மயிலாக மாறிய ஜூலி...இதை எதிர்பார்க்கலையே...கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: அச்சு அசலாக மயிலாக மாறி இருக்கும் ஜூலியை பார்த்ததும் ரசிகர்களின் கமெண்ட்களில் அகவி வருகின்றனர்.
மீண்டும் வித்தியாசமான போட்டோ ஷூட்டில் குதித்து இருக்கும் ஜூலிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றது.
இன்ஸ்டாகிராமில் இவர் போட்டோ வெளியீட்டு சிறிது நேரத்திற்குள் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

கலக்கும் மயில் ஜூலி
கலர்.. கலராக.. வண்ணம் பூசிக் கொண்டு.. மயில் போல மாற முயற்சித்திருக்கும் மரிய ஜூலியானா வை பார்த்து, அவரது ரசிகர்கள் வாவ்!! என்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. என்று புகழ்ந்து வந்தாலும், வழக்கம்போல் குறும்புக்கார நெட்டிசன்கள் கலர்.. கலரா.. பெயிண்ட் அடிச்சா மட்டும் உன்னை விட்டுருவோமா!? என்று கலர் கலராக கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்..

ஜல்லிக்கட்டில் அப்படி பிக்பாஸில் இப்படி
ஜல்லிக்கட்டு மெரினா போராட்டத்தின்போது தன்னுடைய வித்தியாசமான கூவுதலால்..வீரத் தமிழச்சி'என்று பெயரைப் பெற்று... கல்யாணம் செய்தால் இவரைப்போல.. ஒரு தமிழ் பெண்ணைத்..தான் கல்யாணம் செய்வோம்..! என்று அந்த நேரத்தில் இளைஞர்கள் அனைவரும் கூறும் அளவிற்கு மாஸாக..வலம் வந்து கொண்டிருந்த ஜூலியை,உங்கள வேற லெவலுக்கு..! கொண்டு போகிறோம்.. என்று விஜய் டிவி பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து கொண்டு போய்விட்டது. ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே போனதும் கேமை சிறப்பாக விளையாடுவதாக நினைத்து, இவர் செய்த உள்ளடி வேலைகளை பார்த்து இவரது இமேஜ் ஒரே ஷோவில் தோசையை திருப்பிப் போட்டார் போல் மாறியது..

இமேஜ் மாறி போச்சு
எந்த அளவிற்கு நல்ல பெயரோடு உள்ளே சென்றாரோ.. அதைவிட பலமடங்கு அதிகமாக கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு இவரை தூக்கி வைத்துக் கொண்டாடிய அதே தமிழ் ரசிகர்கள் கூட்டம்,பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளிவந்த பின்பு நேர் எதிராக மட்டம் தட்ட துவங்கினர். ஆனால் அதைப்பற்றி சற்றும் மனம் தளராமல் பல்வேறு சேனல்களில்.. சில நிகழ்ச்சிகள்.. மூலம் தன்னுடைய இமேஜை மாற்ற முயற்சி செய்தார். ஆனால் இவர் மீதான பார்வையில் நெகட்டிவ் ரேட்டிங்குகள் அதிகமாக இருந்ததால் அவரால் அந்த இமேஜை மாற்ற முடியவில்லை.

தேசிய பறவையின் கெட்டப்
இறுதியாக சமூகவலைதளங்களில் தஞ்சம் புகுந்த ஜூலி, அவ்வப்போது வித்தியாசமான போட்டோக்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்து.. திட்டிக்கொண்டே இருந்தாலும் தன்னை நெட்டிசன்கள் மறக்காதவாறு பார்த்துக்கொண்டார். எந்த கடற்கரையில் வீரத்தமிழச்சி என்று பெயர் எடுத்தாரோ..! அதே கடற்கரையில் அரைகுறை உடையுடன் போட்டோ சூட் நடத்தும் அளவிற்கு விளம்பரப் பிரியை ஆகிவிட்டார்.அத்தி பூத்தார் போல் அவ்வப்போது ஏதேனும் சமூக கருத்துடன் கூடிய போட்டோக்களையும் இவர் அப்லோட் செய்வது உண்டு. தற்பொழுது நம் நாட்டின் தேசியப் பறவையான மயிலை போன்று வண்ணம் தீட்டிக்கொண்டு.. வித்தியாசமான முறையில் இவர் போட்டோ சூட் எடுத்துள்ளார்.மிகவும் சிரமத்தோடு இந்த போட்டோக்களை எடுத்திருந்தாலும்.. அதற்கான ரிசல்ட் இவரது ரசிகர்களிடையே பாசிட்டிவாக இருந்தாலும், பிக்பாஸில் இருந்தே இவரது போஸ்ட்களை கண்டம் செய்து வரும் நெட்டிசன்கள் இதையும் விட்டு வைக்காமல் தங்கள் பங்கிற்கு நெகட்டிவ் கமெண்டுகளையே அளித்து வருகின்றனர்..
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications