பாண்டியன் ஸ்டோர்ஸ்: மச்சானுக்கு துரோகம்! அண்ணன்கள் செய்த செயல், அதிர்ச்சியில் பழனி! கலங்கும் பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2' சீரியலில், பழனியின் புதுக் கடை திறப்பு விஷயம் தற்போது குடும்பத்துக்குள்ளும், பாண்டியன் குடும்பத்துக்கும் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு. இந்த வார எபிசோடில் அண்ணன்கள் செய்த காரியம் பழனியை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கு.

Pandian Stores serial vijay tv 2

குடும்பத்தினர் மீது சங்கடம்

பழனி புதுக் கடை திறக்க போகும் விஷயத்தை அக்கா வீட்டில் யார்கிட்டயும் சொல்லாததால எல்லாரும் வருத்தத்தில் இருக்காங்க. சரவணன், செந்தில்னு அனைவரும் ஏன் தங்களிடம் ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்டுப் பழனியைச் சங்கடப்படுத்துறாங்க. பழனிக்கு கடை திறப்பதில் விருப்பம் இல்லைன்னாலும், அம்மா மற்றும் சுகன்யாவின் பேச்சைத் தட்ட முடியாமல் அண்ணன்களின் விருப்பப்படி கடை ஆரம்பிப்பதற்குச் சம்மதம் சொல்கிறான்.

செந்திலின் அதிர்ச்சி

இந்த விஷயம் கோமதி மூலமாகத் தெரிஞ்சதும் செந்தில் தொலைபேசியில் அழைத்து, "என்ன மாமா நாங்கெல்லாம் உன் கடை திறப்புப் பங்ஷனுக்கு வரலாமா?" என்று கேட்டுப் பழனிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இன்னைக்கு எபிசோடில் பழனி கடை திறக்கும் நாளும் வருது. காலையிலேயே செந்தில், மீனா ரெண்டு பேரும் பழனி வீட்டுக்கு வர்றாங்க. மாமாவின் பங்ஷனுக்குப் போய்விட்டு, அப்படியே ஆபீசுக்கு போகலாம் என்ற திட்டத்துடன் வந்திருக்காங்க.

பழனியை கூப்பிட்டு, "இப்படிச் சொல்லாமல் விட்டுட்டியே மாமா" என்று மீண்டும் சொல்லி, செந்தில் சங்கடப்படுத்தறான். அதோடு அவனிடம் "எங்க கடை திறக்கப் போறீங்க?" என்று கேட்கிறார்கள். விஷயம் என்னன்னா, பழனிக்கே எங்க கடை திறக்கப் போறாங்க என்பது தெரியலை. உடனே "நான் போய் அண்ணனுங்க கிட்ட கேட்டுட்டு வந்துறேன்" எனச் சொல்லிவிட்டு, எதிர் வீட்டுக்குக் கிளம்புறான் பழனி.

கடை ரகசியம்

எதிர் வீட்டுக்குச் சென்றதும், "கடை திறப்பு விழாவுக்கு அக்கா, மச்சான் எல்லாரும் வரலாம்ல" என்று முத்துவேலிடம் கேட்கிறான் பழனி. அதற்கு முத்துவேல் சந்தோஷமாக, "வந்து எங்க தம்பிக்கு நாங்க எவ்வளவு பெரிய கடை திறந்து இருக்கோம்னு சொல்லிப் பார்க்கட்டும்" என்கிறான். உடனே பழனி, "எங்கண்ணே கடை. அட்ரஸ் சொன்னால் தான அவங்களால வர முடியும்" என்று கேட்கிறான். வடிவு, மாரி, பாட்டின்னு எல்லாரும் எங்க கடை இருக்குன்னு சொல்லவே மாட்டறீங்க என்கின்றனர்.

அண்ணன்களின் திட்டம்

ஆனால் அண்ணன்கள், "நம்ம கடை இருக்கிற இடத்துக்கு முதல்ல போவோம். அங்கிருந்து நீ அட்ரஸ் அனுப்பிக்கோ" என்று சொல்லிவிட்டு, பழனியை அப்படியே அழைத்துச் செல்கின்றனர். வீட்டு வாசலில் நின்று அரசி இதையெல்லாம் கவனித்துவிட்டு, உள்ளே வந்து விஷயத்தைச் சொல்ல, கோமதி குழம்பிப் போகிறாள்.

அதிர்ச்சி அடைந்த பழனி

இவ்வளவு சங்கடங்களுக்குப் பிறகு, செந்தில், மீனா ரெண்டு பேரும் "மாமாவுக்கு நம்ம கடை திறப்பு விழாவுக்கு வர்றது பிடிக்கலை போல. நாங்க அலுவலகம் போறோம்" எனச் சொல்லிட்டு கிளம்பிப் போறாங்க. இதனால் கோமதி சோகமாக, கதிர் அவளைச் சமாதானம் செய்கிறான்.

இதற்கிடையில் அண்ணன்கள் பழனியை அழைத்துச் சென்று கடை இருக்கும் இடத்துக்குக் கொண்டு வர, பழனி கடும் அதிர்ச்சி அடைகிறான். அதுக்குக் காரணம், பாண்டியன் கடை போட்டுள்ள அதே ரோட்டிலேயே அண்ணன்கள் திட்டம் போட்டுப் புதுக் கடை ஆரம்பித்து இருக்கிறார்கள். "உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா? இது மச்சானுக்கு துரோகம் பண்ற மாதிரி" என்று பழனி கடுமையாகக் கேட்கிறான். முத்து, சக்திவேல் ரெண்டுப் பேரும் சமாதானம் செய்யப் பார்த்தாலும், பழனி கடையே வேண்டாம் என்கிறான்.

சுகன்யாவின் மிரட்டல்

இந்தச் சமயத்தில் பழனியைத் தனியாக அழைத்து வந்து பேசும் சுகன்யா, "மறுபடியும் உங்க மச்சான் கடைல அடிமை வேலை பார்க்கப் போறீங்களா? நீங்க இப்போ இங்க வரலைன்னா நான் எங்காவது போயிறேன். என்னால இதுக்கு மேல அசிங்கப்பட முடியாது" என்று மிரட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அண்ணன்களும் கட்டாயப்படுத்துவதால் பழனி கடை திறக்கச் சம்மதம் சொல்கிறான்.

பாண்டியன் குழப்பம்

இதற்கிடையில் பாண்டியன், சரவணன் ரெண்டுப் பேரும் அந்தப் பக்கமாகப் போக, அங்கே புதுக்கடை திறப்பதைப் பார்த்து, "எந்த லூசுப் பையன் இங்க கடை திறந்து இருக்கான்" எனப் குழம்புகிறார்கள். அடுத்து நடக்கப்போகும் பெரிய சண்டைகள் என்ன என்பதை வரும் எபிசோடில் காணலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+