தாவணியில் தரமாக பவானி ரெட்டி...பார்த்ததும் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை: பாவாடை தாவணியில் பவானி ரெட்டியை பார்த்ததும் ரசிகர்களின் மனது பறந்து வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய மாதிரியே வந்திருக்கும் பவானிக்கு வரவேற்பு சும்மா அள்ளுது.
இத..இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்களின் லைக் பட்டன் தெறிக்குது.

வெறித்தனமான கம்பேக் தான்
பாவாடை.. தாவணியில்.. இருக்கும் பவானி ரெட்டி போட்டோக்கள், இணையத்தில் கலக்கலாக..! பவனி வந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரிய..கேப்..புக்கு பிறகு பவானி ரெட்டியை இந்த கெட்டப்பில் பார்த்த நெட்டிசன்கள்.....தாவணி போட்ட தீபாவளி..' ஆகா..! ஓகோ...! என்று புகழ்ந்து வருகின்றனர். கொஞ்ச நாளா மார்டன் காஸ்ட்யூம்ல எடுத்த போட்டோக்களையே.. போஸ்ட் போட்டு வந்த பவானி ரெட்டி போஸ்டர்களுக்கு..லைக்குகளும், கமெண்டுகளும், கொஞ்சம் முக்கி.. முக்கி..தான் வந்தது, ஆனால் தற்பொழுது இவர் தாவணி காஸ்ட்யூமில் போஸ்ட் செய்துள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் சும்மா கிர்...ர்ன்று எகிறி வருகிறது...!

குறையாத ரசிகர்களின் பாசம்
எல்லோரும் சின்னத்திரையில் நடித்துவிட்டு அதன்மூலமாக வெள்ளித்திரைக்கு திரைக்கு செல்வார்கள்.ஆனால் மாடலாக தன் வாழ்க்கையை துவங்கிய பவானி ரெட்டி அறிமுகமானதே வெள்ளித்திரையில் தான். ட்ரீம்' என்ற தெலுங்கு படத்தில் தான் முதன் முதலில் தன் முகத்தை காட்டினார். ஆனால் தெலுங்கில் அதன்பின்பு சரிவர வாய்ப்புகள் அமையாத காரணத்தால் தமிழில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.விஜய் டிவியில் 'ரெட்டைவால் குருவி'சீரியல் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், 'சின்னத்தம்பி" சீரியலில் இவர் ஏற்று நடித்த 'நந்தினி' கதாபாத்திரம் தான் இவரை பவானி ரெட்டி என்ற நடிகையாக மட்டுமின்றி நந்தினி ஆகவே இவரை நகரங்கள்.. தொட்டு கிராமம் வரை.. பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றது. சின்னத்தம்பி சீரியலுக்கும் முன்பும்..பின்பும்.. பல மொழிகளில்,பல சீரியல்களில் நடித்திருந்தாலும், சின்னத்தம்பி சீரியல் நந்தினி கதாபாத்திரம்தான் இவரை நன்கு அடையாளப்படுத்தியது.

அதுக்காக அதிகரிக்கும் ரசிகர்கள்
தன் முதல் காதல் கணவரின் தற்கொலை, மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து தன் குடும்ப நண்பர் ஆனந்தை தற்போது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் பவானி ரெட்டி,தெலுங்கு சீரியல்கள், வெப் சீரியஸ் போன்றவற்றில் பிஸியாக இருந்து வருகிறார். சோஷியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருக்கும் பவானி ரெட்டி அவ்வப்போது சாதாரண போட்டோக்கள் மட்டுமின்றி ஹாட்' போட்டோக்களையும்.. பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.கொஞ்ச நாட்களாக மார்டன் டிரஸ்ஸிலே மயக்கி வந்த பவானி ரெட்டி.. தற்பொழுது அவருக்கு மிகவும் பிடித்த பாவாடை தாவணி போட்டோக்களை போஸ்ட் செய்து...அவரை அனைவருக்கும் பிடிக்க வைத்து விட்டார்...!

அது என்ன எடுப்பா தெரியுது
பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் பற்றி பரவி வரும் வதந்தி பட்டியலில் இருக்கும் பவானி ரெட்டி... ஒருவேளை தமிழ் ரசிகர்களை கவர்வதற்காக இந்த கெட்டப்போ..!? என்று ஒரு ரசிகர் சந்தேகமாக கமெண்ட் செய்துள்ளார். ஷார்ட்ஸ்,டீசர்ட் போட்டுக்கொண்டு போட்டோக்களை போடுவதைவிட, புரட்டாசி.. மாதம் அதுவுமாக இந்த மாதிரி போட்டோக்களை போடுவதுதான்., பார்ப்பவர்கள் கண்ணுக்கும், உடம்புக்கும்.., நல்லது என்று பக்தி பழமாய் மாறி நன்றி சொல்லி இருக்கிறார் ஒரு நெட்டிசன். எது எப்படியோ..! "தாவணியில் தரமாக தான் இருக்கிறார் பவானி ரெட்டி".."எல்லோரும் கொடுப்போம் லைக்குகளை அள்ளி கொட்டி"..
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications