டேய் நில்லுடா கண்ணனை திட்டும் மூர்த்தி..ஐஸ்வர்யாவால் வந்த சிக்கல்..தலைகுனிந்த தனம்..அடுத்த பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கண்ணனுக்கு பணம் கொடுத்த விஷயம் மூர்த்திக்கு தெரிய வந்திருக்கிறது.

கதிர் எதற்காக பணம் கொடுத்தார் என்று மூர்த்தி திட்டுகிறார்.

நடு தெருவில் கண்ணனை பார்த்து மூர்த்தி பேசுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மே 12 மற்றும் 13ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் அடுத்த பிரச்சனை வர இருக்கிறது. கண்ணனுக்கு கதிர் பணம் கொடுத்து உதவியது மூர்த்திக்கு தெரிய வந்திருக்கிறது.

Pandian Stores serial 2023 May 12th and 13 promo Highlights

வீட்டில் தனம் முல்லையிடம் பணத்தை கொடுக்க அதற்கு முல்லை எதற்கு இவ்வளவு பணம் என்று கேட்க, கண்ணன் கதிரிடம் பணம் வாங்கினா இல்ல அதற்கு இந்த பணத்தை வச்சுக்கோ என்று தனம் கொடுக்க அப்போது சரியாக அங்கே வரும் மூர்த்தி இதை பார்த்துவிட எதுக்கு கண்ணன் இங்க வந்து கதிரை தொல்லை பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கேட்கிறார்.

எல்லாத்தையும் நாங்களே பாத்துக்கிடுவோம் என்று தானே வீட்டை விட்டு ரெண்டு பேரும் அப்படிப்பட்டவங்க பார்த்துக்க வேண்டியது தான, கதிர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை அவங்களுக்கு தூக்கி கொடுக்கணுமா? என்று கேட்க தனமும் முல்லையும் பதில் பேச முடியாமல் தவிக்கின்றனர்.

பிறகு ரோட்டில் நிற்கும் மூர்த்தி அந்தப் பக்கமாக போகும் கண்ணனை நில்லுடா, இங்க வாடா என்று கூப்பிட கண்ணன் அதிர்ச்சியாகி பக்கத்தில் வருகிறார். மூர்த்தி கோபத்தோடு பேசுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் கண்ணனுக்கு வேலை போக வேண்டும் என்று கருத்து வெளியிட்டு வேண்டுதல்களை போட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் மூர்த்தி கேட்பது சரியானது தான். தங்களுக்கு வருமானம் வருகிறது என்ற தைரியத்தில் தானே ஐஸ்வர்யாவும் கண்ணனும் வீட்டை விட்டு போனாங்க பிறகு எதற்கு அவங்களுக்கு தேவைக்கு மட்டும் கதிர் கிட்ட வந்து பணத்துக்கு நிற்கிறாங்க. இது தவறான செயல்தான் மூர்த்தி கேட்கிறது சரி என்று மூர்த்திக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

Pandian Stores serial 2023 May 12th and 13 promo Highlights

அதே நேரத்தில் மூர்த்தி கண்ணனை திட்டுவாரா அல்லது எதுக்காக கதிர் கிட்ட பணம் வாங்கினா நான் தரேன் என்று பணத்தை கொடுக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு பக்கம் கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை என்று பேங்க் ஆபீசர் மிரட்டி விட்டு போயிருக்கும் நிலையில் கண்ணனுக்கு அடுத்ததாக பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே ஐஸ்வர்யா தன்னுடைய வளைகாப்பு பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். வளைகாப்பு நடத்துவதற்கு பணம் இல்லை என்ற பிறகும் லோன் போட்டாவது வளைகாப்பு நடத்த வேண்டும் என்று ஐஸ்வர்யா கூறி இருப்பதால் இனி கண்ணனுக்கு அடுத்த பிரச்சனை அமோகமாக இருக்கப் போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+