கல்யாண பங்க்ஷன்.. பட்டு புடவையில் சந்தோஷமாக பதிவு வெளியிட்ட டிடி.. குவியுது வாழ்த்து
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவரான டிடி ( திவ்யதர்ஷினி) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டுப்புடவை கட்டி தான் எடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய வீட்டில் என்ன விசேஷம் என்று டிடி பகிர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளிகள் என்று சொன்னதுமே ஒரு சிலருடைய முகம் டக் என்று மனதிற்கு வரும். அதில் கண்டிப்பாக டிடியில் முகமும் இருக்கும். டிடி பல வருடங்களாக சின்னத்திரையில் பணியாற்றி இருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக அறிமுகம் ஆகும் போது இவருடைய ஸ்டைல் பலருடைய மனதைக் கவர்ந்தது. அதற்குப் பிறகு விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிகள் எடுத்தாலும் அங்கு டிடி தான் நிறைந்திருந்தார்.

டிடியின் வருத்தம்
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு முட்டி வலி வந்ததால் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். அப்போது கூட அவர் உருக்கமாக பேசிய வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆனது. தொகுப்பாளனியாக இருப்பவர்கள் தொடர்ந்து பல மணி நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பதால் முட்டி வலி வருகிறது. எனக்கும் அது போல தான் ஆரம்பத்தில் முட்டி வலி வந்தது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது ஆனால் அந்த சிகிச்சை தவறாக போய்விட அது எனக்கு மேலும் வலியை ஏற்படுத்தியது, அதற்காக அடுத்த சிகிச்சை செய்யப்பட்டது ஆனாலும் கால் வலி குறைந்த பாடு இல்லை. இப்போது மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது என்று டிடி பேசிய வீடியோக்களும் வைரலானது.
வேண்டுகோள்
அதோடு டிடி தனக்கு வாய்ப்பு கொடுப்பவர்களிடம் அதிக நேரம் நின்று கொண்டு என்னால் வேலை செய்ய முடியாது அமர்ந்து இருந்து வேலை செய்வது போல அமைத்து தர முடியுமா என்று கேட்டிருக்கிறார் ஆனால் அவர்கள் அதற்கு முடியாது என்று சொல்லிவிட்டார்கள் அதனால் இப்போத நான் எந்த சேனல்களிலும் வேலை பார்க்கவில்லை என்று டிடி பேசி இருந்தார்.
விவாகரத்து
அந்த நேரத்தில் பலரும் தொகுப்பாளிகளுக்கும் அமர்வதற்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர். அது போல டிடி சமீபத்தில் சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பரையே காதலித்து திருமணம் செய்து இருந்தார். அவருடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய் டிவி மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் டிடியின் திருமண வாழ்க்கை ஒரு வருடத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.
புடவையில் புகைப்படங்கள்
டி.டி.யும் அவருடைய கணவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இப்போது டிடி தன்னுடைய குடும்பத்தோடு தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் பட்டு புடவை கட்டி சில புகைப்படங்களை சொல்லி மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவுக்கு எங்கள் குடும்பத்தில் நடந்த கல்யாண பங்க்ஷனில் நான் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் என்று கூறியிருக்கிறார்.
டிடியின் பதிவு
மேலும் அந்த பதிவில், ஒரு திருமணம் நடக்கும் இடம் முழு குடும்பத்தையும் உற்சாகத்துடன் தயாராக இருக்க வைத்திருக்கிறது. திருமணத்திற்காக நீங்களே ஷாப்பிங் செய்து, அதற்கு மேட்ச் ஆன அணிகலன்கள் செலக்ட் செய்து அந்த நாளுக்காக காத்திருப்போம். அந்த நாளிலா இருவரின் கனவுகள் வாழ்க்கையில் ஒன்றாக இணைவதையும் பார்க்க முடிகிறது, என்று டிடி கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் டிடிக்கு ஹார்டின் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications