சிக்கென்று...சிரிக்கும் சாக்ஷி...சிதறிப் போச்சு ரசிகர்களின் மனசாட்சி
சென்னை: சிரிக்கும் சிரிப்பாலே ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்த சாக்ஷியைப் பார்த்து இன்ஸ்டாகிராமில் சுற்றிவருகிறது ரசிகர்கள் கூட்டம்.
அடடா எப்படிப் பார்த்தாலும் அழகாய் இருக்கிறதே என்று கலாய்க்கும் நெட்டிசன்கள் கூட கவிதை பாட ஆரம்பித்து விட்டார்கள்.
இடுப்பில் கையை வைத்து மிடுக்காய் பார்க்கும் பார்வையை பார்த்ததும் பேச வார்த்தையின்றி ஹார்ட்டின்களை பறக்க விட்டு வரும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமே சிவந்து போச்சாம்.

எல்லாமே அத்துப்படி
டைட்டான கருப்புச் பேண்ட், கலக்கும் டீசர்ட்டில் அசத்தும் சாக்ஷியைப் பார்த்ததும் அழையா விருந்தாளியாக பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். சிக்கென்று இருக்கும் இவரை பார்த்ததும் பலருடைய மனதும் சிக்கி விட்டதாம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேரழகை தினமும் விதவிதமாக பார்ப்பதால் ரசிகர்களுக்கு பேரானந்தமாகத்தான் இருக்கிறாராம். மாடர்ன் உடை முதல் டிரடிஷனல் உடை வரை எல்லாமே எனக்கு அத்துப்படி என்று காலை மாலை என இரண்டு நேரமும் சமூக வலைத்தளத்தில் போஸ்ட் போட்டு ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
சினிமா கதாநாயகி என்றால் சினிமாக்களில் மட்டும்தான் வருவேன் என்று இல்லை சமூக வலைத்தளத்திலும் நான் பிஸியோ பிஸி என ரசிகர்களுக்காகவே பார்த்து பார்த்து போட்டோ சூட்களை எடுத்துக்கொண்டிருக்கும் சாக்ஷி அகர்வால் சாப்பிடுவதற்கு கூட மறந்தாலும் மறந்து விடுவார் போல ஆனால் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதற்கு மறப்பதே இல்லையாம். எப்பவும் போனை கையில் வைத்துக்கொண்டு அதிலேயே பராக்கு பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு என்டர்டைமென்ட் சாக்ஷி அகர்வால் தான். வேலை வெட்டிக்கு செல்பவர்களையும் விட்டுவிடாமல் அவர்கள் ஃப்ரீயாக இருக்கும் நேரம் பார்த்து இவர் போஸ்ட்களை தட்டிவிட்டு விடுகிறார். இவர் போஸ்ட் போட்டதும் என்ன வேலை இருந்தாலும் பரவாயில்லை என வேலையை ஒதுக்கிவிட்டு போட்டோவை ரசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்
இப்படியே எத்தனை நாளைக்கு தான் போட்டோ சூட்டிலேயே பார்த்துக்கொண்டிருப்பது சீக்கிரமாக சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வாங்க என்று ரசிகர்கள் அன்பு கட்டளைகளையும் விடுகின்றனர். ரசிகர்களின் ஆதரவினை பார்க்கும்போது இருக்கு வெள்ளித்திரையில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு தான் இன்னும் இவருக்கு சரியாக கிடைக்கவில்லை. கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் இவர் கேரக்டருக்கு தகுந்த மாதிரி கேரக்டர் அமையாததால் துணை கதாநாயகியாகவே நடித்து கொண்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் இருந்து வருகிறது.

ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
இன்ஸ்டாகிராமில் எத்தனையோ நடிகைகள் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தாலும் சாக்ஷியின் இடத்தில் யாராலும் வரமுடியவில்லை. அந்த அளவிற்கு போட்டோக்கள் ஒவ்வொன்றும் குவாலிட்டி ஆகவும் தீப்பொறியாகவும் இருந்து வருகிறது. பார்த்து பார்த்து இவர் எடுக்கும் போட்டோக்களுக்கு ரசிகர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு கமெண்ட்களையும் லைக்குகளையும் அனுப்பி வருகிறார்கள். அதுவும் கடந்த வாரம் முழுக்க மலைப்பிரதேசங்களில் சுற்றிக் கொண்டிருந்த இவர், தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பிவிட்டார். வந்த இடத்தில் ஷாப்பிங் செல்லலாம் என்று முடிவெடுத்து இருப்பார் போல, எங்கே போனாலும் அங்கே போட்டோக்களை எடுத்து விடும் இவர். ஒரு கடை வாசலில் நின்றுகொண்டு கலக்கலாக விதவிதமாக போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அந்த போட்டோஸ்கள் தான் ரசிகர்களுக்கு புத்துணர்வை கூட்டி, ஹார்ட்டின் பறந்து வருகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications