குடும்பத்தை பிரிக்க ஜனார்த்தனன் போடும் பிளான்.. கண் கலங்கும் ஜீவா, அவமான படுத்தும் முல்லையின் அம்மா
சென்னை: முல்லையின் வளைகாப்பிற்காக தனம் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை நேரில் சென்று அழைக்கிறார்.
மீனாவின் வீட்டிற்கு சென்ற தனம் மற்றும் கதிரை ஜனார்த்தனன் அவமானப்படுத்துகிறார்.
கதிரிடம் ஜீவா நான் வளைகாப்புக்கு வரமாட்டேன் என்று கூறியதை கேட்டு முல்லையின் அம்மா பிரச்சனை செய்கிறார்.
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏப்ரல் 12ஆம் தேதி எபிசோட்டில் ஆரம்பத்தில் முல்லையின் அப்பா, மூர்த்தி குடும்பத்திடம் தான் மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டேன் என்று கூறிக் கொண்டிருக்க, மூர்த்தி எல்லா செலவையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் வந்தால் மட்டும் போதும் நாங்கள் தான் இந்த செலவை பார்க்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்க, நான் என்னுடைய மகள் வளைகாப்பு பெரிய அளவில் பிரமாண்டமாக செய்யணும்னு முடிவு பண்ணி இருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அது முல்லை நான் வளைகாப்பு செய்தாலும் நான் நம்ம வீட்டுக்கு வர மாட்டேன் இங்கே தான் இருப்பேன் என்று கூறுகிறார். பிறகு தனமும் முல்லை இங்கே இல்லை என்றால் நாங்கள் ரொம்ப பீல் பண்ணுவோம் அதனால நானே முல்லையே நல்லாவே பார்த்து விடுவோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக கதிரும் தனமும் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் வீட்டுக்கு வருகின்றனர். ஐஸ்வர்யா தனத்தையும் கதிரையும் வரவேற்று இருங்க கண்ணனை கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று சொல்கிறார். பிறகு முல்லை வளைகாப்பு விஷயத்தை பற்றி சொல்ல அதற்கு ஐஸ்வர்யா அதற்குள் இவ்வளவு நாள் ஆகிவிட்டதா என்று கேட்டு, பிறகு நாங்க வரதனால மாமாக்கு எதுவும் பிரச்சனை இல்லையா என்று கேட்கிறார்.
அதற்கு தனம் மாமாவுக்கு என்ன பிரச்சனை? அவரு ஒன்னும் சொல்ல மாட்டாரு நீங்க வாங்க என்று சொல்ல அதனால ஒரு பிரச்சனை இல்லை அண்ணி நாங்க வந்துருவோம் என்று கண்ணன் கூறுகின்றார். பிறகு நீங்க வளைகாப்புக்கு வராமல் இருந்து கதிரை தனி ஆளாக ஆக்கிடாதீங்க என்று கூறிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகின்றனர்.

அடுத்ததாக மீனாவின் வீட்டுக்கு கதிரும் தனமும் வர அங்க மீனா வரவேற்று நலம் சரித்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் வந்ததைப் பார்த்து ஜனார்த்தனன் இப்ப எதுக்கு இவங்க வந்திருக்காங்கன்னு தெரியலையே என்று மனைவியிடம் திட்டுகிறார். பிறகு என்ன விஷயமா வந்து இருக்கீங்க என்று கதிரிடம் நேரடியாக கேட்கிறார்.
முல்லையின் வளைகாப்பு பற்றி பேசி கயலுக்கு துணியை கொடுத்து அனைவரையும் வளைகாப்புக்கு கூப்பிடுகின்றனர். பிறகு நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று கூறிவிட்டு செல்ல ஜனார்த்தனனிடம் மீனாவின் அம்மா நம்ம மீனாவுக்கு 7 மாசத்துல வளைகாப்பு வைப்போம் என்று கேட்டாங்க, அப்ப சம்பந்தி அம்மா என்ன சொல்லுச்சு, எங்க குடும்பத்துல இப்போ வைக்க மாட்டோம் என்று சொல்லுச்சு, ஆனா இப்ப மட்டும் இப்படி பண்ணுறாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு ஜனார்த்தனன் உனக்கு இப்பவும் புரியலையா? எப்படியாவது மீனாவும் மாப்பிள்ளையையும் அங்க வர வச்சி அவங்களை மனச மாத்த வச்சு அங்கேயே இருக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான் இவ்வளவு சீக்கிரமாக செய்கிறார்கள். இதுக்கு நான் ஒரு வழி பண்ணுவேன் மாப்பிள்ளை அங்க போக மாட்டாரு என்று உறுதியாக கூறுகிறார்.
அடுத்ததாக ஜீவா சூப்பர் மார்க்கெட்டில் இருக்க அங்கே கதிர் ஜீவாவை தேடி வருகிறார். உன்னை பார்க்க நான் வீட்டுக்கு போனேன். அங்க நீ இல்லை அதனால இங்க வந்து இருக்கேன் என்று கேட்க, என்ன என்று கேட்க முல்லைக்கு வளைகாப்பு வைக்கப் போகிறோம் என்று சொல்ல, அதற்குள் அவ்வளவு நாட்கள் ஆயிட்டா நான் உனக்காகவும் முல்லைக்காகவும் மனசார வேண்டுகிறேன் என சொல்லி கண் கலங்குகிறார்.

பிறகு நான் அங்க வந்தா நல்லா இருக்காது உனக்கு நல்லது நடக்குது எனக்கு சந்தோசம் தான். ஆனால் நான் வரமாட்டேன் என்று சொல்ல, அண்ணன் ஏதாவது சொல்லுவாங்க. நீ நினைக்கிறியா என்று கேட்க, வேண்டாம் இவ்வளவு பிரச்சனை வந்த பிறகு நான் அங்க வரமாட்டேன். வந்தா நல்லாவும் இருக்காது என்று கூறுகிறார். சரி தெரியாம ஏதோ நாங்க செஞ்சுட்டோம். அதுக்காக என்ன செய்யணும் நான் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணுமா? என்று கதிர் கேட்ட ,யோசித்து யோசித்து எனக்கு தலை வலிக்கிறது என்ற
ஜீவா சொல்ல, அப்படி யோசிக்காத அப்படியே யோசிக்கிறத நிப்பாட்டு என்று கதிர் திட்ட உறுதியாக ஜீவா நான் வரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார்.
இனி இதற்கு மேல் உன்னுடைய விருப்பம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கதிர் வர முல்லையும், தனமும் ஜீவா என்ன சொன்னான் என்று கேட்க, அவன் வரமாட்டேன் என்று சொல்லிட்டான் என்று சொல்கிறார். அதற்கு முல்லையின் அம்மா எல்லாரும் எப்படி தான் மாறுதாங்கன்னு தெரியல. உங்களுக்கு ஒரு விசேஷம்னா யாரும் வர மாட்டாங்க என்று ஏத்தி விட, அதற்கு கதிர் அண்ணா அப்படி எல்லாம் கிடையாது. வளைகாப்பு நடத்துவது சந்தோசம் தான் ஆனா மூர்த்தி அண்ணனை பார்த்துதான் இங்க வர முடியாது என்று சொல்றாங்க என்று சொல்ல, தனம் யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications