பச்சை நிறத்தில்....ரசிகர்களின் மனதை பறிக்கும் காவியா அறிவுமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய கண்ணாடியை போட்டுக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்த காவியாவை பார்த்ததும் ரசிகர்களின் மனது தந்தனத்தான் பாடி வருகிறதாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் காவியாவா இது என்று ரசிகர்கள் அசந்து போய் இருக்கின்றனர்.

டைட்டான மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதை டைட்டாக்கி விட்டாரே என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் மருமகள்

பாண்டியன் ஸ்டோர் மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அமைதியின் சொரூபமான மருமகளாக கலக்கிக் கொண்டிருக்கும் காவியா அறிவுமணி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் மனதில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் மட்டும் தான் நான் கதாநாயகி அல்ல, சமூக வலைத்தளத்திலும் நான் யாருக்கும் சளைத்தவரல்ல என்று இவர் தினமும் போடும் போஸ்ட்கள் வைரலாக வலம் வந்து ரசிகர்களின் மனதை ஆட்டிப் படைத்து வருகிறது.

மார்டன் அழகி

மார்டன் அழகி

சீரியலில் கதாநாயகியாக மாறி இருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக மின்னிக் கொண்டிருக்கிறார். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் பெரிதாகிக்கொண்டே போகிறது. ரசிகர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது இவர் சீக்கிரத்தில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலித்து விடுவார் என்று எண்ணத் தோன்றுகிறது. சீரியல் கதாநாயகியாக இருந்தாலும் தான் ஒரு மாடல் என்பதை ரசிகர்களுக்கு நிரூபித்திருக்கிறார்.

பாரதிகண்ணம்மாவில் அறிமுகம்

பாரதிகண்ணம்மாவில் அறிமுகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இரண்டாவது தம்பி கதிரின் மனைவியாக
முல்லை கேரக்டரில் இவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு முன்பு இந்த கேரக்டரில் விஜே சித்ரா நடித்துக்கொண்டிருந்தார். திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டதும் அவருக்கு பதிலாக இவர் இந்த சீரியலில் அறிமுகமானார். இவர் இந்த சீரியலில் வருவதற்கு முன்பு வரைக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்காக இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

இதயத்துடிப்பு எகிறுது

இதயத்துடிப்பு எகிறுது

தற்போது சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகமாக ரசிக்கும் நடிகைகளில் ஒருவராக காவியா அறிவுமணி வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை தன்னுடைய ரசிகர்களாக மாற்றி இவர் ஒரு மில்லியன் பாலோவர்ஸ்களை பெற்றுவிட்டார். இந்த நிலையில் இவர் தினமும் சூட்டிங் ஸ்பாட்டில் ப்ரீயாக இருக்கும் நேரத்திலும் சரி அல்லது மாடலிங் போட்டோக்களாக இருந்தாலும் சரி தினமும் இவர் போஸ்ட் போடுவதில் கவனமாகவும் இருந்துவருகிறார். புதுமையாக இவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோக்களும் இளைஞர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்து விடுகிறது.

பச்சை வண்ணத்தில் பளபளக்குது

பச்சை வண்ணத்தில் பளபளக்குது

சீரியல் என்றால் வெள்ளித்திரையில் ரிட்டையர்ட் ஆன நடிகைகள் பலர் சீரியல் கதாநாயகியாக மாறிவிடுவார்கள் என்று நினைத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு அப்படியெல்லாம் இல்லை வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் அழகில் நாங்கள் இருக்கிறோம் என்று ஒருசில இளம் கதாநாயகிகள் இருந்து வருகின்றனர். அதில் காவியா அறிவுமணியும் ஒருவர். தற்போது இவர் விதவிதமான உடையில் எடுத்திருக்கும் இளமை ததும்பும் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் லைக் பட்டனை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+