Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசரலையே சுதாகர், கோபி.. என்னாது, பரிதாபங்கள் சேனலை மூடணுமா? போலீசுக்கு போன திராவிடர் விடுதலை கழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரிதாபங்கள் கோபி, சுதாகர் இருவருக்கம் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழக அரசு இருவருக்கும் எம் ஆர் ராதா என்ற ஒரு விருதை உருவாக்கி அதனை வழங்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.. பரிதாபங்கள்" யூடியூப் சேனலுக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் இறங்கியுள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

யூடியூப் பிரபலங்கள் கோபி - சுதாகர். இவர்களின் பரிதாபங்கள் சேனலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சமீபதில் பரிதாபங்கள் சேனலில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' என்ற தலைப்பில் வெளியான வீடியோவில், நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது,.

Television Gopi Sudhakar

பரிதாபங்கள் சேனல்

சாதிவெறிக்கு எதிராக அதேசமயம், நகைச்சுவையுடன் சமூக கருத்துக்களை பேசியிருந்தது அனைவரையும் ஈர்த்தது. மேலும், இந்த வீடியோ டெலிட் ஆவதற்குள் பார்த்துவிடுங்கள் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கியிருந்தனர்..

இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி இந்த புகாரை கொடுத்துள்ளார்.

நெல்லை சுர்ஜித்

அந்த புகார் மனுவில், "நெல்லையில் அண்மையில் இரு குடும்பங்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் இரு குடும்பங்களுக்கிடையான பிரச்சனையாகும்.

ஆனால் இந்த பிரச்சனையை இரு சமூக மோதலாக கோபி சுதாகர் ஆகியோர் சொசைட்டி பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோவை தயாரித்து யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோவில் இரு சமுதாயங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையிலும், இந்த சமுதாயங்களை கேலி செய்யும் வகையிலும் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது.

சாதி அடையாளங்கள்

மேலும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் அடையாளங்களை அந்த வீடியோவில் குறிப்பிட்டு அந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி உள்ளனர். மேலும், இந்த வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்க வேண்டும். மேலும், இதுபோன்று சர்ச்சைக்குரிய வகைகள் வீடியோக்களை வெளியிடாத வகையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிதாபங்கள் சேனலை தடை செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோபி-சுதாகருக்கு இணையத்தில் ஆதரவுகள் பெருகி வருகின்றன.. அந்தவகையில், திராவிடர் விடுதலை கழகமும் தன்னுடைய ஆதரவை கோபி-சுதாகருக்கு வழங்கியிருக்கிறது.

திராவிடர் விடுதலைக் கழகத்தினர்

மேலும், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.. அதில், கோபி சுதாகர் ஆகிய இருவருக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அந்த மனுவில், "பரிதாபங்கள் யூடியூப் நடத்தி வரும் கோபி, சுதாகர் ஆகிய இருவரும் யூடியூப் சேனலில் சொசைட்டி பரிதாபங்கள் என்ற வீடியோ மூலம் ஆணவக் கொலைகளுக்கு காரணமாக உள்ளவற்றை விளக்கி, அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், கல்வி சார்ந்து முன்னேறுவோம், ஒற்றுமையாக இருப்போம் என்பதை வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வெளியான நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் சவுத்ரி தேவர் என்பவர் கோபி, சுதாகர் இருவரையும் மிரட்டும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சுர்ஜித் ஆணவக்கொலை

அதில் போன வருடம் குருபூஜை பற்றி பேசிய சவுக்கு சங்கரின் நிலை தெரியுமா? சித்தர் கிட்ட விளையாடாதே நீங்க எல்லாம் ஒரு ஆளே கிடையாது என்று வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதே வீடியோவில் சுர்ஜித்தின் ஆணவக்கொலையை ஆதரித்து பேசி சமூகப் பதட்டத்தை உருவாக்கி வருகிறார். எனவே சவுத்ரி தேவர் மீது உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதி வெறி பிடித்தவர்கள்

இதுகுறித்து பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகர தலைவர் நிர்மல் குமார் ,"கோபி சுதாகர் வெளியிட்ட வீடியோவில் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை.. ஆனால், சாதிய வெறி பிடித்தவர்கள் கோபி சுதாகரை மிரட்டுகிறார்கள்..

எம்.ஆர். ராதா சாதிகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல், கோபி சுதாகர் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.. எம் ஆர் ராதா அந்த காலத்தில் எவ்வாறு சாதிகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினாரோ அதுபோன்று தற்பொழுது கோபி சுதாகர் இருவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.. எனவே தமிழக அரசு இருவருக்கும் எம் ஆர் ராதா என்ற ஒரு விருதை உருவாக்கி அதனை வழங்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்

"பரிதாபங்கள்" யூடியூப் சேனலுக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் இறங்கியுள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+