லிவிங்ஸ்டன் வீட்டு பூஜை ரூமில் ரஜினிகாந்த்.. பணக்கார நடிகையின் நிலைமை? ஒரு நொடி ரஜினி யோசிக்கல! வாவ்
சென்னை: ரசிகர் மன்றம் மூலம் எண்ணற்ற உதவிகளை, வெள்ள நிவாரண பணிகள், நலத்திட்ட உதவிகளை ரஜினிகாந்த் செய்தாலும், மற்றவர்களுக்கு அதிகம் செலவு செய்ய மாட்டார், நிறைய கணக்கு பார்ப்பார் என்ற விமர்சனமும் ரஜினி மீது உண்டு. ஆனால், திரையுலகிலும் பலருக்கும் மருத்துவ வசதி, கல்வி வசதியையும் ரஜினி செய்துள்ளார். அந்தவகையில், நடிகர் லிவிங்ஸ்டன், நடிகை ரமா பிரபாவுக்கு, அவர்களது நெருக்கடி சூழலில் ரஜினிகாந்த் உதவியிருக்கிறார். இதற்கு நன்றி நடிகர், நடிகைகளின் சமீபத்தில் தனித்தனியாக பேட்டி தந்திருந்தனர்.. அந்த பேட்டியைதான், ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு, பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மனைவிக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட்டிருந்ததாம்.. இதனை சரிசெய்ய கிட்டத்தட்ட 15 லட்சம் தேவைப்பட்டிருக்கிறது.

இதை பற்றி லிவிங்ஸ்டன், "லால் சலாம்" ஷூட்டிங்கில் இருந்தபோது தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்... ஏற்கனவே கடனில் தத்தளித்து வரும் நிலையில், 15 லட்சத்துக்கு எங்கே போவேன்? எப்படி இவ்வளவு பணத்தை திரட்ட முடியும்? என்றும் புலம்பியிருக்கிறார்.
லிவிங்ஸ்டன்
இந்த விஷயம் ரஜினி காதுக்கு சென்றதாம்.. அப்போது லிவிங்ஸ்டனுடன் பேசி உடனே 15 லட்சத்தை தந்தாராம்.. அதுமட்டுமல்ல, இன்னும் தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கும்படியும் சொல்லியிருக்கிறார்.. இதைக்கேட்டதுமே லிவிங்ஸ்டன் திக்குமுக்காடி போய்விட்டாராம்.
சமீபத்தில் நடிகர் லிவிங்ஸ்டன், ரஜினி பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.. அதில் ‛‛என்னுடைய மனைவி இன்று உயிரோடு இருக்க காரணமே ரஜினி சார் தான். பூஜைறையில் அவர் படத்தையும் வைத்திருக்கிறோம். அவர் தான் எங்களுக்கு கடவுள்.
நான் உனக்கு அண்ணன் மாதிரி.. இந்தா வாங்கிக்கோ என்று பணம் கொடுத்தார். அவர் ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை கட்டப் போகிறார் என்றும் கேள்விப்பட்டேன். ரொம்பவும் நல்ல மனசுக்காரர்" என்று பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மூத்த நடிகை ரமாபிரபா
அதேபோல, மூத்த நடிகை ரமா பிரபாவுக்கும் ஒரு நெருக்கடியான சூழலில் ரஜினி உதவினாராம்.. நடிப்பு திறமையால் 1400 படங்களில் நடித்து முடித்தவர் ரமா பிரபா..
சர்வர் சுந்தரம், சாந்தி நிலையம், பட்டணத்தில் பூதம், வசந்த மாளிகை போன்ற பல படங்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவை.. காமெடி நடிகையாகவே அறியப்பட்டு, தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.. தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நடிகர் சரத்பாபு வயது
4 வயது குறைவான, மறைந்த நடிகர் சரத்பாபுவை காதலித்து திருமணம் செய்தார்.. பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார்.. எனினம், ஏராளமான சிக்கல்களில் சிக்கிவிட்டார்..
இதுகுறித்து சேனல் ஒன்றுக்கு ரமா பிரபா சமீபத்தில் பேட்டி தந்திருந்தார்.. அதில், "ரஜினிகாந்த் இவ்வளவு புகழின் உச்சிக்கு போனாலும், எளிமையாகவும், அடக்கமாகவும் இருக்கிறார்... யாராவது உதவி கேட்டு வந்தால், அவர்களை வெறும் கையோடு அனுப்புவதில்லை.. நானும் அவரிடம் உதவி பெற்றுள்ளேன்.
ஒருத்தரை நம்பி நான் நாசமாக போயிட்டேன்.. சொத்துகளை எல்லாம் இழந்து கட்டிய துணியுடன் ரோட்டில் நின்றேன்.. அப்போதுதான், என்னசெய்வதன்று தெரியாமல் ரஜினிகாந்த் வீட்டிற்கு போனேன்.. வழி செலவுக்கு பணம் தந்தால் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்து அவரிடம் சென்றேன்.
நன்றிக்கடன் பட்டிருப்பேன்
ஆனால், என் நிலைமையை பார்த்து வருத்தப்பட்ட ரஜினி, உடனே தன்னிடமிருந்த 40 ஆயிரம் ரூபாயை எடுத்து தந்துவிட்டார்.. 80'கள் காலத்தில், இந்த 40,000 ரூபாய் என்பது பெரிய விஷயம்.. ஒரு நிமிஷம்கூட யோசிக்காமல், தன்னிடமிருந்த பணத்தை அப்படியே எடுத்து தந்துவிட்டார்.. அவர் செய்த உதவியால் பல பிரச்சனைகளை தீர்த்துவிட்டேன்.. . ரஜினிகாந்த்துக்கு எப்போதுமே நான் கடன்பட்டிருப்பேன்" என்று கூறியிருந்தார்.
ரமா பிரபா, லிவிங்ஸ்டன் தந்துள்ள இந்த பேட்டிகளைதான் ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.. இதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் என்றும் கேப்ஷனை தந்து வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications