பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வசமாக சிக்கிய செந்தில்.. மீனா கொடுத்த அதிர்ச்சி.. கதிர் செய்த செயல்! பாண்டியன் நிலமை பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூன் 25ஆம் தேதிக்கான எபிசோடில் பாண்டியன் 10 லட்சம் பணத்தை கேட்டதால் செந்தில் அதிர்ச்சியில் இருக்கிறார். பணத்தை ரெடி பண்ண முடியாமல் செந்தில் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து கதிர் உதவி செய்வதற்கு முடிவு எடுத்து இருக்கிறார். ஆனால் மீனா எதிர்பார்க்காத விஷயத்தை சொல்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கடையில் செந்தில் பதட்டமாக இருப்பதை பார்க்கும் கதிர் என்ன விஷயம் என்று கேட்க, அப்பா தந்த பணத்தை பேங்க்ல போடல அரசு வேலைக்காக என்னுடைய மாமனாரிடம் கொடுத்திருக்கிறேன் என்று சொன்னதும், கதிர் அதிர்ச்சியாக இதை அப்பாவிடம் இப்ப சொன்னா பிரச்சனை ஆகிடுமே? இதை நீ என்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கலாமே? என்று கேட்கிறார்.

பிறகு உன் மாமனாரிடம் இப்போ பணத்தை கேட்கலாமா என்று கேட்க, அவரிடம் பணத்தை கேட்டா அவர் நான் ஏற்கனவே ப்ரோக்கரிடம் பணத்தை கொடுத்துட்டேன்னு சொல்லுறாரு என்று சொல்கிறார். அப்போ இதற்கு வேறு வழியே இல்லையா? என்று யோசிக்கும்போது சண்டைக்காரன் காலில் விழுறதுதான் இப்ப வழி, நம்ம அத்தை கிட்ட விஷயத்தை சொல்லுவோம் என்று கதிர் ஐடியா கொடுக்க, அத்தை சொன்னா ஒத்துக்குவாங்களா என்று சந்தேகப்படுகிறார்.
அதோடு கடையில் இப்போ யாரும் இல்லை எப்படி போவது என்று கேட்க, சரவணனை வரச் சொல்லி செந்தில் கால் செய்கிறார். அவரும் வேலைக்கு பர்மிஷன் போட்டுட்டு கிளம்பும்போது அங்கு தங்கமயில் வருகிறார். உடனே நீ கிளம்பு என்று சரவணன் சொல்ல, எனக்கு இப்போ அல்வா சாப்பிடணும் போல இருக்கு என்று மயில் சொன்னதும் சரவணன் சரி நீ போ நான் போய் வாங்கிட்டு வரேன் என்று சொல்கிறார். ஆனாலும் மயில் எனக்கு இப்பவே வேணும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் கதிர் மற்றும் செந்தில் இருவரும் சதீஷ் வீட்டிற்கு வந்து பார்க்க வருகின்றனர். ஆனால் அவர்கள் சென்னைக்கு போய்விட்டதாக சொல்கின்றனர். பிறகு கதிர் உமையாளுக்கு போன் பண்ணி பேச அப்போது எனக்கு எதுக்கு நீ கால் செய்த என்று உமையாள் போனை கட் பண்ணி விடுகிறார். பிறகு சரவணன் இன்னும் கடைக்கு போகவில்லை என்பதால் செந்தில் சரவணனுக்கு போன் செய்ய, சரவணன் போனை எடுக்காமல் இருக்கிறார்.
இதனால் தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் கேட்கலாம் என்று கூறி போகிறார். அங்கு நண்பர்களிடம் கடன் கேட்க அவர்கள் சூரிட்டு இல்லாமல் கடன் தர மாட்டாங்க என்று சொல்லிவிடுகிறார்கள். செந்தில் மீனாவை சந்தித்து நடந்து விஷயத்தை எல்லாம் சொல்கிறார். அதற்கு மீனா அத்தை கிட்ட பேசினா எப்படி அவங்க சம்மதிப்பாங்கன்னு நீங்க நினைச்சீங்க? அவங்க நேரா மாமாவுக்கு போன் செய்து உன்னால கொடுக்க முடியலன்னு மகன்களை வச்சு பேசுறியா என்று சத்தம் போடுவாங்க என்று சொல்கிறார்.
அதோடு எந்த நம்பிக்கையில் காசு கொடுத்த? நானும் படித்து முடித்ததும் எங்க அப்பா இப்படித்தான் வேலைக்கு பணத்தை கொடுத்து சேர்ந்திடலாம்னு சொன்னாரு. ஆனால் நான் விடாப்பிடியா நின்னு படிச்சு எக்ஸாம் எழுதிட்டேன். நீயும் இன்னும் ரெண்டு முறை முயற்சி செஞ்சிருந்தா எடுத்து இருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது நான் தெரியாமல் தப்பு செஞ்சுட்டேன் அதை இனி எப்படி திருத்த போறேன்னு தெரியல என்று செந்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications