பாண்டியன் ஸ்டோர்ஸ்: ராஜியை சூழ்ந்த சிக்கல்! தங்கமயில் செய்த ஆர்ப்பாட்டம்! பாண்டியன் குடும்பத்தின் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில்' இன்றைய எபிசோடில், குடும்பத்தில் நடந்த சின்னச் சின்ன சண்டைகள் மற்றும் ராஜியின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் எனப் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் ஒளிபரப்பானது.

Pandian Stores Vijay TV

சரவணன் - மயில் சண்டை

இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், சரவணன் தரையில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மயில், அதற்கான காரணத்தைக் கேட்கிறார். "அது என் விருப்பம்" என்று சரவணன் சொன்னதும், "அப்ப நானும் உங்க கூட தரையிலேயே தூங்கறேன்" என்று மயில் அடம்பிடிக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. பின்னர், சரவணன் அறையை விட்டு வெளியே செல்ல, மயிலும் அவரைப் பின்தொடர்கிறார். இருவரும் வெளியே நின்று சத்தமாகக் கத்திக்கொண்டிருப்பதைப் பார்த்த கோமதி, "என்ன செய்யுறீங்க?" என்று கேட்க, சரவணன் வேறு ஏதோ சொல்லி சமாளிக்கிறார்.

ராஜியின் புதிய முயற்சி

இதனிடையே, ராஜி கதிர் டிராவல்ஸ் ஆரம்பிக்கத் தேவையான பணத்திற்காக ஒரு டான்ஸ் போட்டியில் கலந்துகொள்ளப் போவதாக கதிர் மற்றும் பாண்டியன் குடும்பத்திடம் சொல்கிறார்.

கதிரின் குழப்பம்

ராஜியின் முடிவைக் கேட்ட கதிர், "இப்போதைக்கு இது ஒண்ணும் தேவையில்லை" என்று கூறுகிறார். மறுநாள் காலையில், இருவரும் டான்ஸ் பிராக்டீஸ் செய்வதற்காக ஒரு மைதானத்திற்குச் செல்கிறார்கள். அங்கு, கதிர் தனக்கு இந்த டான்ஸ் ஷோவில் விருப்பமில்லை என்று மீண்டும் சொல்கிறார்.

குடும்பத்தின் எதிர்ப்பு

பின்னர், ராஜி தான் டான்ஸ் போட்டியில் கலந்துகொள்ளப் போவதைப் பாண்டியனிடம் சொல்கிறார். அப்போது, "நான் உனக்குக் காட்டின விளம்பரத்தைப் பார்த்துத்தான் இந்த முடிவெடுத்தியா?" என்று மயில் கேட்கிறார். கோமதியும், "இதிலெல்லாம் கலந்துகொள்ள வேணாம்" என்று ராஜியிடம் கூறுகிறார். பாண்டியனும், ராஜி டான்ஸ் போட்டிக்குப் போவதற்குத் தனக்கு விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்கிறார்.

இப்படியாக, ராஜியின் டான்ஸ் போட்டி குறித்த முடிவு, பாண்டியன் குடும்பத்தில் ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜி தனது கனவை நிறைவேற்றுவாரா அல்லது குடும்பத்திற்காக அதை விட்டுக்கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+