குடும்பத்துக்குள் நடந்த சிக்கல்.. சரத்குமார் செய்த செயல்! அவர் மட்டும் இல்லனா, நெகிழ்ந்த ராதிகா மகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ராதிகாவின் மகளான ரயான் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நடிகை ராதிகா சரத்குமாரை திருமணம் செய்த பிறகு தன்னுடைய வீட்டில் என்னவெல்லாம் பிரச்சனை நடந்தது, சரத்குமார் தங்கள் குடும்பத்திற்காக செய்த செயல் என பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை ராதிகாவின் முதல் கணவரின் மகளான ரயான் சமீபத்தில் அவள் விகடன் youtube சேனலுக்கு கொடுத்த பேட்டியில் சரத்குமார் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் சரத்குமாரை தான் எப்படி தன்னுடைய அப்பாவாக ஏற்றுக் கொண்டேன், தனக்கும் அவருக்கும் உள்ள உறவு என்ன என்பது குறித்து பேசி இருக்கிறார்.

Radhika Sarathkumar Rajinikanth

சிறந்த அப்பா

அதில், நான் சின்ன வயதிலிருந்து அப்பா (சரத்குமாரை) பார்த்து இருக்கிறேன். அம்மாவோட பிரண்டா அவரை நிறைய முறை பார்த்திருக்கிறேன். கார்கில் டைமில் எல்லாரும் சேர்ந்து ஒரு ப்ரோக்ராம் செய்தாங்க. அதிலிருந்து எனக்கு அப்பாவை நல்லா தெரியும். ஆனா அந்த நேரத்தில் அவர்தான் என்னுடைய அப்பாவாக வரப்போறாருன்னு எங்களுக்கு தெரியாது.

அப்பாவின் அன்பு

நான் சின்ன பெண்ணாக இருந்தாலும் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா அவரை ஏற்றுக்கொள்ள முடிந்தது. சின்ன வயசிலிருந்து அப்பா என் மேல ரொம்ப பாசமா அக்கறையா இருப்பாரு. அதனால ஏதாவது ஒரு விஷயத்தை பேசணும்னா அவரிடம் தான் நான் பேசுவேன். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு எந்த குழப்பம் வந்தாலும் அட்வைஸ் அப்பாவிடம் தான் கேட்பேன்.

Radhika Sarathkumar Rajinikanth

நல்ல நண்பன்

நான் காதலிச்ச விஷயத்தை கூட குடும்பத்திடம் சொல்ல ரொம்ப பயப்பட்டு முதலில் அப்பாவிடம் தான் சொன்னேன். எனக்கு எல்லாமே என்னுடைய அப்பா தான். சின்ன வயசுல எனக்கு கிடைக்க வேண்டிய அன்பு எல்லாமே அவர்கிட்ட இருந்து கிடைச்சது. அவர் என்னை பார்த்த நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் எனக்காக சப்போர்ட் மட்டும்தான் பண்ணுகிறார்.

குறையாத தன்னம்பிக்கை

நான் அப்பாவுடைய வளர்ச்சியையும் பார்த்திருக்கிறேன். அவருடைய வீழ்ச்சியையும் பார்த்திருக்கிறேன். தான் விழுந்துவிட்டால் அதில் வருந்தி அப்படியே உட்கார்ந்து விடாமல் மீண்டும் வந்ததையும் பார்த்து இருக்கிறேன். அவர் என்னதான் என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்று சொல்வாரு. அவருக்கு சக்சஸ் நடந்து விட்டால் ஆடுறதும் கிடையாது, ஃபெயிலியர் ஆனால் அழுறதும் கிடையாது. அதையெல்லாம் நான் அவரிடம் இருந்து கத்துக்கிட்டேன்.

Radhika Sarathkumar Rajinikanth

அம்மா பாசம்

எனக்கு ரெண்டு குழந்தைங்க. இரண்டு பேரும் சீக்கிரம் பிறந்துட்டாங்க. அவங்க பொறந்த சமயத்துல இருந்து பிரச்சனை வீட்டில் ஓடிட்டு இருந்தது. என்னுடைய பொண்ணு என்னுடைய அம்மாவை போலத்தான் ஏற்கனவே ஒரு ராதிகா குடும்பத்தில் இருக்காங்க மீண்டும் ஒரு ராதிகாவா என்று எல்லோரும் சொல்லுவோம். ஆனால் நான் குழந்தை பிறப்பதற்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டேன். எனக்கு பொண்ணு பிறந்தா என்னுடைய அம்மா பெயரை தான் வைப்பேன்னு.

Radhika Sarathkumar Rajinikanth

சின்ன ராதிகா

நானும் என்னுடைய அம்மாவும் ரொம்ப கிளோஸ். அந்த பாசம் எனக்கும் என்னுடைய பொண்ணுக்கும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சரத்குமார் மட்டுமல்லாமல் வரலட்சுமி, பூஜா எல்லோருமே எங்களுக்கு உறுதுணையாக தான் இருக்கிறார்கள். என்னுடைய தம்பி ராகுல் எனக்காக பல விஷயங்களையும் செய்வான். அவனை குழந்தையாக பார்த்தேன் இப்போ வளர்ந்து விட்டான். ஆனாலும் அவன் எங்களுக்கு குழந்தை தான் என்று அந்த பேட்டியில் பல விஷயங்களை ரயான் பேசி இருக்கிறார்.

Radhika Sarathkumar Rajinikanth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+