புது சந்தியா வந்த முதல் நாளே இப்படி ஒரு பிரச்சனையா? அத்தனைக்கும் காரணம் மாமியார் தானா?
ராஜா ராணி சீசன் 2 சீரியலில் புது சந்தியாவாக ஆஷா கவுடா அறிமுகமாகி இருக்கிறார்.
சென்னை: ராஜா ராணி 2 சீரியலில் இன்று சந்தியாவாக ஆஷா கவுடா அறிமுகம் ஆகிறார்.
புது எஸ் பி வருவதால் இன்று சீக்கிரமாக போக வேண்டும் என்று சந்தியா கிளம்பி வருகிறார்.
வேலைக்கு செல்வதற்கு முன்பு மீன் வாங்கி வர வேண்டும் என்று சிவகாமி கூறுகிறார்.
வீட்டில் மீன் குழம்பு வைத்து விட்டு வேலைக்கு செல்லும் சந்தியாவிற்கு புது பிரச்சனை காத்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமையும் வேலை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்திலேயே இவருக்கு பதில் இவர் என இதுவரைக்கும் சந்தியாவாக நடித்து வந்த ரியாவுக்கு பதிலாக ஆஷா கவுடா அறிமுகம் ஆகிறார். ஞாயிற்றுக்கிழமை சந்தியா யூனிஃபார்மில் கிளம்பி வர சரவணன் இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை கூடவா வேலை இருக்கு என்று கேட்க, இன்று எஸ்.பி ரவுண்ட்ஸ் வருவதால் சீக்கிரமாக செல்ல வேண்டும். எங்களுக்கு லீவ் எல்லாம் கிடையாது. எல்லா நாளும் வேலை தான். அவசியமாக லீவ் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம் ஆனால் அதற்கும் நிறைய நிபந்தனைகள் இருக்கிறது என்று விளக்கம் கொடுத்துவிட்டு வேலைக்கு கிளம்பி வெளியே வருகிறார்.

வேலை வாங்கும் சிவகாமி
ஞாயிற்றுக்கிழமையும் யூனிபார்மில் சந்தியாவை பார்த்த சிவகாமி சந்தியாவை வேலை வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். ஏற்கனவே ஆதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று நான்வெஜ் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்க சந்தியா வெளியே வந்ததும் அவரை மார்க்கெட்டுக்கு சென்று மீன் வாங்கி வர சொல்கிறார். அதற்கு சரி என்று சந்தியா கிளம்பி போக ,சரவணன் நான் போய் வாங்கி வருகிறேன் என்று சொல்கிறார். அதெல்லாம் வேண்டாம் அவள் எப்போது இதெல்லாம் கத்துக்க போற என்று மறுப்பு தெரிவித்து சந்தியாவை மட்டும் அனுப்பி வைக்கிறார்.

சந்தியாவை பார்த்த எஸ் பி
மார்க்கெட்டில் மீனை வாங்கி கொண்டு சந்தியா அவசர அவசரமாக வர எதிரே வந்த ஒரு பைக் மீது மோதி விடுகிறார். கையில் இருந்த மீன் எல்லாம்
கீழே விழுந்துவிட பைக்கில் வந்த நபர் நீங்கள் ஒரு போலீசாக இருந்து விட்டு இப்படி எல்லாம் செய்யலாமா என்று கேட்க, சாரி சொல்லிவிட்டு கீழே விழுந்த மீன்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது எஸ்பி போலீஸ் வண்டியில் சந்தியாவின் நடவடிக்கையை பார்த்துக் கொண்டே செல்கிறார்.

மீன் குழம்பு வச்சாச்சி
பிறகு மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த மீனை சந்தியா வீட்டில் கொடுத்துவிட்டு கிளம்ப, அதுக்குள்ள எங்க போற அர்ச்சனாவும் ஜெஸ்ஸியும் வெளியே போயிருக்காங்க, நீதான் மீன் குழம்பு இன்னைக்கு வைக்கணும். மீன் குழம்பு வச்சிட்டு போ என்று சொல்ல, சந்தியா அதற்கு எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். பிறகு சரவணன் சந்தியாவை கிச்சனுக்கு அழைத்து சென்று ஏற்கனவே குழம்பு வச்சாச்சி மீனையும் போட்டு கொதிக்க வச்சா மட்டும் போதும் என சொல்ல, மீனை கழுவி சந்தியா குழம்பில் போட்டு கொதிக்க வைத்து மீன் குழம்பை செய்து முடிக்கிறார். பிறகு சிவகாமியை அழைத்து மீன் குழம்பை ருசி பார்க்க குழம்பு அருமையாக இருக்கிறது என்று சந்தியாவை பாராட்டி வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.

பக்குவப்படுத்துறாங்களாம்
அதற்குப் பிறகு சிவகாமியின் கணவர் ரவி நீ வேணும்னு தானே சந்தியாவை வேலை வாங்குன என கேட்க, வீட்ல இவ இல்லாம ரெண்டு மருமகள்கள் இருக்கிறாங்க. இவ பாட்டுக்கு டிரஸ் மாத்திக்கிட்டு வேலைக்கு போயிட்டா, இவளை பார்த்து மத்தவங்களும் வேலை செய்ய மாட்டாங்க. இப்படி பண்ணா தான் அவங்களுக்கும் பக்குவப்படுவார்கள் என்று சிவகாமி கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications