பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: ஆதாரத்தை காட்டிய மீனா.. பாண்டியனிடம் சிக்கிய கதிர்! மயில் பிடித்த பாயிண்ட், செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூன் 23ஆம் தேதிக்கான எபிசோடில் ராஜி செய்த செயலால் கதிருக்கு பிரச்சனை வருகிறது. அதே நேரத்தில் மீனா கையில் சில ஆதாரம் கிடைத்திருக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தங்கமயிலும் கோமதியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் கதிர் ராஜி எங்கே என்று கேட்க, கோமதி அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு ராஜியும் சரியாக வந்து விடுகிறார். அவரையும் கோமதி கலாய்த்து கொண்டிருக்கிறார். பிறகு ராஜியை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போயிட்டு வரேன் என்று கதிர் கூட்டிக்கொண்டு போகிறார்.

Pandian Stores Vijay TV

உளறிய கோமதி

அவர்கள் இருவரும் போவதை பார்த்ததும் கோமதி எலியும் பூனையுமா இருந்தவங்க இப்ப ஒன்னா போறாங்க, பாக்குறதுக்கே சந்தோஷமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க இதை கவனித்த மயில் இவங்க காதலிச்சு தானே கல்யாணம் பண்ணுனாங்க என்று கேட்டதும் கோமதி அதிர்ச்சியாகிறார். உடனே பதறிப் போய் சின்ன வயசுல ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்வார்கள் அதை சொன்னேன் என்று சமாளிக்கிறார்.

மீனாவுக்கு கிடைத்த ஆதாரம்

மறுபக்கத்தில் ராஜியும் கதிரும் ட்ரைனிங் அகாடமிக்கு சென்று அங்கு பீஸ் கட்டி இருக்கிறார்கள். போலீஸ் வேலைக்கு சேர்வதற்கான பயிற்சிக்கு சேர்வதற்கு கதிர் பணம் கட்டி கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் கதிருக்கு பாண்டியன் ஃபோன் செய்து கடைக்கு வரும்படி செல்லி விடுகிறார். மறுபக்கத்தில் மீனா தன்னுடைய ஆபீஸில் இருக்கும் ஒரு அதிகாரியை கூப்பிட்டு சக்திவேல் மற்றும் முத்துவேல் செய்த நில அபகரிப்புகள் குறித்து ஆதாரங்களை கொடுத்து, இதெல்லாம் இவர்கள் சொத்து அபகரித்து வைத்துள்ள விவரங்கள் தான் இந்த இடங்களுக்கு உடனே நோட்டீஸ் அனுப்புங்க என்று சொல்கிறார்.

நியாயமான கேள்வி

மறுபக்கத்தில் பாண்டியன் கடைக்கு வந்த கதிரிடம் நீ அந்த ராஜி பிள்ளையை சந்தோஷமா வச்சிருக்கேன்னு நினைச்சுட்டு இருக்கேன் ஆனா அந்தப் பிள்ளையை கொடுமை படுத்திட்டு இருக்கியா? என்று விசாரிக்க,அப்படி எல்லாம் எதுவும் இல்லையே என்ன விஷயம் என்று கதிர் கேட்க, அந்த முத்துவேல் என்னை ரோட்டில் நிற்க வைத்து பேசுகிறார் என்று பாண்டியன் சொல்கிறார். அதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த கதிர் அரசியிடம் நீ உங்க வீட்டில் யாரிடமாவது பேசுனனியா என்று கேட்க, அதற்கு அரசி ஆமாம் ரோட்டில் வைத்து அப்பாவிடம் பேசினேன் என்று விஷயத்தை சொல்கிறார். அரசியை குமரவேலுக்கு கொடுமை படுத்தினா நான் இங்க கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை வரும் என்று சொன்னதை அவர் தவறாக புரிந்து கொண்டார் என்று அரசி சொல்லிக் கொண்டிருக்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+