விஜய் டிவி சீரியல் நடிகருக்கு நடந்த விபத்து.. வெளியான மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சபரிக்கு திடீரென விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் அவருடைய கால்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அதோடு உடம்பிலும் சில இடங்களில் கட்டு போடப்பட்டு இருக்கும் புகைப்படங்களை சபரி தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிந்திருக்கிறார்.

விஜய் டிவியில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர்களாக இருக்கின்றனர். காரணம் ஒரு சீரியலில் நடிக்கும் கதாநாயகன் கதாநாயகி மற்ற நிகழ்ச்சிகளிலும் கெஸ்ட் ஆக கலந்து கொள்கிறார்கள். அதிலும் ஸ்டார் மியூசிக், அது இது எது என்று பல நிகழ்ச்சிகளில் விஜய் டிவி ஹீரோ ஹீரோயினி தான் ஸ்பெஷல் கெஸ்ட் ஆக இருக்கிறார்கள். அதுபோல சோசியல் மீடியாக்களிலும் இந்த நடிகர்கள் பிரபலமாக இருக்கிறார்கள்.

Vijay TV Sabari

சோசியல் மீடியா பிரபலங்கள்

இதனால் இவர்கள் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமான முகமாக மாறிவிடுகிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகர் சபரி. சபரி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரோஸ்ட் செய்யும் நிகழ்ச்சியை இவர் தான் தொகுத்து வழங்கியிருந்தார். பொன்னி சீரியலில் கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருந்தார். அந்த சீரியலில் சபரிக்கு ஜோடியாக நடிகை வைஷ்ணவி நடித்திருந்தார்.

பொன்னி சீரியல் நடிகருக்கு விபத்து

நடிகை வைஷ்ணவி சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் வெற்றி வசந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்களுடைய திருமண பங்க்ஷனில் சபரி தான் முன் நின்று நடத்தி வைத்திருந்தார். தன்னுடைய நண்பன் என்று பல இடங்களிலும் வைஷ்ணவி சபரியை குறிப்பிட்டு வருகிறார். அதுபோல சபரி சோசியல் மீடியாவில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி தொகுப்பாளர்

சமீபத்தில் கூட மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா உடன் வீடியோ வெளியிட்டு இருந்தார். அப்போது ஒரு நெட்டிசன் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு கூட ஏன் எப்படி எல்லாம் கேள்வி கேக்குறீங்க என்று விரக்தியாக போஸ்ட் போட்டிருந்தார். சமீபத்தில் தான் பொன்னி சீரியல் முடிவடைந்தது ஆனாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும், தொகுப்பாளராகவும் கலந்து கொண்டிருக்கும் சபரிக்கு திடீரென விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

Vijay TV Sabari

நடிகருக்கு விபத்து

விபத்தில் சபரியின் கால் எலும்பு உடைந்து இருக்கிறது. அதோடு உடம்பிலும் சில இடங்களில் அடிபட்டு இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சபரி அந்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அவருடைய உடல்நிலை குறித்து கேள்வி கேட்டு வரும் ரசிகர்களுக்கு அதில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

நடிகர் சபரி பதிவு

அதில்," என் உடல்நிலை குறித்து எனக்கே நிறைய கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நான் நலமாக இருக்கிறேன். விரைவில் திரும்பி வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன். ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்போது எலும்பில் ஒரு பிளேட் மாட்டப்பட்டிருக்கிறது. என்னை பற்றி நீங்கள் இதுவரைக்கும் கேட்ட கேள்விகளுக்கு என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை, உங்களுடைய பிரார்த்தனை எனக்கு தேவை என்று சபரி குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+