இரு கைப்பிடி அரிசியை கஞ்சியாக்கி! தலை வாழை இலையில் காதல், கவிதைக்கு விருந்து! சினேகன் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிஞர் சினேகன்- நடிகை கன்னிகா தம்பதியின் இரட்டை பெண் குழந்தைகளான காதல், கவிதை ஆகியோருக்கு இன்று அரிசி கஞ்சி முதல் உணவாக கொடுக்கப்பட்டது. இதற்காக அந்த இரு குழந்தைகளுக்கும் எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து அழகான புத்தாடை அணிவித்து வாழை இலையில் உணவு வைத்து ஊட்டிவிடப்பட்டது.

சினேகன், கன்னிகா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பெயர் வைத்தார்.

snehan kannika television

அவர்தான் காதல், கவிதை என இரு பெயரை சூட்டினார். அன்று முதல் இருவரும் காதல், கவிதை என அழைக்கப்பட்டு அவர்கள் செய்யும் சிறிய சிறிய குறும்புகளை வீடியோவாக எடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்குழந்தைகளுக்கு குலதெய்வத்தின் கோயிலில் மொட்டை அடிக்கப்பட்டு வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.

6 மாதங்கள்

இந்த நிலையில் தற்போது 6 மாதங்கள் ஆகும் நிலையில் அக்குழந்தைகளுக்கு முதல் உணவை அளித்தனர். அதாவது குழந்தை பிறக்கும் போது முதல் ஒரு வயது வரை தாய்ப்பால்தான் சிறந்தது என மருத்துவர்கள் சொல்வது வழக்கம்.

தாய்ப்பால்

அந்த வகையில் தாய்ப்பால் அதிகம் சுரந்தால் அவர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை வழங்கலாம். வெளியே வேலைக்குச் செல்லும் போதெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பாலை பம்ப் செய்து வைத்துவிட்டு செல்வதும் அதை குழந்தைகளுக்கு கேர் டேக்கரோ அல்லது உறவினர்களோ கொடுப்பது வழக்கம்.

எளிய வகை உணவுகள்

இதிலும் பெரும்பாலும் குழந்தைகளுக்கு நாளாக நாளாக குடல் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானதாக இருக்காது. எனவே 6 மாதம் முதல் ஏதாவது எளிய வகை உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டியது கட்டாயம்.

இயற்கை உணவுகள்

அதற்காக டின்களில் அடைக்கப்பட்டிருக்கும் பவுடரை வெந்நீரில் குழைத்து கொடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக நாம் வீட்டிலேயே சில உணவுகளை தயார் செய்யலாம். அதாவது கேழ்வரகை கழுவி முளை கட்டி வெயிலில் காய வைத்து அத்துடன் பாதாம், முந்திரி, ஏலக்காய் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு அவற்றை சுடுநீரில் வேக விட்டு குழந்தைகளுக்கு உப்பு அல்லது சர்க்கரை போட்டு கொடுக்கலாம்.

அரிசி கஞ்சி

மேலும் அரிசி கஞ்சியை கொடுக்கலாம். அரிசியுடன் சீரகம், மிளகு, உப்பு சேர்த்து ரவை பதத்திற்கு உடைத்து வைக்க வேண்டும். அதை சுடுநீரில் வேக வைத்து ஆறியவுடன் கொடுக்கலாம்.

குக்கரில் குழைய வைத்து

இல்லாவிட்டால் சாதத்தை குக்கரில் வைத்து நன்கு குழைத்து ருசிக்கு உப்பு சேர்த்து சூடு ஆறியவுடன் அதை கொடுக்கலாம். இந்த நிலையில் கவிஞர் சினேகனின் குழந்தைகள் காதல், கவிதை ஆகியோருக்கு 6 மாதங்கள் ஆன நிலையில் அவர்களுக்கு இன்று முதல் முறையாக வெளி உணவை (அதாவது தாய்ப்பால் அல்லாத உணவு) கொடுத்துள்ளனர்.

கைப்பிடி அரிசி

இதற்காக சினேகன் இருவருக்கும் இரு கைப்பிடி அரிசியை கழுவி குக்கரில் போட்டு வேகவைத்து மசித்து எடுத்துக் கொண்டார். மேலும் இரு குழந்தைகளுக்கும் எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்துவிட்டு பின்னர் அவர்களுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டது.

சட்டையில் பெயர்

அந்த பாவாடை சட்டையில் காதல், கவிதை என எம்ப்ராய்டரி போடப்பட்டிருந்தது. இதையடுத்து தலை வாழை இலையில் தண்ணீர் தெளித்து சிறிது அரிசி கஞ்சியை போட்டு சினேகனும், கன்னிகாவும் இரு குழந்தைகளுக்கு ஊட்டி விடுகிறார்கள். அதில் காதல் சமர்த்தாக சாப்பிடுகிறாள். ஆனால் கவிதைதான் உணவை வெளியே தள்ளி சேட்டை செய்கிறாள்.

மருத்துவர்கள் அறிவுரை

எப்போதும் புதிய உணவை கொடுத்தால் குழந்தை வெளியே தள்ளத்தான் செய்யும். ஆனால் தினமும் டேஸ்ட் செய்ய வைக்க கொடுத்துக் கொண்டே இருப்பதுதான் நல்லது என்கிறார் மருத்துவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+