பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: எங்களுக்கு எப்படி கல்யாணம் நடந்துச்சு தெரியுமா? ராஜி சொன்ன உண்மை! பாண்டியன் எடுக்கும் முடிவு
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' இந்த வாரம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும், உணர்ச்சிப் பெருக்கிலும் ஆழ்த்தியுள்ளது. நகைப் பிரச்சனையைத் தொடர்ந்து நடந்த குடும்ப வாக்குவாதத்தில், ராஜி தனது திருமணம் குறித்த ஒரு மிகப்பெரிய ரகசியத்தை மொத்த குடும்பத்தின் முன்னிலையிலும் வெளிப்படுத்தியுள்ளார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், கதிர் செய்த தியாகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

நகைப் பிரச்சனையால் வெடித்த ரகசியம்
கடந்த சில நாட்களாகவே ராஜி குடும்பத்தில் நகைப் பிரச்சனை பெரிய சண்டையாக வெடித்துள்ளது. ராஜியின் சித்தப்பா சக்திவேல், தனது பைனான்ஸ் நிறுவனத்தில் ராஜி நகையை விற்க வந்ததைக் கண்டுபிடித்து, பாண்டியன் குடும்பத்தினரை அவமானப்படுத்திப் பேசினார். இந்த வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியபோது, ராஜி தாங்க முடியாமல் ஒரு உண்மையை உடைத்தார்.
"இன்னைக்கு நீங்களும், என்னுடைய அப்பாவும் கௌரவமா இருக்குறதுக்குக் காரணமே கதிர்தான்!" என்று ராஜி சொன்னதும், "என்ன சொல்கிறாய்?" என்று ராஜியின் அப்பா அதிர்ச்சியுடன் கேட்கிறார்.
ராஜியின் கண்ணீர்க் கதை
அப்போது ராஜி கண்ணீருடன் மனம் திறந்து பேசியது, மொத்த குடும்பத்தையும் உறைந்து போகச் செய்தது. அவர் கூறியதாவது, "நான் காதலிச்சது இன்னொருத்தரை. அவரை நம்பிதான் நான் போனேன். ஆனா அந்த ராஸ்கல் என்னை ஏமாத்திட்டு, நகையை எடுத்துட்டு போயிட்டான். அதற்குப் பிறகு நான் தற்கொலை பண்ணிக்கொள்ளலாம் என்று போனேன். அப்போதான் திருச்செந்தூருக்கு வந்த கதிரிடம் இதைப் பற்றி சொன்னேன். நான் தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என்று கேட்டேன். நம்ம குடும்பத்திற்கு அவமானம் வரக்கூடாதுன்னுதான் என்னை கதிர் கல்யாணம் பண்ணுனார்," என்று ராஜி உண்மையைச் சொன்னதும், மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர்.
இன்றைய எபிசோடில் நிகழ்ந்த திருப்பங்கள்
இன்றைய எபிசோடில், ராஜியின் இந்த வெளிப்படையான வாக்குமூலம் தான் மையமாக இருந்தது. கதிரின் தியாகம், அவரது அன்பும், பொறுப்பும் இந்த அளவுக்கு ஆழமானவை என்பதை குடும்பத்தினர் புரிந்துகொண்ட தருணம் இது. ராஜியின் கடந்த காலம் குறித்த உண்மை வெளிவந்ததால், சக்திவேலின் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் வலுவிழந்தன. ஆனால், இந்த ரகசியம் இத்தனை நாள் மறைக்கப்பட்டிருந்தது ஏன் என்ற கேள்விகள் குடும்பத்தினரிடையே எழுந்தன.
ராஜியின் பெற்றோர்கள், இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் திகைத்துப் போயினர். கதிர், இது குறித்து இதுவரை எந்தவிதக் கருத்தையும்சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் அதே நேரத்தில் கதிர் மற்றும் ராஜிக்கு கல்யாணம் நடத்தி வைத்தது கோமதி தான் என்ற உண்மை இப்போதைக்கு குடும்பத்திற்கு தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்தது என்ன
ராஜியின் இந்த வெளிப்படையான வாக்குமூலம், பாண்டியன் குடும்பத்திற்குள் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி. இந்த உண்மையை குடும்பத்தினர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? கதிர் மற்றும் ராஜியின் உறவு வலுப்படுமா? அல்லது இது மேலும் புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்குமா? என்பது வரவிருக்கும் எபிசோட்களில் தெரியவரும். இந்த திருப்பம் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடருக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது.













Click it and Unblock the Notifications