பாண்டியன் ஸ்டோரில் ஐஸ்வர்யாவை போலவே "தப்பான" முடிவில் தனம்.. இனி நடக்கப் போவது இதுதானா..?
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவை தொடர்ந்து வீட்டில் நடக்கும் விஷயங்களை தனமும் மூர்த்தியிடம் மறைக்கிறார். இதனால் அடுத்த பிரச்சினை தொடங்குகிறது.
ஐஸ்வர்யா குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் சித்தி குழந்தைக்கு நேரம் சரியில்லை பரிகாரம் செய்ய வேண்டும் என்று புது பிரச்சனையை உருவாக்குகிறார்.

கண்ணன் ஐஸ்வர்யா வாங்கிய பணத்தை தனத்திடம் கேட்க அதற்கு தனம் இரண்டு வாரத்திற்குள் தருவதாக கூறுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜூலை 17ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவின் ஹாஸ்பிடல் பில்லுக்கான பணத்தை மூர்த்தி தனத்திடம் கொடுத்து அனுப்பி இது போதாது என்றால் எனக்கு போன் பண்ணு நான் கொண்டு வந்து தருகிறேன் என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து தனம் மருத்துவமனைக்கு போகிறார்.

அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த ஐஸ்வர்யாவின் சித்தி கஸ்தூரியிடம் அங்கிருந்த நர்ஸ் நீங்கதான் ஐஸ்வர்யாவிற்கு சித்தியா இந்தாங்க பில்லு என்று கொடுக்க, நான் எதற்கு பில்லு கட்ட வேண்டும் என்று கஸ்தூரி தகராறு செய்து கொண்டிருக்கிறார். அப்போது தனத்தின் அண்ணன் வருகிறார். என்ன ஆச்சு என்று அவர் கேட்க, அதற்கு என்னிடம் பில் கட்ட சொல்றாங்க என்று அத்தாட்சி பிரச்சனை பண்ண, நாம தானே கட்டனும் என்று வாங்கிக் கொண்டு கிளம்புகிறார். அப்போது தனம் இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு நான் கட்டுகிறேன் என்று பில்லை வாங்குகிறார்.
ஹாஸ்பிடல் பில்லை கட்டி விட்டு வீட்டிற்கு அனைவரும் வருகின்றனர். வீட்டு வாசலில் ஆரத்தி எடுக்கும் போது அப்பன் இல்லாமல் குழந்தைக்கு ஆரத்தி எடுத்து கூட்டிட்டு போகலாமா? கஸ்தூரி என்று கேட்க அதற்கு மீனா எத்தனையோ பேரு வீட்டுல அப்பா வெளிநாட்டில் இருக்காங்க. அதுக்காக குழந்தைக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிடாம விட்டுடுவாங்களா? என்று திட்டி விட்டு ஐஸ்வர்யாவை வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு போகிறார்.

அதைத்தொடர்ந்து மூர்த்தி குழந்தையை தன்னுடைய அப்பா, அம்மா போட்டோ முன்பு வைத்து காட்டி சாமி கும்பிட்டபடி இருக்க அப்போதும் ஐஸ்வர்யாவின் சித்தி குழந்தை பிறந்த நேரத்தை குறிச்சி வச்சிருக்கீங்களா..? குழந்தை பிறக்கும் போது ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு அந்த குறிப்பை எடுத்துட்டு போயி ஒரு ஜோசியர் இருக்காரு. அவர்கிட்ட போய் பாத்துட்டு வந்துடலாம் ஏதாவது குறை இருக்குன்னு சொன்னா பரிகாரம் பண்ணிடலாம் என்று சொல்கிறார்.
அதற்கு குழந்தை வீட்டுக்குள் வந்த நேரத்தில் பரிகாரம் என்றெல்லாம் பேசிட்டு இருக்கீங்களே என்று மூர்த்தியும் கதிரும் திட்டுகின்றனர்.. பிறகு ஐஸ்வர்யாவிடம் அவருடைய சித்தி இப்போ உன் புருஷனுக்கு வேலையும் போயிட்டு இனி லஞ்சமும் வாங்க முடியாது எப்படி பணத்தை தருவீங்க என்று கேட்டு திட்டுகிறார். அப்போது தனம் நான்தான் பணத்தை தருகிறேன் என்று சொல்லிவிட்டேனே எதுக்காக ஐஸ்வர்யா கிட்ட கேக்குறீங்க என்று திட்டுகிறார்.

அதற்கு நீ இவங்கள மாதிரி பிச்சு பிச்சு கொடுப்பியா இல்ல மொத்தமா தந்திடுவியா என்று ஐஸ்வர்யாவின் சித்தி கேட்க அதற்கு தனம் இன்னும் ரெண்டு வாரத்துக்குள் உங்க பணத்தை மொத்தமா நான் தந்துடுவேன் என்று சொல்ல, நீ சொன்னா சரிதான் என்று சொல்கிறார். ஆனால் இந்த விஷயம் மூர்த்திக்கு தெரியக்கூடாது என்று மீண்டும் தனம் சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து மீனா குழந்தைக்கு நீங்க என்ன முறை வேண்டும் என்று ஐஸ்வர்யாவின் சித்தியிடம் கேட்க, அவர் நான் அத்தை என்று சொல்ல எப்படி நீங்க ஐஸ்வர்யாவுக்கு சித்தி தானே எப்படி அத்தையாக முடியும்? பாட்டிதான் என்று சொல்ல, இல்ல கண்ணனுக்கு நான் அக்கா தானே அதனால அத்தை தான் என்று கஸ்தூரி சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து தனம் ஐஸ்வர்யாவை நீ இப்படி பணத்தை தாறுமாறாக செலவளித்ததால் தான் இவ்வளவு பிரச்சனையே வந்திருக்காது என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications