பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மயிலுக்கு சரியான பதிலடி கொடுத்த மீனா.. பாண்டியனிடம் கதிர் சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 30 ஆம் தேதிக்கான எபிசோடில் மயில் தன்னுடைய வாழ்க்கைக்காக மீனாவிடம் சண்டை போடுகிறார். மறுபக்கத்தில் கதிர் ராஜியின் வாழ்க்கையில் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மயில் தன்னுடைய அம்மாவின் பேச்சைக் கேட்டு, மீனாவை சந்திப்பதற்காக ஆபீஸுக்கு வருகிறார். ஆபீஸ் வாசலில் மீனாவை பார்த்து, "நான் ஒருத்தி வீட்டில இருந்ததையே நீங்க எல்லாம் மறந்துட்டீங்களா?" என்று ஆதங்கமாக கேட்கிறார்.

அதற்கு மீனா, "இதைப்பத்தி நீங்க பேச வேண்டிய ஆள் நான் கிடையாது. எனக்கு இப்போ மீட்டிங் டைம் ஆகிருச்சு" என்று சொல்லிவிட்டு ஆபீஸுக்குள் சென்று விடுகிறார்.
காத்திருந்த மயில்
மீனா நான்கு மணி நேரத்துக்கு மேலாக மீட்டிங் முடித்து வெளியில் வரும்போது, இன்னும் ஆபீஸ் வாசலில் மயில் நின்றுகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். "எதுக்காக இங்கயே நிற்கிறீங்க அக்கா?" என்று கேட்க, "என் வாழ்க்கையை நினைச்சா பயமா இருக்கு மீனா. அம்மா பண்ண விஷயங்களால என்ன பண்ணறதுன்னே தெரியல" என்று மனவேதனையுடன் பேசுகிறார் மயில்.
மீனாவின் பதில்
இதற்கு மீனா, "அன்னைக்கு பொறுமையா இருங்கன்னு சொன்னேன். என்னை முன்னாடி அனுப்பிட்டு, பின்னாடியே போலீஸ் ஸ்டேஷனுக்கு போனீங்க. டைவர்ஸ் நோட்டீஸ் பார்த்து அதிர்ச்சில பண்ணினதுன்னு சொல்லலாம். ஆனா எண்பது பவுன் நகை போட்டுட்டு வந்தேன்னு சொல்றீங்க. உங்களால நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா?" என்று நறுக்குன்னு கேட்கிறார்
மேலும், "இப்போ கூட உங்க வாழ்க்கையை பத்திதான் யோசிக்கிறீங்க" என்று கேட்க, பதில் சொல்ல தெரியாமல் முழிக்கிறார் மயில்.
மீனாவின் அறிவுரை
"அப்போ என்னோட வாழ்க்கை அவ்வளவுதானா?" என்று மயில் கேட்க, "நீங்க திரும்பவும் பழைய மாதிரி வாழுவீங்க. சரவணன் மாமா உங்களை ஏத்துப்பாராரான்னு சொல்ல முடியாது. ஆனா உங்க அம்மா பேச்சைக் கேட்டு எதையும் பண்ணாதீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க. காலம் தான் எல்லாத்தையும் மாத்தும்" என்று மீனா அறிவுரை கூறுகிறார்.
இதையடுத்து, "நான் போன் பண்ணா நீயாவது எடு மீனா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மயில் கிளம்புகிறார்.
ராஜியின் ஐஏஎஸ் கனவு
மறுபக்கத்தில், ராஜியை ஐஏஎஸ் கோச்சிங் சென்டரில் சேர்க்க கதிர் முடிவு எடுக்கிறார். வீட்டிலேயே படிக்கலாம் என்று ராஜி சொல்லியும் கேட்காமல், அவரை கோச்சிங் சென்டருக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு விசாரிக்க, பீஸ் ஒரு லட்சம் ரூபாய் என்று சொல்கிறார்கள். இதைக் கேட்டு ராஜி அதிர்ச்சி அடைய, "பார்த்துக்கலாம்" என்று கதிர் கூறுகிறார்.
மேலும், "இரண்டு நாள் சென்னை வரைக்கும் போகணும். அங்க டிரெயினிங் இருக்கும். அதுக்கப்புறம் இங்க கிளாஸ் ஜாயின் பண்ணலாம்" என்று கிளாசில் சொல்கிறார்கள்.
சென்னை பயணம்
இதையடுத்து சென்னை செல்ல முடிவு செய்த கதிர், வீட்டில் வந்து கிளம்பத் தொடங்குகிறார். ஆனால் ராஜி, ஒரு லட்சம் பீஸ் எப்படி கொடுப்ப? கோச்சிங் வேண்டாம் என்று மறுக்கிறார்.
அதற்கு கதிர், "அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். சென்னை போறது பத்தி முதல்ல அப்பாவிடம் பேசுவோம்" என்று சொல்லி, பாண்டியனிடம் பேச கூட்டி கொண்டு போகிறார். பாண்டியனிடம் விஷயம் சொல்ல, அவரும் இதற்கு அனுமதி அளித்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications