பாண்டியன் ஸ்டோர்ஸில் பாண்டியன் எடுத்த உருப்படியான முடிவு! அதிர்ச்சியில் தங்கமயில், சூழ்ச்சி செய்த சுகன்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2026 ஜனவரி 17ஆம் தேதிக்கான எபிசோடில் மயில் விஷயத்தில் பாண்டியன் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் சுகன்யா பழனியை குடும்பத்திடம் மாட்டி விட்டு இருக்கிறார். மறுபக்கத்தில் சரவணன் சேர்ந்து வாழ்வதற்காக தங்கமயில் முயற்சி செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்க மயிலின் நகை பற்றிய உண்மை தெரிந்ததும் பாண்டியன் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதாவது இனி தங்கமயிலின் எந்த பொருள்களும் நம்முடைய வீட்டில் இருக்கவே கூடாது எல்லாவற்றையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு மொத்த குடும்பமும் இதுதான் நல்ல முடிவு என்று சொல்லி இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சுகன்யாவிடம் பழனியின் அண்ணன்கள் ஆன சக்திவேல் முத்துவேல் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பழனி எப்படி கடையை பார்த்திருக்கிறான்? நல்லபடியா போகுதா? என்று விசாரிக்க, அதற்கு சுகன்யா கடையெல்லாம் நல்லாதான் பாத்துக்குறாரு.. ஆனா ஆரம்பத்தில் உங்க தங்கச்சி வீட்டில் தான் இருந்தார். அவங்க அசிங்கப்படுத்தி வெளியே துரத்தி விட்டுட்டாங்க.
அதற்குப் பிறகு அவங்களுக்கு ஒரு பிரச்சனை என்றதும் இவரு ஓடிப்போனாரு. நான் அதை கூட பெருசா எடுத்துக்கல. சரி அக்காவுக்கு குடும்பத்துக்காக இவர்தானே போகணும்னு விட்டுட்டேன். ஆனா அதற்குப் பிறகு அந்த வீட்டுக்கே அவரு போகணும்னு நினைக்கிறாரு. இன்னைக்கு கூட அந்த வீட்ல போய் தூங்க போறேன்னு சொல்றாரு என்று போட்டுக் கொடுக்கிறார்.
இதனால் முத்துவேல் கோபமாகி கோமதிக்கு ஒரு பிரச்சனை என்றதும் நாம போனோம், அதோட நம்ம முடிச்சுக்கணும். அப்புறம் குடும்பத்தோட மீண்டும் உறவாடனும் நினைக்காத அது நல்லதுக்கு இல்லை. உனக்கு என்று ஒரு வேலை இருக்கு, ஏன் இந்த வீட்டில் தூங்குறதுக்கு உனக்கு இடம் இல்லையா என்று திட்டுகிறார்.
உடனே பழனி இல்லை இன்னைக்கு சரவணன் ரொம்ப சோகமா இருக்கிறான் அதனால அவன் கூட போய் படுக்கலாம் என்று நினைத்தேன் என்று சொல்ல அதெல்லாம் முடியாது நீ ஒழுங்கா வீட்ல படு என்று சொன்னது வேற வழி இல்லாமல் பழனியும் சரி என்று சொல்லிவிடுகிறார்.
பிறகு சுகன்யா தூங்கியதும் அவருக்கே தெரியாமல் அங்கிருந்து கிளம்பி வெளியே வருகிறார். அப்போது முத்துவேல் தன்னுடைய மகள் ராஜி தனக்காக எழுதிய லெட்டரை படித்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் பழனி இந்த லெட்டரை முழுசா மனப்பாடம் பண்ணிட்டாரு போல, ஆனாலும் படிச்சிட்டு இருக்காரு என்று சொல்லிக்கொண்டு அவருக்கும் தெரியாமல் பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்.
அங்கு மாடியில் அண்ணன் தம்பி எல்லோரும் படுத்திருக்கின்றனர். பழனி தலையில் போர்வையை மூடிக் கொண்டு வருவதை பார்த்து எல்லோரும் திருடன் என்று அடிக்கப் போகின்றனர். அப்போது பழனி நான் தான் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது தங்கமயில் சரவணனுக்கு ஃபோன் செய்கிறார்.
தங்கமயில் நம்பரை பார்த்ததும் இவ எதுக்கு போன் பண்ணுற என்று அவருடைய நம்பரை சரவணன் பிளாக்கில் போட்டு விடுகிறார். இதனால் தங்கமயில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது அவருடைய தங்கச்சி வந்து இந்த டைமில் போன் பண்ணாத சரியா இருக்காது என்று சொல்ல நான் எப்படியாவது மாமா கிட்ட ஒரு முறை பேசணும் என்று பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
பிறகு அடுத்த நாள் காலையில் ராஜியை பார்த்ததும் கதிருக்கு ராஜி முந்தைய நாள் இரவு பேசியது ஞாபகத்திற்கு வருகிறது. இங்க படுத்தா மட்டும் என்ன நடக்க போகிறது என்று சொன்னதை நினைத்து பார்த்த கதிர் வெட்கப்படுகிறார். அவரே ராஜி கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா வந்து பேச, கதிர் வெட்கப்பட்டு ஓடிவிடுகிறார்.
இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றதை நம்மளால பார்க்கவே முடியாதா என்று மீனா மனதிற்குள் யோசித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக மீனாவும் ராஜியும் தங்கமயில் பொருட்களை வீட்டிற்கு அனுப்ப எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராஜி மயில் அக்கா எந்த வீட்டுக்கு எவ்வளவு ஆசையோடு வாழ வந்திருப்பாங்க.. ஆனா அவங்க இவ்வளவு பொய் சொல்லாம இருந்தா இங்கே வாழ்ந்திருக்கலாம்.
ஏற்கனவே டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதுக்காக, கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க இப்போ பொருளை எல்லாம் அனுப்புறோம் இனி என்ன சொல்ல போறாங்களோ என்று சொல்ல, அவ ஏதாவது செஞ்சா குடும்பத்தையே வெட்டிடுட்டு நான் ஜெயிலுக்கு போயிடுவேன் என்று அந்தப் பக்கமாக வந்த கோமதி சொல்ல மருமகள்கள் அதிர்ச்சியாகின்றனர்.
பிறகு பாண்டியன் வந்து தங்கமயில் வீட்டிற்கு எல்லா பொருட்களையும் அனுப்பி வைக்கிறார். அப்போது சரவணனின் செருப்பு கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று அதையும் கொடுத்து அனுப்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications