாரும் நிக்கிறாங்க இப்படி பேசாதீங்க மாப்பிள்ளை, வீட்டுக்குள்ள போயி பேசலாம் என்று சமாளிக்கிறார். உடனே கோமதி வீட்டுக்குள் எல்லாம் இவர்களை விடாதடா.. இவங்கள அடிச்சு துரத்துடா என்று சொல்கிறார். அதற்கு சரவணன் இவங்க பண்ணுன வேலையெல்லாம் ஒரே நாளில் மறந்துற மாதிரியா செஞ்சு வச்சிருக்காங்க...

உழைப்புக்கு கிடைத்த அடையாளம்! சிறகடிக்க ஆசை சீரியல் மனோஜ்க்கு வந்த வாய்ப்பு, ஒரே நேரத்தில் 13 படத்தில் நடிப்பு
போன வாரம் எல்லாம் உன் டார்ச்சர் தாங்காமல் செத்துப் போயிடலாம்னு நெனச்சேன்டி என்று சொல்ல, மொத்த குடும்பமும் பதறிப் போகின்றனர். கடைசியாக சரவணன் மரியாதையாக இங்கிருந்து போயிடுங்க இல்லன்னா என் சாவுக்கு நீங்க தான் காரணம்னு சொல்லி எழுதி வச்சுட்டு செத்துடுவேன் என்று மிரட்டுகிறார். அதற்கு பாண்டியன் அதிர்ச்சியாகி, என்னடா இப்படி எல்லாம் பேசுற என்று கேட்க, சரவணன் எனக்கு டைவர்ஸ் வேணும்பா என்று சொல்கிறார்.

Pandian Stores serial vijay tv

அதற்கு மயில் அப்பா அப்படியெல்லாம் டைவர்ஸ் கொடுத்து விட முடியாது என்று சொல்கிறார். அதற்கு மயில் அம்மா, எங்களுக்கு ஜீவனாம்சமா மொத்த சொத்தும் வேண்டும் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். இதையெல்லாம் கேட்டு பாண்டியன் குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். அந்த நேரத்தில் சரவணன் காலில் மயில் விழப்போகிறார்.

மயிலை பாக்கியம் தடுத்து, மொத்த குடும்பத்தையும் நான் சந்தி சிரிக்க வைக்காமல் விடமாட்டேன். போலீஸ் கோட் என்று இழுத்து விடுவேன் என்று மிரட்டி விட்டு கூட்டிக்கொண்டு போகிறார். இதனால் அடுத்த வாரத்தில் மயில் குடும்பம், பாண்டியன் குடும்பத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய வைக்க போகின்றனர் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+