உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ போட்டுக்கங்க.. செல்லமாக சொல்லிய ரச்சிதா!
சென்னை : சேலையில் சொக்க வைப்பவர் ரச்சிதா மகாலட்சுமி. உங்களுக்குப் பிடிச்ச உடை எதுவோ அதை போட்டுக்கங்க என்று அன்புடன் தனது ரசிகர்களுக்கும் சொல்லியுள்ளார் ரச்சிதா மகாலட்சுமி.
ரச்சிதா மகாலட்சுமி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது அவரது உதட்டோர மச்சம்தான். அடுத்து நினைவுக்கு வருவது அவர் கட்டும் சேலைகள். அத்தனை அம்சமாக இருப்பார். பெயருக்கேற்ப மகாலட்சுமி போலவே இருப்பார்.
இப்போதும் கூட அப்படித்தான் சேலையில் கலக்கலான போட்டோஷூட்டே எடுத்து பரபரக்க வைத்துள்ளார் ரசிகர்கள். ரசிகர்களும் பரவசமாக அதைப் பார்த்து ரசித்துக் கொண்டுள்ளனர்.

எல்லாமே அத்துப்படி தான்
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளும் தனக்கு தெரிந்ததுதான் எது வந்தாலும் ஒரு கை பார்த்து விடுவேன் என அசால்ட்டாக கெத்து காட்டும் ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த சீரியலில் கிராமத்து இளவரசியாக வலம் வந்து கொண்டிருப்பார். கருப்பான அழகியாக இருந்தாலும் இவருடைய நிறத்தினால் இவர் படும் இன்னல்களையும், அவமானங்களையும் தத்துரூபமாக வெளிக்காட்டி இருப்பார். என்னதான் வசதியான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அழகில் எல்லோருமே பாரபட்சம் காட்ட தான் செய்கிறார்கள் என்று முதல் சீரியலில் நடித்து பிரபலமாகிவிட்டார்.

கைகோர்த்த காதல்
பிரிவோம் சந்திப்போம் சீரியலில் முதலில் இவர்தான் ஹீரோயினியாக பாசிட்டிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தாலும் பின்பு தன்னுடைய தோழியே தான் விரும்பும் நபரை திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு வில்லியாக மாறிவிட்டார். சீரியலில் தான் இவருடைய காதலனை தோழி திருமணம் செய்து கொண்டாரே தவிர நிஜத்தில் இவர்தான் இவருடைய மனம் கவர்ந்த அதே இளவரசனை கரம் பிடித்து கொண்டார். இந்த சீரியலில் இவருடன் ஹீரோவாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனத்தை செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர் .

கருப்பு அழகி தான்
அதற்கு பிறகு ரச்சிதா ஒரு சில திரைப்படங்களிலும் ஹீரோயினியாக நடித்துவிட்டார். ஆனால் சின்னத்திரையில் கிடைக்கும் வரவேற்பு சினிமாக்களில் இல்லை என்பதால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி வந்துவிட்டார். அதுவும் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது என்றால் சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த சீரியலுக்கு பிறகு இவர் லெவல் மாறிவிட்டது. முதல் சீரியலில் பார்த்த ரசிகர்கள் இப்போ இவரைப் பார்த்ததும் அவரா இவர் என்று கேட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ஜோதி கேரக்டரில் நடித்திருந்தது இவர்தான் என்று சொன்னால் நம்பவே மாட்டேங்கிறார்கள் அந்த அளவிற்கு வித்தியாசத்தை காட்டியிருக்கிறார்.

சத்தியமா இது தான் உண்மையான கலரு
ஒருசிலர் இப்போகூட கருப்பாக இருந்த ரச்சிதா இப்படி மாறிவிட்டார் என்று இவரைப் பற்றி கூறி வருகின்றனர். ஆனால் அது முதல் சீரியலுக்காக கருப்பாக மேக்கப் போட்டுக்கொண்டு தான் இவர் நடித்தாராம். ஆனால் தற்போது சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு இவர் கால் வைக்கும் இடமெல்லாம் பெரிய ஹிட்டுதான். ஹோம்லி கேரக்டர் என்றாலே உடனே கூப்பிடு ரச்சிதாவை என்று இவருடைய முகம் தான் பலருக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அந்த அளவிற்கு டைரக்டர்கள் இடமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். ரசிகர்களும் தொடர்ந்து இவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

வெற்றி நடை தொடர்கிறது
தற்போது இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2வில் மகா கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முதலில் இவர் நடிக்கிறார் என்று சொன்னதும் அவருடைய ரசிகர்கள் செம ஹாப்பி. ஆனால் அதற்கு முன்பு இதே சீரியலில் சீசன் ஒன்றில் நடித்த நடிகைகளை நடிக்க வேண்டும். வேறு யார் வந்தாலும் எங்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது என்று கூறிக் கொண்டு இருந்த ரசிகர்கள், இவரைப் பார்த்ததும் ஓகே சொல்லிவிட்டனர். சீரியலில பிசியாக இருந்தாலும் கூட விளம்பரங்களையும் விடுவதில்லை ரச்சிதா. அதிலும் அவ்வப்போது தலை காட்டி விடுகிறார். இவருக்கு இருக்கும் கிரேஸ் கிராக்கி விளம்பரங்களுக்கு நல்லாவே ஒர்க் அவுட ஆவதால் அதுவும் ஒரு பக்கம் குவியத்தான் செய்கிறது. இப்போதும் கூட ஒரு கமர்ஷியலில் தோன்றவுள்ளார் ரச்சிதா.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications